Published:Updated:

“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க!”

“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன்

“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன்

Published:Updated:
“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க!”
பிரீமியம் ஸ்டோரி
“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க!”

“ ‘பவர்ல இருக்கிறவன் உயிருக்குத் தர்ற மரியாதையை... பப்ளிக் உயிருக்கு ஏன் சார் தர மாட்டேங்றீங்க?’ இந்த டயலாக்கைத் தமிழில் ரொம்ப ஈஸியா பேசிட்டேன். தெலுங்குல பேசுறதுக்குத்தான் நாக்குத் தள்ளிருச்சு. ஆனா, கஷ்டப்பட்டால்தான் பிரதர் வெற்றி கிடைக்கும்!” தத்துவத்தோடு தொடங்குகிறார் கார்த்தி. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் தெலுங்கு டப்பிங்கில் இருந்தவரைச் சந்தித்தேன்.

“ மறுபடியும் ஒரு போலீஸ் படம்?”

“ ‘சிறுத்தை’ படம் பண்ணும்போது நிறைய காவல்துறை அதிகாரிகளைச் சந்திச்சுப் பேசினேன். அப்ப ஒரு அதிகாரி என்கிட்ட ஒரு பழைய வழக்கைப் பற்றிப் பேசிட்டிருந்தார். அந்த வழக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. அதையே ஒரு படமா பண்ணினா நல்லா இருக்கும்ணு தோணுச்சு. அப்புறம் அஞ்சாறு வருஷத்துக்கு அப்புறமா ‘சதுரங்க வேட்டை’ வினோத்கிட்ட போலீஸ் கதை ஒண்ணு இருக்குனு தெரிய வந்தது. அவர் கதையைச் சொல்ல ஆரம்பிச்சப்போ ஆச்சர்யமா இருந்துச்சு. அது `சிறுத்தை’ சமயத்தில் நான் கேட்ட அதே கதை! வாழ்க்கையோட மேஜிக் இதுதான். அதே கதைல டைரக்டர் வினோத் நிறைய டீடெய்லிங் பண்ணி வெச்சிருந்தார். தொடங்கிட்டோம்!”

“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க!”

“ `சிறுத்தை’ ரத்னவேல் பாண்டியன் ரொம்ப பவர்ஃபுல் கேரக்டர்...  தீரன்ல என்ன வித்தியாசம் காட்டியிருக்கீங்க?”

“ரத்னவேல் பாண்டியனைப் பொறுத்தவரை படத்தில் குறைஞ்ச அளவே வர்ற கேரக்டர். ஆனா, `தீரன்’ அப்படிக் கிடையாது. முழுக்க, முழுக்க வேற மாதிரி போலீஸ் படம்.  நிஜமான காவல் அதிகாரியோட வாழ்க்கை. அவரைப் போலீஸ்காரர்னு சொன்னா நம்பவே முடியாது. பேன்ட், ஷர்ட், ஸ்போர்ட்ஸ் ஷூனு சிம்பிளா இருப்பார்.  சைடுல திரும்பினார்னாதான் அவர் இடுப்புல துப்பாக்கி இருக்குங்கறதே நமக்குத் தெரியும். மெதுவாத்தான் பேசுவார். போலீஸ்காரங்கனா விறைப்பா மட்டும் இல்லை, எல்லா வகையிலும் போலீஸ்காரங்களா இருக்காங்கனு காமிக்க அவரைத்தான் ரெஃபரன்ஸா எடுத்துக்கிட்டேன். இன்னொண்ணு, போலீஸ்காரங்களுக்கு பிரச்னைகள் எவ்வளவோ இருக்கு. ஒரு கூட்டமான இடத்தில் ‘ஏய் என்ன பிரச்னை இங்க?’னு கேட்க அவங்க ஃபிசிக்கலா ஃபிட்டா இருக்கணும். அது சாதாரணமா வந்துடாது. ட்ரெய்னிங் ப்ரீயட்ல தூங்கவே மாட்டாங்களாம். நாலு நாள் தூங்காம இருந்தாங்கன்னாகூட அஞ்சு கிலோ மீட்டர் ஓடுற வலிமை அவங்ககிட்ட இருக்கணும். உடம்பு, மூளை ரெண்டும் வலிமையா இருக்கணும். இத்தனை வலிகளைத் தாண்டி வரப்போ அவங்களோட சுபாவமே மாறிடும்.”

“இங்க போலீஸ் கதைனாலே ரொம்ப மிகைப்படுத்தப்படுகிறதே...’’

“சினிமாவில் எப்போதுமே மிகைப்படுத்துதல் தேவை. எதை வைக்கிறது, எதை வைக்க வேண்டாம்கறது பெரிய டாஸ்க். அது எங்களுக்கும் இருந்தது. சில விஷயங்கள் மிக முக்கியம்னு நினைச்சதை அப்படியே படத்தில் வெச்சிருக்கோம். இந்தப் படம் நிச்சயமா யதார்த்தமா இருக்கும். உண்மைக்கு ரொம்ப நெருக்கமா இருக்கும். அதைப் படம் பார்க்கும்போது நீங்களே உணருவீங்க. இந்தப் படத்துக்கு என்ன தேவையோ அதை அழகா கொண்டு வந்திருக்கார் இயக்குநர் வினோத்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க!”

“ட்ரெய்லர்ல பார்க்கும்போது ‘ரகுல் ப்ரீத் சிங்’ கூட நிறைய ரொமான்ஸ் இருந்தது. அது எந்த அளவுக்குப் படத்துல...”

குறுக்கிட்டுச் சிரிக்கிறார். “அட... டைரக்டர் என்கிட்ட ஸ்க்ரிப்ட் கொடுத்துப் படிக்கச் சொன்னார். எந்த அளவுக்கு ஆக்‌ஷன் பிளாக் நல்லா இருக்கோ... அதே அளவுக்கு ரொமான்ஸ்லயும் கலக்கியிருந்தார். `எப்படிங்க இப்படியெல்லாம் எழுதுனீங்க’னு நானே அவர்கிட்ட ஆச்சர்யமா கேட்டேன். ஒரு சிட்டி போலீஸ்காரருடைய காதல் வாழ்க்கை எப்படி இருக்குமோ அதை அழகா எழுதியிருக்கார்.”

“‘காற்று வெளியிடை’ படத்துல உங்கள் கேரக்டரைப் பார்க்கும்போது ஆடியன்ஸுக்கே சில குழப்பம் இருந்தது. உங்களால் கதை கேட்டபோது அதைப் புரிஞ்சுக்க முடிஞ்சதா?”

“அந்தப் படத்துக்காக நான் நிறையவே மெனக்கெட வேண்டியிருந்தது. உடம்பெல்லாம் குறைச்சு, மீசையெல்லாம் எடுத்தபிறகுதான் அந்த கேரக்டரை ஃபீல் பண்ணவே முடிஞ்சது. நிறைய பொண்ணுங்க படம் வந்த பிறகு ‘என் பாய் ப்ரெண்ட் மாதிரியே இருந்தீங்க’னு மெசேஜ் பண்ணினாங்க. சில விமர்சனங்களும் வந்தது. விமர்சனம் இல்லாத படங்களே இல்லையே... இப்ப ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை எடுத்துக்கிட்டீங்கன்னா... இடமும், ஹீரோ பார்க்கும் வேலைகளும்தான் வேறயே தவிர... கிட்டத்தட்ட ‘காற்று வெளியிடை’தான். அது காலேஜ் பின்னணில வந்ததால எல்லாரும் ஈஸியா புரிஞ்சுக்கிட்டாங்க.”

“ `சினிமாப் பின்னணியிலிருந்து வந்தவங்களுக்கு வாய்ப்புகள் ரொம்ப ஈஸியா கிடைக்குது. ஆனா, புதுசா ஒருத்தர் நடிக்க வர்றதுன்னா ரொம்பப் போராட வேண்டியிருக்கு’னு பல காலமாகச் சொல்லிட்டு வர்றாங்க. நீங்க இதை எப்படிப் பார்க்கறீங்க?”

பெஞ்ச்சைத் தட்டுகிறார். “நான் ஆரம்பத்துல கஷ்டப்படலை, போராடலைனு உங்களுக்குத் தெரியுமா? எல்லோருமே இந்தக் கேள்வியைக் கேட்டுடறீங்க. யாரு சொன்னா, நான் கஷ்டப்படலைனு? எனக்கு எல்லோரையும்விட அதிக பிரச்னைகள் இருக்கு. இங்க சக்சஸ் ஆகணும்னா இதுதான் ஃபார்முலானு ஒண்ணும் கிடையாது. ஒரு பாதை கிடையாது. எனக்குக் கிடைச்ச முதல் டிக்கெட் மட்டும்தான் அப்பா, அண்ணாவால் கிடைச்சது. அவங்களுக்காக ஒரு படம் பார்ப்பாங்க. நல்லா இல்லைனா தூக்கிப் போட்டுட்டுப் போய்டுவாங்க. எல்லோருக்கும் போராட்டம் இருக்கு. வளர, வளர நீங்க நல்ல கதை, நல்ல டீம்னு நிறைய போராடணும். கீழே இறங்கும், ஏறும். கஷ்டம் எல்லோருக்குமே இருக்கு. ஈசியா வர முடியாதுங்க. மக்களும் சரி, ஆண்டவனும் சரி, அப்படி விட்டுட மாட்டாங்க. எனக்கும் பிரஷர் உண்டு. சிவகார்த்திகேயனை எடுத்துக்கிட்டீங்கனா அவர் டிவியில இருந்து போராடி வந்தவர். ஒரு ஸ்டேஜ்ல சக்சஸ் என்ஜாய் பண்ணாலும், திருப்பி அதைத் தக்கவைச்சுக்கப் போராடிட்டுத்தானே இருக்கார். அடுத்தவங்க வாழ்க்கையை ஈசினு நினைக்காதீங்க. புதுசா வந்தாலும் சரி, சினிமாக் குடும்பத்திலிருந்து வந்தாலும் சரி, உழைப்பைக் கொடுத்தால்தான் இங்கே வெற்றி கிடைக்கும்.”

“இந்த 10 வருஷத்துல அப்பா, அண்ணா கூட நடிக்கிற மாதிரி கதைகள் வந்ததா?”

“அப்பா நடிக்கிறது இல்லைனு முடிவு பண்ணிட்டாங்க. ஆனா, அண்ணாவும் நானும் சேர்ந்து நடிக்கிற மாதிரி ஒரு கதை இது வரைக்கும் வரலை. வந்தால் நிச்சயமா நடிப்போம்.”

“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க!”

“உதவி இயக்குநராக இருந்து நடிகர் ஆனவர் நீங்க. ஸ்க்ரிப்ட் ஏதாவது எழுதிட்டிருக்கீங்களா?”

“இல்லைங்க. அதுக்கு நிறைய படிக்கணுமே... ஆரம்பத்துல ஜெயகாந்தன், சுஜாதானு நிறைய படிச்சிட்டிருந்தேன். இப்ப படிக்க நேரம் கிடைக்கலை. சீக்கிரம் நிறைய படிக்க ஆரம்பிக்கணும். படிச்சிட்டே இருந்தாத்தான் நல்ல ஸ்க்ரிப்ட் எழுத முடியும்.”

“நடிகர் சங்கத்தின் பொருளாளர் பதவி வந்ததுக்குப் பிறகு ரொம்பச் சிக்கனமா இருக்கீங்களாமே...”
 
“ஹா... ஹா... முதல்ல எல்லாம் வருஷத்துக்கு ஒரு தடவைதான் ஆடிட்டரைப் பார்ப்பேன். இப்ப வாரா வாரம் பார்க்கிறேன். நிறைய கத்துக்க முடியுது. நிறைய பேருக்கு உதவ முடியுது. ஒரு அம்மா என்னைப் பார்க்க வந்திருந்தாங்க.  அவங்க எம்.ஜி.ஆர் கூட நடிச்சவங்க. `நான் சங்கத்துக்கு உதவி செய்யணும்னு நினைக்கிறேன். என் வீட்டை வித்து அதுல வர்ற பணத்தை வைச்சு நிறைய பேருக்கு உதவி செய்ங்க’னு சொன்னாங்க. நெகிழ்ந்துட்டேன். இப்ப பலருக்கு பென்ஷன் தர்றோம். ஆயிரம் ரூபாய் கிடைச்சாகூட அவங்களுக்கு மருந்து மாத்திரைனு பயனுள்ளதா இருக்கு. அதே சமயத்துல அந்தக் காலத்துல முன்னணி நடிகர்களா இருந்தவங்க பலரும் ரொம்பக் கஷ்டத்துல இருக்காங்க. அவங்க எல்லோருக்குமே உதவணும்னு ஆசை. நிச்சயமா உதவுவோம்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism