Published:Updated:

அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...

அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...
பிரீமியம் ஸ்டோரி
அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...

ப.சூரியராஜ், ஓவியங்கள்: ஷண்முகவேல்

அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...

ப.சூரியராஜ், ஓவியங்கள்: ஷண்முகவேல்

Published:Updated:
அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...
பிரீமியம் ஸ்டோரி
அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...

வ்வளவு நாளைக்குத்தான் அரசியல்வாதிகளின் வீடுகளுக்கும் அதிரடி நடிகர்கள் வீடுகளுக்கும் வருமான வரித் துறையிலிருந்து ரெய்டு போவார்கள்? ஒரு மாற்றத்துக்கு அவர்களின் வாடகை கால் டாக்ஸிகளை இயக்குநர்களின் ஏரியாவுக்குத் திருப்பிவிட்டோம். அதிகாரிகளின் கண்களில் சிக்கிய சீக்ரெட்கள் இங்கே...

அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...

பாலா

மால்களில் இருக்கும் ஹாரர் ஹவுஸுக்குள் நுழைந்தால் எப்படி இருக்குமோ... அதுதான் இவர் அலுவலகம். மருத்துவக் கல்லூரியில் மாடலுக்காக வைக்கப்பட்டிருப்பதைப் போல ஸ்மால், மீடியம், லார்ஜ், எக்ஸெல், டபுள் எக்ஸெல் என வெவ்வேறு சைஸ் எலும்புக்கூடுகளைக் குறுக்கும் மறுக்குமாகக் கூரையில் தொங்கவிட்டிருப்பார். தோட்டத்தில் செடி, கொடி வெட்டும் பெரிய சைஸ் கத்திரி ஒன்றை ஷார்ப்பாகச் சாணை பிடித்து சோஃபாவுக்கு அடியில் வைத்திருப்பார். அதைக்கொண்டுதான் ஹீரோக்களுக்கு `அரைமண்டை அட்டாக்’ நடக்கும். உள்ளே அலுவலகத்தின் சுவர்களில் பிரவுன்  நிறத்தில்  சுண்ணாம்பு  அடிக்கப்பட்டிருக்கும். சம்பவமான ஹீரோக்களின் மண்டையைச் செம்பழுப்பு நிறத்தில் மாற்றத்தான் இந்த ஏற்பாடு. தலையைப் பிடித்து சுவற்றில் `வ்ருட்டு... வ்ருட்ட்ட்ட்’ என இரண்டு தேய் தேய்த்தால் போதும், தலைமுடி ஒவ்வொன்றும் செம்புக் கம்பியாய் மின்னும். அதேபோல், பீரோவுக்குள் மூன்று கோடு்போட்ட டி-ஷர்ட்டுகள், நான்கு அரைடவுசர்கள், ஐந்து அண்டர்வேர்கள் கண்டிப்பாக இருக்கும். ஏன்னா, அரைமண்டையும்  அரைடவுசரும்தானே நம்ம காம்பினேஷன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...

ஷங்கர்

கறுப்புப் பணம், ஐ.டி ரெய்டு எல்லாம் ஷங்கர் படங்களின் மூலம்தான் நமக்கே அறிமுகம்! அப்படியிருக்கையில் அவர் வீட்டில் எதுவும் எக்குத்தப்பா, கணக்குத்தப்பா சிக்க 2.0 சதவிகிதம்கூட சான்ஸ் இல்லை. ஒட்டுமொத்த வீடும் ஜொலிஜொலிக்குமே பிரமாண்டமாய். பிரமாண்டமான டூத்பிரஷ், பிரமாண்டமான இட்லித்துணி, பிரமாண்டமான காய்கறிகள்  போட்டுவைக்கும் பிரமாண்டமான கேரிகவர், காய்ந்த துணிகளைப் போட்டுவைக்கும் பிரமாண்டமான நாற்காலி, பிரமாண்டமான குப்பைத்தொட்டி என வீட்டில் எல்லாமே பிரமாண்டம்தான். அலசித்தேடினால் கோடிக்கணக்கில் காலியான பெயின்ட் டப்பாக்கள் கிடைக்கலாம்!

அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...

கௌதம் மேனன்

கௌதம் மேனன் அலுவலகத்தில் கௌதம் கூட இல்லாமல் இருக்கலாம், ஆனால், காபி... மஸ்ட்... மஸ்ட்! ரிசப்ஷனில் அவரே பாடிய `நீதானே என் பொன்வசந்தம்...’, `மன்றம் வந்த தென்றலுக்கு...’ போன்ற பாடல்கள் போட்டுப் பீதியைக் கிளப்புவார்கள்! அங்கிருந்து உயிர்பிழைத்து உள்ளே நுழைந்தால் அதுதான் என்கவுன்ட்டர் ரூம். தனது ஹீரோக்களின் கையில் மாட்டிவிட, வளைகாப்புக்கு வளையல் செட் வாங்குவதுபோன்று, விதவிதமான எவர்சில்வர் காப்புகள் குவியல் குவியலாகக் கைப்பற்றப்படும். அலுவலகத்தின் குறுக்கே கயிறு கட்டப்பட்டு, காக்கி யூனிஃபார்ம்கள் கஞ்சி போடப்பட்டுக் காயப்போடப்பட்டிருக்கும். கிடார், ஆங்கில இலக்கியங்கள், ஆங்கில அகராதி, காட்டன் சேலைகள் என நிறைய கிடைக்கும்.

அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...

ஹரி

அலுவலகத்தையே ஆய்வுக்கூடம்போல் மாற்றிவைத்திருப்பார் இயக்குநர் சிங்கம். விதவிதமான லேகிய டப்பாக்களில் பாஸ்பரஸும் கலர் கலர் கண்ணாடி பாட்டில்களில் நல்லெண்ணெய், வேப்பெண்ணெய், கடலெண்ணெயில் ஆரம்பித்து பெட்ரோல், டீசல் வரை நிறைய ஆல்டைப் ஆஃப் ஆயில்களும் ஊற்றி வைக்கப்பட்டிருக்கும். அதை வைத்துத்தான் எதை எதைப் பற்றவைத்தால் பனைமரம் பறக்கும், எதைக் கொளுத்திவிட்டால் சுமோக்கள் தெறிக்கும் என்கிற ஆல்டைம் ஆராய்ச்சி மும்முரமாக நடக்கும். அலுவலகத்தின் ரகசியமான பகுதிகளில் கத்தை கத்தையாகக் காகிதங்கள் கிடைக்கும். எல்லாமே `பருப்புல ஒசந்தது முந்திரி, பதவில ஒசந்தது மந்திரி’ டைப் சிங்கம் 4-5-6-7-இன்ஃபினிட்டி பாகங்களுக்கான வசனங்கள்! அதையெல்லாம் புரட்டிப் படிக்க ஆரம்பித்தாலே அதிகாரிகளுக்கு அல்சர் வந்துவிடும்! 

அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...

ஏ.ஆர்.முருகதாஸ்

முருகதாஸின் அலுவலகம் முழுக்க அறிவியல் வாத்தியாரின் வீடுபோல ரெக்கார்டு நோட்டுகளாக அடுக்கியிருக்கும். எல்லாமே அசிஸ்டென்ட்களுக்குக் கொடுக்கப்பட்ட அறிவியல், புவியியல், வரலாறு, சமூகவியல், மாரல் சயின்ஸ், என்விரான்மென்டல் சயின்ஸ் அசைமென்ட்டுகள். புதுப்புது கதைகள், ஒன்லைன்கள், காட்சிகள், கிளைமாக்ஸ் மைக்புடி வசனங்கள் அவற்றிலிருக்கும். வீட்டுக்குள் அன்லிமிடெட் வைஃபையும்கூட. அதில்தான் அசிஸ்டென்ட்ஸ் விக்கிபீடியா, வீடியோ கேம், உலக சினிமாக்கள் என எதையாவது பார்த்து ஒன்லைனைத் தேடிக்கொண்டிருப்பார்கள். ரெய்டு செல்பவர்களுக்குப் பசியாற இட்லி சுட்டுக் கொடுக்கப்படும். பசி தீர்ந்ததுக்குப் பிறகும் இட்லி கேட்டால், கரண்டியைத் திருப்பி பொடனிலேயே போடுவார். துப்பாக்கி, கத்தி, கரண்டி...

அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...

மிஷ்கின்

மிஷ்கின் வீட்டுக்குள் ரெய்டுசெல்ல நினைக்கும் அதிகாரிகள், முதல்வேளையாக டார்ச்லைட்டோ, பெட்ரமாக்ஸ் லைட்டோ வாங்கிக்கொள்ளவும். இருட்டிலேயே வாழ்றவர். உள்ளே அலமாரியில் ஆயிரக்கணக்கில் புத்தகங்கள் அடுக்கி வைத்திருப்பார். சலித்துக்கொள்ளாமல் ஒவ்வொரு புத்தகமாய் திறந்து சல்லடை போட்டுத் தேடினால் கண்டிப்பாக ஏதாவது கிடைக்கும்.  உலக சினிமா சிடிகள் சிக்காமல் போனாலும், அவர் குட்டிபோடுமென நினைத்து அரிசிபோட்டு வளர்த்த மயில் இறகாவது கிடைக்கும். அதேபோல் தனது ஸ்டைலில் வீட்டுக்குள்ளேயே சுரங்கப்பாதை அமைத்திருப்பார். வயலின்கள் வைப்பதற்கென்றே பச்சை நிறத்தில் பத்துக்குப் பத்து அறை ஒன்றும் அமைத்திருப்பார். இதுவும் பச்சைதானேப்பா...

அலசுங்கோ... தேடுங்கோ... ரெய்டுங்கோ...

சிவா

வேஷ்டி சட்டைமுதல் ஸ்பேஸ் சூட் வரை நிறையவே குவியல் குவியலாகக் கிடைக்கும். எல்லாமே ஒரே சைஸ்.  ஸ்லிம் ஃபிட்! சுவறெல்லாம் ‘‘முதுகு... துரோகம்... நம்பிக்கை... மனசு நிறைஞ்சிருக்கு... ஆபரேஷன்... நண்பா... தல ரசிகர்கள்... விஸ்வாசம்... விசுவாசம்’’ மாதிரி தொடர்பில்லாத வாசகங்கள் கிறுக்கப்பட்டிருக்கும். கட்டுக்கட்டாக வீட்டின் பூஜை அறையில் காகிதங்கள் கிடைக்கலாம். எல்லாமே அஸிஸ்டென்ட் டைரக்டர்கள் எழுதிய `வி’யில் தொடங்கி `ம்’இல் முடிகிற தலைப்பு சாய்ஸ்கள்!  கேஸ் ஸ்டவ், மிக்ஸி, கொசுவிரட்டி மெஷின் போன்றவற்றை எப்படி ஹேக் செய்வது மற்றும் சமிக்ஞை மொழி போன்றவை சம்பந்தபட்ட புத்தகங்களை பிரவுன் ஷீட் போட்டுப் பத்திரமாய் பாதுகாத்து வைத்திருப்பார். பல்கேரியாவிலுள்ள அலுவலகத்தில் ரெய்டு நடத்தினால் `விவேகம்’ படத்தின் டெலிட்டட் காட்சிகள் நிறைய கிடைக்கலாம். உஷாராகிடுங்க அதிகாரிகளே!