ஒரு சிகரெட்டை உறிஞ்சியபடி, சென்னையின் பரப்பை உயரே இருந்து ரசிக்கிறார் டைரக்டர் அனுராக் காஷ்யப். இந்தி சினிமாவின் உணர்வுமிக்க இயக்குநர். ராம்கோபால் வர்மாவை உச்சத்துக்குக் கொண்டுசென்ற 'சத்யா’ படத்துக்கு இவர்தான் திரைக்கதை. 'பிளாக் ஃப்ரைடே’, 'தேவ் டி’ போன்ற

சினிமாக்களின் இயக்குநர்.

''கமர்ஷியல் மலிந்த இந்தி சினிமாவில் Black Friday மாதிரியான படத்தை எடுக்கும் துணிச்சல் எப்படி வந்தது?''

''நான் ஒரு வெகுளி. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் ஏதும் அறியாத குழந்தை விரல் நீட்டும் அல்லவா, அப்படித்தான் நான். எல்லாவற்றையும் என் ஒருவ னால் சாதிக்க முடியாது. ஆனால், கொஞ்ச மாவது சொல்ல வேண்டிய கடமை இருக்கிறதே. என் பொறுப்பை உணர்கி றேன். எனது அக்கறைக்குத் தைரியம் என்று நீங்கள் மாற்றுப் பெயர் இடுகிறீர்கள். அவ்வளவுதான்!''

''இந்தி சினிமாவின் நிலைமை இப்போது எப்படி இருக்கிறது?''

''இந்தியில் எனக்கு அனுபவம் தரும்படியான படங்கள் பார்க்கக் கிடைப்பது இல்லை. எனது சிறந்த அனுபவங்களைத் தமிழ்ப் படங்கள் மூலமே பெறுகிறேன். நான் வாரணாசிக்கு அருகில் இருந்து வந்தவன். காசியில் சுற்றித் திரிந்தவன். ஆனால், அந்த நகரத்தைவைத்து, 'நான் கடவுள்’ மாதிரியான ஒரு படம் எடுக்க முடியும் எனச் சிந்திக்கவேஇல்லை. நினைத்தால், எனக்கே வெட்கமாக இருக்கிறது. நான் எடுத்திருக்க வேண்டிய படத்தை தென்னிந்தியா வின் ஓரத்தில் இருந்து வந்த பாலா எடுக்கிறார். இந்தி சினிமாவில் ஒரே படத்தைப் பல விதங்களில் பல ஹீரோக்கள் நடிக்கிறார்கள். அதிலும் இந்தி 'கஜினி’க்குப் பிறகு, அது இன்னும் அதிகமாகிவிட்டது. இப்போதுதான் நாலைந்து இயக்குநர்கள் எழுந்து வந்திருக்கிறோம். அவர்களும் சினிமாவுக்கு வெளியே இருந்துதான் வருகிறார்கள். இன்னும் இந்தி சினிமா மாறக் கொஞ்ச காலம் ஆகும். அதுவரையில் காத்திருக்க முடியாது. மாற்ற வேண்டும்!''

''நீங்கள் எப்போதுமே புதுமுகங்களைத் தேடுகிறீர்கள். பெரிய ஹீரோக்கள், நீங்கள் கேட்டால் வர மாட்டார்களா என்ன?''

''ஹீரோக்கள், அவர்கள் எல்லாம் செய்து சாதித்து முடித்துவிட்டது போன்ற திருப்தியில் இருக்கிறார்கள். இமேஜ் பார்க்கிறார்கள். இமேஜ் என்பதைத் தூக்கி எறிந்துவிடக்கூடிய எந்த ஹீரோவுடனும் நான் பணியாற்றத் தயாராக இருக்கிறேன். சினிமா என்பது விளையாட்டு அல்ல என்பதை உணரும் எந்த நடிகரும் என்னுடன் பணியாற்றத் தகுதியானவர்தான்!''

''ஆனால், அமீர் கானை இந்த வட்டத்துக்குள் சேர்க்க முடியாதே. பெரிய ஹீரோவாக இருந்தாலும், அவர் நல்ல படங்களில் நடிக்க, எடுக்கத் துணிகிறாரே?''

''உண்மைதான். ஆனால், வருடத்துக்கு ஒரு படம் கூட அவர் செய்வது இல்லை. ஒரு நல்ல படம் எடுத்தால், அடுத்து கமர்ஷியலாக நிறைய எடுத்து அந்த இடத்தை மறைக்கிறார். ஆனாலும், அவரது அக்கறையைச் சந்தேகிக்க முடியாது. இருந்தாலும், எப்போதும் 'அமீர்கான்’ என்ற பிராண்ட் நேமில் கவனமாக இருக்கிறார்!''

''தமிழில் நீங்கள் மதிக்கும் படைப்பாளிகள் யார்?''

''நல்ல தொடக்கம் தந்ததில்... கே.பாலசந்தர், மணிரத்னம் மீது மரியாதை உண்டு. நான் கொஞ்ச காலம் மணி சாரிடம் பணிபுரிந்ததும் உண்டு. தமிழ் சினிமாவில் கமலின் பங்கும் முக்கியமானது என்ற விதத்தில் அவரைப் பிடிக்கும். நம்பிக்கைக்கு உரியவர்களாக பாலா, அமீர், சசிகுமார், செல்

.வராகவன் ஆகியோர் திகழ்கிறார்கள். எனக்கு விக்ரம் சிறந்த நடிகராகப் படுகிறார்!''.
''திடீரென்று 'சுப்பிரமணியபுரம்’ பற்றிப் பேசி இருக்கிறீர்கள்?''

''எனக்கு இந்தப் படத்தை ஒரு புதியவர் எடுத்திருக்க முடியும் எனத் தோன்றவில்லை. அதனால்தான் சசிகுமாரைச் சந்தித்துவிட வேண்டும் என்ற பிரியத்தில் அவருக்கு போன் செய்தேன். சப்-டைட்டிலுடன் கூடிய டி.வி.டி அனுப்பிவிட்டு, நேரிலேயே வந்து நின்றார். மும்பையில் என்னைப்போன்ற இயக்குநர்களை வரவழைத்துக் காட்டினேன். அவர்களால் நம்ப முடியவில்லை. எனது அடுத்த படம் 'சுப்ரமணியபுரம்’ பாதிப்பில்தான் இருக்கும்!''

படம் : கே.ராஜசேகரன்