பிரீமியம் ஸ்டோரி

டந்த 09/11/11 தேதியிட்ட இதழில் ''நித்தியானந்தா என் எதிரி அல்ல!'' என்ற தலைப்பில் பெங்களூரைச் சேர்ந்த நடிகை அனுகியின் பேட்டி வெளியாகி இருந்தது. பெங்களூரில் தயாராகும் 'சச்சிதானந்தா' என்ற படம் தொடர்பான அந்தப் பேட்டியைத் தொடர்ந்து, நடிகை ரஞ்சிதா தரப்பில் இருந்து நமக்குச் சீற்றமான ரியாக்ஷன்.  

நானா... டிப்ஸா... நெவர்!

''ஆன்மிகத்திலும் மதம் தொடர்பான விஷயங் களிலும் சிறு வயதில் இருந்தே ஈடுபாடு கொண்டவள் நான். நித்தியானந்தா சுவாமியின் சொற்பொழிவுகளும் ஆன்மிகப் பயிற்சி முறைகளும் சிறப்பாக இருந்த காரணத்தால், அவருடைய பக்தை ஆனேன். பிடதி ஆசிரமத்தில் ஒரு வாலன்டியராக இணைந்தேன். அப்படி இருக்க, சில மீடியாக்கள் என் மேல் அவதூறாக சேற்றை வாரி இறைத்தன. அதை எதிர்த்து நான் சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு இருக்கும் நிலையில், நடிகை அனுகியின் பேட்டியைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு நான் வாழ்த்துச் சொன்னதாகவும், அந்தப் படத்தில் எப்படி நடிக்க வேண்டும், பாடி லாங்குவேஜ் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் நான் டிப்ஸ் கொடுத்ததாக முற்றிலும் தவறான தகவல் களைக் கொடுத்திருக்கிறார் அவர். அனுகி என்ற இந்த மரியா ஜெர்லினை நான் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தொடர்புகொண்டதோ, பேசியதோ கிடையாது. நானாவது டிப்ஸ் கொடுப்ப தாவது... நெவர்!'' என்கிறார் ரஞ்சிதா.

யாருடைய நற்பெயருக்கும் களங்கம் விளை விக்கும் நோக்கம் துளி அளவும் நமக்குக் கிடையாது. இருப்பினும், அனுகியின் பேட்டியால் மனம் புண்பட்டிருந்தால்... வருந்துகிறோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு