Published:Updated:

ஜிலீர் புதுமுகங்கள்

ஜிலீர் புதுமுகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஜிலீர் புதுமுகங்கள்

சுஜிதா சென்

ஜிலீர் புதுமுகங்கள்

சுஜிதா சென்

Published:Updated:
ஜிலீர் புதுமுகங்கள்
பிரீமியம் ஸ்டோரி
ஜிலீர் புதுமுகங்கள்

மிழ் சினிமாவின் குளிர் புதுமுகங்கள் இவர்கள். `அந்த ஹீரோயின் பேர் என்ன?’ என டீடெய்ல்ஸுக்காக ஏங்கித்தவிக்கும் ரசிகர்களுக்கான தகவல் பொக்கிஷம் இங்கே!

நானும் உலக நாயகிதான்!

`துருவ நட்சத்திரம்’ படத்தின் ஹீரோயின் ரிது வர்மா. முதல் படமே விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணி என்பதால்    பரவசத்துடனேயே பேசுகிறார்  ரிது.

ஜிலீர் புதுமுகங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே நடிப்புல ஆர்வம்னு பொய் சொல்லமாட்டேன். ரெண்டு வருஷம் மாடலிங் பண்ணிட்டிருந்தேன். அப்போ என் நண்பர் தருண் பாஸ்கர் அவரோட குறும்படத்துல நடிக்கக் கூப்பிட்டார். அதுல நடிக்க ஆரம்பிச்சு அப்படியே சினிமாவுக்குள்ள வந்துட்டேன். தெலுங்குல தொடர்ந்து நாலு படங்கள்ல நடிச்சேன். அப்போதான்  ‘பெல்லி சூப்புலு’ படத்துக்கான கதையை தருண் பாஸ்கர் என்கிட்ட சொன்னார். கதை எனக்கு ரொம்பப் பிடிச்சுப்போச்சு. அதுல  ஹீரோயினா நடிச்சு, 2016-ஆம் ஆண்டின் சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வாங்கினேன். அதுக்கப்புறம்தான் தமிழில் எனக்கு `வி.ஐ.பி-2’ படத்துல நடிக்க வாய்ப்பு வந்துச்சு.  இப்போ `சைனா’ மற்றும் `துருவ நட்சத்திரம்’ படங்கள்ல நடிக்கிறேன்’’ என அறிமுகம் சொல்கிறார் ரிது.

“ரிது எந்த ஊருப் பொண்ணு?”

“என்னோட சொந்த ஊர் மத்தியப்பிரதேசம். வளர்ந்தது எல்லாமே ஐதராபாத். தெலுங்கு சரளமா பேசுவேன். என் அம்மா ஐதராபாத்ல ஒரு ஸ்கூல் நடத்துறாங்க. அப்பா வங்கி மேலாளர். என்னுடைய குடும்பத்துல உள்ளவங்களுக்கு சினிமாப் பின்னணி இல்லைனாலும் நான் நடிக்க வரும்போது ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. நான் நல்ல கேரக்டர் ரோல்ல நடிக்கணும்ன்றதுதான் அவங்களோட விருப்பம்.”
  “தமிழில் நடிச்ச முதல் படம் பற்றிச் சொல்லுங்க”

``வி.ஐ.பி-2 படத்துல என்னோடது கேமியோ ரோலா இருந்தாலும், மக்கள் கிட்ட இருந்து வந்த ரெஸ்பான்ஸ் ரொம்ப அதிகம். இந்தப் படத்துக்கு அப்புறம் தனுஷ் சார் என்னோட நல்ல நண்பராகிட்டார்.”

“ `துருவ நட்சத்திரம்’ படம் பற்றிச் சொல்லுங்க?”

`` `துருவ நட்சத்திரம்’ படத்துல நான் நடிக்கிற கேரக்டர் எனக்கு ட்ரீம் ரோல்னு  சொல்லலாம். எல்லா ஹீரோயினுக்கும் கெளதம் சார் படத்துல நடிக்கிறது பெரிய கனவு. அவர் தன்னோட படங்கள்ல ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஸ்கிரீன்ல அவ்ளோ அழகா காட்டுவார். இந்தப் படத்துல நிறைய பெரிய நடிகர்கள் இருந்தாலும், கெளதம் சார் எல்லாரையும் ஒரே மாதிரிதான் நடத்துறார். அவங்களுக்குக் கொடுக்குற முக்கியத்துவத்தை எனக்கும் கொடுப்பார். அதேமாதிரிதான் விக்ரம் சாரும். நான் அவரோட ரசிகை. டயலாக் பேசும்போது, எனக்குத் தமிழ் கத்துக்கொடுத்து நிறைய உதவிகள் பண்ணார். அவரோட நடிப்பைப் பார்த்ததுனால சொல்றேன், இந்தியாவிலேயே ‘தி பெஸ்ட் ஹீரோ’ விக்ரம் சார்தான். அவர்கூடச் சேர்ந்து நடிக்கிற மாதிரியான காட்சிகள் மட்டும்தான் படத்துல எனக்கு இருக்கு. தவிர, பார்த்திபன் சார், டிடி, ராதிகா மேடம், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன் எல்லார்கிட்டயும் பழகுறதுக்கான வாய்ப்பு இந்தப் படம் மூலமா கிடைச்சிருக்கு. அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, இந்தப் படத்துல நடிக்கிறது மூலமா நான் உலகம் முழுக்கச் சுத்திப் பார்ப்பேன் போல. இதுவரைக்கும் ஏழு நாடுகள்ல ஷூட்டிங் பண்ணியிருக்கோம். நானும் உலக நாயகிதான்!”

“தமிழ்நாட்டையே கவுத்துறலாம்!”

மிழ் சினிமாவில் தங்கத் தங்கச்சியா அறிமுகமாகி இப்போது ஹீரோயினாக கெத்து காட்டுகிறார் `மேயாத மான்’ இந்துஜா.  ``தங்கச்சி சென்டிமென்ட்ல தமிழ்நாட்டையே கவுத்துறலாம்ன்றது இதுதான் போல. ரசிகர்கள் பாச மழை பொழியுறாங்கப்பா’’ என ஜாலியாகப் பேசுகிறார் இந்துஜா.

ஜிலீர் புதுமுகங்கள்

வீட்டுக்குள்ளே போராட்டம்!

``ஸ்கூல்ல படிக்கிற காலத்திலிருந்தே `நீ ஒரு நல்ல என்டர்டெய்னர்’னு என்னைச் சுத்தி இருக்குறவங்க சொல்லிக்கிட்டே இருப்பாங்க. டான்ஸ்-பாட்டுனு இப்படிப் பல விஷயங்கள் மேல ஆர்வம் அதிகம். நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து கல்லூரி முதல் வருஷம் படிக்கும்போது ஒரு குறும்படம் பண்ணோம். அதுல என்னை நடிக்கச் சொல்லியிருந்தாங்க. ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் ஆசைப்படுறாங்களேனு சும்மா நடிச்சேன். ஆனா, அந்தக் குறும்படத்துல நான் நடிச்சதைப் பார்க்கும்போது எனக்கே ரொம்பத் திருப்தியா இருந்துச்சு. ஏதோ சாதிச்ச மாதிரி வேற லெவல் ஃபீல். அப்போதான், ‘வாழ்நாள் முழுக்க இப்படியே  படங்கள்ல நடிச்சா எப்படி இருக்கும்?’னு தோணுச்சு. எப்படியாவது சினிமாவுக்குப் போயிடணும்னு முடிவெடுத்து வீட்ல சொன்னேன். அவங்க ஒத்துக்கவே இல்ல. ரெண்டு வருஷம் போராடி, சம்மதிக்க வெச்சேன்.”

இனிமேல் தங்கச்சி இல்லை!

``காலேஜ் மூணாவது வருஷம் படிச்சிட்டிருந்தப்போ எனக்கு முதல் சினிமா வாய்ப்பு வந்துச்சு. சரவணாசக்தி இயக்கத்துல ‘பில்லா பாண்டி’ன்ற படத்துல ஹீரோயினா கமிட் ஆனேன். ஆனா, கொஞ்ச நாள்ல இப்போ படம் ஆரம்பிக்கிற மாதிரியான திட்டங்கள் ஏதுவும் இல்லைனு சொல்லிட்டாங்க. ஆறு மாசம் கழிச்சு கார்த்திக் சுப்பராஜ் சார் ஆபீஸ்ல ஆடிஷன் போயிட்டிருக்குனு தகவல் வந்துச்சு. நானும் போனேன். பக்கா வட சென்னைப் பொண்ணு மாதிரி நடிச்சுக் காட்டணும்னு சொன்னாங்க. நான் அதுக்கேத்த மாதிரி தலையில எண்ணெய், நெத்தியில பெரிய பொட்டு, காதுல தோடுனு பக்காவா போய் நின்னேன். ஒரு எமோஷனல் சீனுக்கான டயலாக் கொடுத்து, பேசச் சொன்னாங்க. சாரி... சாரி... நடிக்கச் சொன்னாங்க. என்னோட நடிப்பு அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ‘நீங்க செலக்ட் ஆகிட்டிங்க’னு சொன்ன உடனேயே வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத குறைதான். கடைசில பார்த்தா, தங்கச்சி ரோல். நான் நடிக்கவே முடியாதுனு சொல்லிட்டேன். இயக்குநர் ரத்னகுமார் சார்தான் ‘ஸ்க்ரிப்ட் கேளுங்க. பிடிச்சிருந்தா நடிங்க’னு சொன்னார். கதை கேட்ட உடனேயே படத்துல எனக்கு வெயிட்டான ரோல்னு தெரிஞ்சுருச்சு. வேறென்ன, மறுபடியும் குதிக்க ஆரம்பிச்சுட்டேன். ஆனா, இனி நோ தங்கச்சி சென்டிமென்ட்.”

எப்பவுமே சென்னைத் தமிழ்தான்!

``இந்தப் படத்துக்காகச் சென்னைத் தமிழ் பேசணும்னு சொன்னாங்க. என்னோட சொந்த ஊர் வேலூர் பக்கத்துல இருக்கிற ஓட்டேரி. எங்க ஊர்த் தமிழும் சென்னைத் தமிழும் கிட்டத்தட்ட ஒண்ணுதான். நான் நடிக்கிறப்போ, ‘டப்பிங்கும் நீங்களே பேசுனா நல்லா இருக்கும்’னு சொன்ன உடனே டபுள் சந்தோஷம். ஆனா, என்னோட கலரைத்தான் ரொம்பவும்  கம்மி பண்ணிட்டாங்க தெரியுமா? அப்போ தெய்வம் மாதிரி கார்த்திக் சுப்பராஜ் சார்தான், ‘இவ்வளவு கறுப்பா மாத்த வேண்டாம். தங்கச்சிப்பொண்ணு ஹீரோயின் மாதிரி இருந்தா நம்ம ஊர்ல ஏத்துக்க மாட்டாங்களா?’னு கேட்டார். அதுக்கப்புறம்தான் மேக்-அப் கொஞ்சம் ஓகேவா போட்டாங்க.”

ஹெட் மாஸ்டர் பொண்ணு!

“என் தங்கச்சிங்க ரெண்டு பேரும் என்னை மாதிரி இல்ல. ஒருத்தங்க எம்.பி.ஏ கோச்சிங் க்ளாஸ் போறாங்க. இன்னொருத்தங்க ப்ளஸ் டூ படிக்கிறாங்க. என் அம்மா ஹெட் மாஸ்டர். அப்பா பிசினஸ்மேன். வீட்ல எல்லோரும் ‘நீதி, நேர்மை, நியாயம்’னு தத்துவங்கள் பேசுற டைப். இப்போ நடிப்பு பொண்ணோட விருப்பம், ஆசை, கனவுனு அவங்க மனசை அவங்களே சமாதானப்படுத்திட்டிருக்காங்க.”

தமிழ் ஹீரோயின்னா கேவலமா?

“இதுவரைக்கும் ஏகப்பட்ட ஆடிஷன்ஸுக்குப் போயிருக்கேன். அவங்க கேட்குற முதல் வார்த்தை, `தமிழ்ப் பொண்ணா’ன்றதுதான். தமிழ்ப் பொண்ணுன உடனே நம்மளை ஒதுக்கி வச்சுருவாங்க. நாம எவ்வளவு திறமையா நடிச்சாலும் அவங்களுக்குப் பிடிக்காது. ‘தமிழ்ப் பொண்ணா கட்டாயம் சினிமாவுல சாதிச்சுக் காட்டணும்’னு அவங்க எல்லோருக்கும் ஒரு சவால் விட்டிருக்கேன். அடுத்து ‘மெர்க்குரி’ படத்துல ஹீரோயினா நடிக்கிறேன். நான் முதன்முதல்ல கமிட் ஆன ‘பில்லா பாண்டி’ பட ஷூட்டிங்கும் ஆரம்பிச்சுருச்சு. இனி எப்போதும் இந்துஜா ஹீரோயின்!”

நானும் தமிழ்ப் பொண்ணுதான்!

“நாங்க எல்லோரும் சேர்ந்து விளையாட்டுத்தனமா ஆரம்பிச்ச ‘காதல் கண்கட்டுதே’  படம் இப்போ என்னோட வாழ்கையையே தலைகீழா மாத்திருச்சு. என்னோட அடுத்தடுத்த படங்கள்ல நடிக்கிறதுக்கு நிறைய செல்ஃப் க்ரூமிங் பண்ணிக்கிட்டிருக்கேன். சமுத்திரக்கனி சார் சொல்லிக்கொடுத்த ஃபிட்னஸ் டிப்ஸ்களைத் தினமும் பண்ணிட்டு வர்றேன்’’ என ஸ்வீட்டாகப் பேசுகிறார் அதுல்யா ரவி.

ஜிலீர் புதுமுகங்கள்

``பொறந்து வளர்ந்தது எல்லாமே கோயம்புத்தூர். பி.டெக் கடைசி  வருஷம் படிச்சிட்டிருந்தப்போதான் நண்பர்கள் ஒண்ணு சேர்ந்து படம் எடுக்க ஆரம்பிச்சோம். பாதியிலேயே படிப்பை நிறுத்திட்டு நடிக்க வந்துட்டேன். பட வேலைகள் முடிஞ்சதும் அப்புறம் மறுபடியும் படிக்க ஆரம்பிச்சு இப்போ படிப்பை முடிச்சுட்டேன். அப்பா பிசினஸ் பண்றாங்க. அம்மா ஹோம் மேக்கர்.”

குறும்படம் டு சினிமா!

`` `என் அன்பிற்குரியவளே’னு ஒரு குறும்படம் இயங்கினோம். அதோட ஃபுல் வெர்ஷன்தான் ‘காதல் கண் கட்டுதே’. இந்தப் படத்தோட ட்ரெய்லர் கார்த்திக் சுப்பராஜ் சார் ரிலீஸ் பண்ணார். இதோட டீஸர் கார்த்தி சாருக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. ``சாதாரணக் காதல் கதை’ன்றதைத் தாண்டி நிறைய கருத்து சொல்ற விஷயங்களும் இதுல இருக்கு”னு பாராட்டினார்.

“நான் நடிக்கப் போறேன்னு ஒரு நாளும் வீட்ல சொன்னதே இல்ல. அப்பப்போ கிடைக்குற நேரங்கள்ல ‘டப்ஸ்மாஷ்’ பண்ணுவேன். நண்பர்கள் ஸ்க்ரிப்ட் சொன்னப்போ, எங்களை நம்பி யார் படத்தைத் தயாரிப்பாங்க, நடிப்பாங்கனு சந்தேகம் வந்துச்சு. அதனாலதான் நடிப்புல இருந்து புரொடக்ஷன் வரை எல்லாமே நண்பர்களை வெச்சுப் பண்ணோம். அதனால, வழக்கமான சினிமா டீம்னு சொல்லிக்கிற அளவுக்கு எதுவுமே இல்ல. ஸோ, வீட்லயும் ‘ஏதோ சும்மா இருக்குற நேரத்துல படம் எடுக்குறேன்னு ஊர் சுத்திக்கிட்டிருக்குறாங்க’னு விட்டுட்டாங்க. எங்களோட படம் ஹிட் ஆகும்னு அப்போ யாருக்குமே நம்பிக்கை இல்ல. படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததனால இப்போ வீட்ல என்னோட ராஜ்ஜியம்தான்.’’

தமிழ் ட்வீட்ஸ்!

“எனக்கு சோஷியல் மீடியால இவ்வளவு ரசிகர்கள் சேர்ந்ததே ‘காதல் கண்கட்டுதே’ டீசர் வெளியானதுக்கு அப்புறம்தான். கிடைக்குற நேரம் முழுவதையும் ட்விட்டர், ஃபேஸ்புக்ல செலவிட ஆரம்பிச்சுட்டேன். தமிழில் ஸ்டேட்டஸ் போடுறது ரொம்பப் பிடிக்கும். 

ரெண்டாவது படம்!

 அடுத்து `ஏமாலி’ படத்துல ஹீரோயினா நடிக்கிறேன். ரொம்ப மாடர்ன் ரோல். சமுத்திரக்கனி சாரும் இன்னொரு அறிமுக ஹீரோவும் மெயின் ரோல்ல நடிக்குறாங்க. இதுவரைக்கும் படத்துல பசங்களுக்குத்தான் ப்ரேக்-அப் பாட்டு இருந்திருக்கு. முதல் முறையா இதுல பொண்ணுக்கு ப்ரேக்-அப் பாட்டு புதுசா முயற்சி பண்ணிருக்கோம். என்னுடைய முதல் படம் பார்த்துட்டு துரை சார் நடிக்கக் கூப்பிட்டார்.  ஆடிஷன், போட்டோஷூட்னு எதுவுமே பண்ணல. எம்மேல இவ்ளோ நம்பிக்கை வெச்சிருக்கிற டீமுக்குப் பெரிய நன்றி.

‘நாகேஷ் திரையரங்கம்’ படத்துல வாய்பேச முடியாத, காதும் கேட்காத பொண்ணா நடிச்சிருக்கேன். இது என்னோட ட்ரீம் ரோல்னு சொல்லலாம். இப்போதைக்கு மூணு படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். ஒரே நேரத்துல ரெண்டு மூணு படங்கள்ல நடிக்க வேண்டாம்னு முடிவெடுத்திருக்கேன். ஸோ, ஒரு படம் முடிஞ்ச உடனே அடுத்த படத்துல நடிக்கிற மாதிரி ப்ளான் பண்ணியிருக்கேன். எனக்கு கிளாமர் ரோல்ல நடிக்கிறதுக்குக் கொஞ்சம் தயக்கமா இருக்கு. இப்போதைக்கு ஹோம்லி மட்டும்தான்.”

அனுஷ்கா என் ஃப்ரெண்டு!

மெஹ்ரீன் பிர்ஸாடா... இந்த வருஷம் இணையத்துல அதிகமா சர்ச் பண்ண ஹீரோயின் பெயர் இதுதான் என்கிறது கூகுள். காரணம், ரெண்டு வருஷத்துல எட்டுப் படங்கள்ல பயங்கர பரபரப்பா இயங்கிட்டு வர்றாங்க. தெலுங்கு, இந்தி ஹீரோயினாக இருந்தவர் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படம்மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்!

ஜிலீர் புதுமுகங்கள்

``சினிமாவுக்குள் எப்படி வந்தீங்க?’’

“ஸ்கூல் படிக்கும்போது சர்வதேச ரோட்டரி கிளப் மற்றும் பள்ளி ஒருங்கிணைப்புக் குழுவில் துணைத் தலைவரா இருந்தேன். சின்ன வயசுல இருந்து நாட்டுக்குச் சேவை செய்யணும்னு ஆசை. அதனால, என்.சி.சி கேடட்டா இருந்தேன். கூடவே பரதநாட்டியம் கத்துக்கிட்டேன். நியூயார்க், வாஷிங்டன்-ல உலகளாவிய தலைவர்கள் மாநாட்டில் இந்தியாவின் பிரதிநிதியா கலந்துக்கிட்டேன். தவிர, தேசிய அளவுல நடந்த துப்பாக்கி சுடும் போட்டிகள்ல பங்குபெற்றிருக்கேன். சினிமால நடிக்கணும்ன்றது என்னோட விருப்பம் கிடையாது.  காலேஜ் படிக்கும்போது ஒரு தனியார் நிறுவனம் நடத்துன அழகிப் போட்டியில கலந்துக்கிட்டேன். அப்புறம் நிறைய அழகிப்போட்டிகள், அதுல வெற்றிகள்னு அப்படியே மாடலிங், சினிமான்னு வந்துட்டேன். என்னை சினிமாவுக்குள் கொண்டு வந்தது அனுஷ்கா ஷர்மா. அவங்க என்னோட இந்திப்படமான `பில்லூரி’ படத்தின் தயாரிப்பாளர். என்னை ரொம்பவும் என்கரேஜ் பண்ண நல்ல நண்பர் அவங்க.”

  “உங்க குடும்பம் பற்றிச் சொல்லுங்க?”

“என் பெற்றோர்கள்தான் என்னுடைய சினிமா வெற்றிக்குக் காரணம். மொழி புரியலைனாலும் நான் நடிச்ச அத்தனை படங்களையும் தவறாம பார்த்துருவாங்க. என்னோட குடும்பத்துக்கும் மீடியாக்கும் துளிக்கூட சம்பந்தம் இல்ல. அப்பா ஒரு விவசாயி. அம்மா பொறுப்பான குடும்பத் தலைவி.”

“சினிமால ஹோம்லி-கிளாமர் இரண்டுலயுமே கலக்குறீங்களே?”

“ஆமாங்க. எல்லாமே நடிப்புதானே. நான் கிளாமர் பண்றதுக்குத் தயங்கவே மாட்டேன். நிஜத்துலயும் அப்படித்தான். விதவிதமா டிரெஸ் பண்றது பிடிக்கும். ரொம்பக் கலகலப்பான ஆளு. ரவுடிப் பொண்ணு. பயங்கரமா கலாட்டா பண்ணுவேன். மொத்தத்துல நல்ல என்டர்டெய்னர்.”

‘`எந்த மொழியில அதிகமா நடிக்கணும்னு விரும்புறீங்க?”

“நான் நடிப்பைத்தான் விரும்புறேன். எந்த இண்டஸ்ட்ரியையும் இல்ல. மொழி நடிப்புக்குத் தடையா ஒருபோதும் இருந்ததில்லை. என்னோட தாய்மொழி பஞ்சாபி. தெலுங்கு கத்துக்கிட்டேன். இப்போ தமிழ் கத்துக்கிற முயற்சியில இருக்கேன். எல்லா மொழியிலும் நானே டப்பிங் பண்ணணும்னு ஆசையா இருக்கு. எந்த மொழியானாலும் நடிச்சுருவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.’’

 “ `நெஞ்சில் துணிவிருந்தால்’ அனுபவம் சொல்லுங்க”

``சுசீந்திரன் சார் என்னை ஆக்ஷன் குயின்னு கூப்பிடுவார். ஷூட்டிங் ஸ்பாட்ல எதுலயாவது ஏறிக் குதிக்கிறது, ஓடிப்பிடிச்சு விளையாடுறதுனு ஒரு இடத்துல இருக்கவே மாட்டேன். ‘நான் ஒரு ஆக்‌ஷன் படம் எடுத்தா அதுல மெஹ்ரீன்தான் ஹீரோயின். ‘நயன்தாரா-ஹன்சிகா-குஷ்பு இவங்க எல்லோரும் ஒண்ணு சேர்ந்த கலவை மெஹ்ரீன்’னு சொல்வார். முதல் படம் ரொம்ப நல்ல டீம்னு ரொம்ப ஹேப்பி.”

 ``அடுத்து யார்கூட நடிக்கணும்னு ஆசை?”

“ `பாகுபலி’ படத்துலவந்த தேவசேனா கேரக்டர் மாதிரி பண்ணணும்கிறதுதான் என் கனவு. இவங்ககூட எல்லாம் நடிக்கணும்னு லிஸ்ட் இல்லை. ஏன்னா, இன்னும் தமிழ் சினிமா முழுசா தெரியாது.  எல்லோரையும் பத்தி முதல்ல தெரிஞ்சுக்கணும்னு நினைக்கிறேன். அப்படித் தெரிஞ்சதும் ஒரு நல்ல ஹீரோவை சீக்கிரம் சொல்றேன் மக்களே!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism