Published:Updated:

மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க!

மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க!
பிரீமியம் ஸ்டோரி
மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க!

கே.ஜி.மணிகண்டன், படங்கள்: மீ.நிவேதன்

மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க!

கே.ஜி.மணிகண்டன், படங்கள்: மீ.நிவேதன்

Published:Updated:
மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க!
பிரீமியம் ஸ்டோரி
மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க!

‘`டேய், அப்பா டைரக்டர்டா, அடிக்கலாம் கூடாது’’ எனக் குழந்தைகளிடம் கொஞ்சிக்கொண்டிருக்கிறார் சுசீந்திரன். முதுகில் ஒருவனும் இடுப்பில் ஒருவனுமாய் இரண்டு குழந்தைகளும் மொட்டைமாடிப் பரப்பில் அப்பாவை டார்ச்சர் செய்து கொண்டிருக்க, இருவரின் இறுக்கமான பிடியிலிருந்தும் ஒருவழியாய் மீண்டு வரும் இயக்குநர் சுசீந்திரன், மனைவி ரேணுகாவை அறிமுகப்படுத்துகிறார்.

‘`மூத்தவன் ஹெர்ஷன், இளையவன் தர்ஷன். ரொம்பச் சேட்டை. இன்னும் கொஞ்சநேரம் இங்கே இருந்தீங்கன்னா, ரெண்டுபேரும் உங்க உயிரை உருவிக் கையில கொடுத்துடுவாங்க.’’ என அப்பா சுசீந்திரன் குழந்தைகளின் சேட்டைகளை வர்ணித்துக் கொண்டிருக்க, திருவிழாவுக்குத் தயாராகும் மனநிலையோடு, அம்மா ரேணுகாவின் பிடியில் ஒருவரும், அப்பா சுசீந்திரனின் பிடியில் ஒருவருமாய் ஐக்கியமாகிக் கொள்கிறார்கள்.

மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க!

“ஒரு லீவுலதான் இவரை முதல் முதல்ல சந்திச்சேன். சொந்தக்காரர் தான். ஆனாலும், முன்னப்பின்ன இவரைப் பார்த்ததில்லை. வீட்டுல மாப்பிள்ளை பார்த்துட்டு, ‘ஓகேயா’னு கேட்டாங்க, ‘ஓகே’னு சொல்லிட்டேன். அவ்ளோதான், இதுக்குமேல கல்யாணக் கதையைச் சொல்லமாட்டேன்’’ என மனைவி ரேணுகா அடம்பிடிக்க, முழுக்கதையும் சொல்கிறார், இயக்குநர் சுசீந்திரன்.

“ஆக்சுவலா, எங்க அப்பாவுக்கு ரெண்டு கல்யாணம். எங்க அம்மா, அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டது பிடிக்காம, கடந்த 30 வருஷமா பேசாம இருக்காங்க. ஆனா, எனக்கு சித்தியோட சேர்த்து இரண்டு அம்மாக்கள். தவிர, ரெண்டு குடும்பத்துக் குள்ளேயும் அடிக்கடி நடக்குற பிரச்னை களைப் பார்த்துப் பார்த்தே வளர்ந்ததுனால, எப்பவுமே எனக்குள்ள ஒரு எமோஷனல் இருக்கும். சித்தி என்னை அவங்க புள்ளையாத்தான் பார்த்தாங்க. ரேணுகாவை எனக்குக் கட்டி வைக்கிறதுக்கு முடிவு பண்ணதும் அவங்கதான். ஏன்னா, ரேணுகா  வேற யாருமில்ல... அவங்க கூடப் பொறந்த தம்பி மகள். எங்க அம்மா வேற சாதி, சித்தி வேற சாதி. இதனாலேயே எனக்குப் பொண்ணு கொடுக்க, சித்தியோட தம்பி பயந்தார். சித்திதான், தம்பிகிட்ட சண்டை போட்டு எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சாங்க. 2010-ல கொடுமுடில எளிமையான முறையில எனக்கும், ரேணுகாவுக்கும் திருமணம் நடந்தது. இப்போ வாழ்க்கை சந்தோஷமா போகுது’’ என மனைவியை அன்போடு அணைக்கிறார் சுசீந்திரன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாமோய்... நீங்க எங்க இருக்கீங்க!

“உங்க காதலை எந்தப் படத்திலாவது பதிவு பண்ணியிருக்கீங்களா?” இது சுசீந்திரனுக்கான கேள்வி. “ ‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்துல வந்த காதல் காட்சியே, எங்க கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு இருந்த ஒரு சின்ன லவ் ஸ்டோரிதான் (கண்ணில் கொஞ்சம் பயத்தோடு மனைவியைப் பார்த்துக்கொள்கிறார்). கல்யாணத்துக்குப் பிறகு இவங்களுக்கும் எனக்குமான லவ் ஸ்டோரியை ‘நான் மகான் அல்ல’ படத்துல வெச்சேன். அந்தப் படத்துல வர்ற கியூட்டான காதல் வசனங்கள் இவங்க கொடுத்த கிஃப்ட்தான். தவிர, அதுல வர்ற காதல் காட்சிகளும் எங்களுக்குள்ள நடந்தவைதான்” என்றவர், “ஆனா, அதையெல்லாம் இவங்ககிட்ட சொல்லலை. தியேட்டர்ல பார்த்துதான் சர்ப்ரைஸ் ஆனாங்க. பாராட்டுவாங்கனு நினைச்சேன், படம் பார்த்துக்கிட்டிருக்கும்போதே, என் இடுப்பைக் கிள்ளிக்கிட்டிருந்தாங்க” என பர்சனல் பேச, ரேணுகா இப்போதும் சுசீந்திரனைக் கிள்ளுகிறார்.

‘` ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ ரிலீஸுக்கு ரெடி. ‘ஏஞ்சலினா’ எந்த ஸ்டேஜ்ல இருக்கு?”

“என் சினிமா வாழ்க்கையில அப்பப்போ எனக்கான படங்களைப் பண்ணுவேன். ‘வெண்ணிலா கபடிக்குழு’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘ஜீவா’, ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘மாவீரன் கிட்டு’ இந்த வரிசைல ‘ஏஞ்சலினா’ இருக்கும். அழுத்தமான கதை, ஒரு நல்ல மெசேஜ், இதுவரைக்கும் வந்த என் படங்கள்ல இருந்து முற்றிலும் மாறுபட்ட முயற்சியா இதைப் பண்ணியிருக்கேன். காலேஜ் பசங்களோட கலர்ஃபுல் வாழ்க்கைதான் படத்தோட களம். ‘ஆதலால் காதல் செய்வீர்’ உங்களுக்குப் பிடிச்சா, இந்தப் படம் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.”

கடைசியாக, ‘சுசீந்திரனை வீட்டுல எப்படிக் கூப்பிடுவீங்க?’ என ரேணுகாவிடம் கேஷுவலாகக் கேட்டால், மொத்தக் குடும்பமும் ‘மாமோய்…’ எனக் கத்துகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism