Published:Updated:

“அரவிந்த் சாமியும் நானும் செம க்ளோஸ்!”

“அரவிந்த் சாமியும் நானும் செம க்ளோஸ்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“அரவிந்த் சாமியும் நானும் செம க்ளோஸ்!”

உ.சுதர்சன் காந்தி

`துருவங்கள் பதினாறு’ படம் மூலம் ``யார்ரா இந்தச் சின்னப் பையன்?’’ என ஷாக் கொடுத்தவர் அடுத்து அரவிந்த்சாமியுடன் `நரகாசூரன்’ என வந்து நிற்கிறார். கோலிவுட்டின் இளம் இயக்குநர் கார்த்திக் நரேனிடம் பேசினேன்.

“உங்களுக்குப் பிடிச்ச இயக்குநர் கெளதம் மேனனே உங்களோட இரண்டாவது படத்தைத் தயாரிக்கிறேன்னு சொன்னது எப்படி?”  

‘`முதல் படத்தோட ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் பண்ணலாம்னு ப்ளான் பண்ணும்போது, கெளதம் சாரை அப்ரோச் பண்ண முடிவு பண்ணேன். அவருக்கு வாட்ஸ்அப்ல  படத்தோட போஸ்டரை அனுப்பினேன். அவருக்குப் பிடிச்சுப்போய் `ஓகே. வாங்க சந்திக்கலாம்’னு சொன்னார். முதல்முறையா ஒரு காபி ஷாப்ல கெளதம் சாரை மீட் பண்ணேன். நான் படத்தைப் பத்திப் பேசிட்டு, ‘படம் முடிச்சுட்டுச் சொல்றேன் சார். கண்டிப்பா பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க’னு சொன்னேன். `சரி’னு சொன்னார். அப்புறம் அவர் தொடர்புல இல்லை. படம் ரிலீஸ் ஆகி மூணு நாள் கழிச்சு, ‘படத்தைப் பத்தி நல்ல விமர்சனங்கள் வர்றது சந்தோஷமா இருக்கு. நான் படம் பார்த்துட்டுச் சொல்றேன்’னு கெளதம் சார்கிட்ட இருந்து ஒரு மெசேஜ் வந்துச்சு. அடுத்த ரெண்டு நாள்ல படத்தைப் பாராட்டி ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதுல `அடுத்த படத்தைப் பத்திப் பேசுவோமா?’னு கேட்டிருந்தார். உடனே, அவர் ஆபீஸுக்குப் போனேன். ‘உங்களோட அடுத்த படத்தை நானே தயாரிக்கிறேன்’னும் சொன்னார். அப்போ சொன்ன கதைதான் இந்த ‘நரகாசூரன்’. அவர் தயாரிக்கிறேன்னு சொன்னப்போ, வானத்துல பறந்த ஃபீலிங் எனக்கு!”

`` ‘நரகாசூரன்’ல என்ன ஸ்பெஷல்?”

‘`இது ஒரு சஸ்பென்ஸ் ட்ராமா.  அரவிந்த்சாமி சார் கிட்ட கதை சொல்லப்போனப்போ, ‘நீங்க எனக்காக ஸ்கிரிப்ட் பண்ணணும்னு பண்ணாதீங்க. நான் உங்க ஸ்கிரிப்ட்டுக்குள்ள வர்றேன்’னு சொன்னார். ரொம்பச் சரியான நடிகர்கூடத்தான் ட்ராவல் பண்ணப்போறோம்னு நம்பிக்கை வந்துச்சு. தயாரிப்பாளர்ங்கிற முறையில கெளதம் சாரும் எனக்கு எந்த அழுத்தமும்  கொடுக்கலை. நான் என்ன யோசிச்சேனோ, எழுதினேனோ அதை அப்படியே படமா எடுத்திருக்கேன்.’’

“அரவிந்த் சாமியும் நானும் செம க்ளோஸ்!”

“இப்ப ஷ்ரேயா தமிழ்ல படங்கள் அவ்வளவா பண்றதில்லையே... அவங்க எப்படி இந்தப் படத்துக்குச் சரியா இருப்பாங்கனு முடிவு பண்ணீங்க?”

“படத்துல அரவிந்த்சாமி சாரோட கேரக்டர் பெயர் துருவா. ஷ்ரேயா கேரக்டரோட பெயர் கீதா. இதுவரை அரவிந்த்சாமி சார்கூட ஜோடி சேராத ஒரு ஹீரோயின் தேவைப்பட்டாங்க. யாரை நடிக்க வைக்கலாம்னு பேச்சு இருந்தப்போ நான்தான் ஷ்ரேயா நடிச்சா நல்லா இருக்கும்னு சொன்னேன்.  அவங்ககிட்ட இந்தப் படத்தோட கதையை நாலரை மணி நேரம் விவரிச்சுச் சொன்னேன். ரொம்ப நுணுக்கமா கவனிச்சுட்டு இருந்தாங்க. கதை கேட்டு முடிச்சவுடனேயே ஓகே சொல்லிட்டாங்க.”

“மலையாள நடிகர் இந்திரஜித் எப்படிப் படத்துக்குள்ள வந்தார்?”

 “ ‘நான் ‘ஏஞ்சல்ஸ்’னு ஒரு மலையாளப் படம் பார்த்தேன். அதுல இந்திரஜித் சாரோட பெர்ஃபாமன்ஸ் செமையா இருக்கும். ஸ்கிரீன்ல நான் நடிக்கிறேன்னு தன்னைக் காண்பிக்காம அந்தக் கேரக்டருக்கு என்ன தேவையோ அதை மட்டும் ரொம்ப அழகா பண்ணியிருப்பார். இந்த கேரக்டருக்கும் முதல் சாய்ஸா இந்திரஜித் சாரைத்தான் வெச்சிருந்தேன். அவரை டெக்னீஷியன்ஸ் மூலமா கான்டாக்ட் பண்றதுக்கும் ஈஸியா இருந்துச்சு. ஏன்னா, ‘ஏஞ்சல்ஸ்’ படத்தோட டெக்னீஷியன்ஸ்தான் ‘துருவங்கள் பதினாறு’ படத்துலேயும் வொர்க் பண்ணியிருந்தாங்க. மியூசிக் டைரக்டர் தவிர, இந்தப் படத்துக்கும் என் முதல் படத்துல வேலை செஞ்ச அதே டீம்தான்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“அரவிந்த் சாமியும் நானும் செம க்ளோஸ்!”

“ரஹ்மான், அரவிந்த்சாமி, இந்திரஜித் மாதிரியான சீனியர் நடிகர்களை இயக்கும் அனுபவம் எப்படி இருந்தது?”

‘`ரஹ்மான்மேல எனக்கு மரியாதை அதிகம். சீனியர் நடிகரா இருந்தாலும், எனக்கு என்ன தேவையோ அதைக் கச்சிதமா பண்ணிக் கொடுத்தார். முதல் படத்துல இருந்த பயத்தை இரண்டாவது படத்துல அரவிந்த்சாமி சார் உடைச்சிட்டார். ‘நான் சினிமா வாழ்க்கையை ஆரம்பிக்கும்போது என் வயசு 21. அதனால, உன்னோட மனநிலையை என்னால புரிஞ்சுக்க முடியும். அந்த ஒரு வேவ்லென்த்லதான் நான் உன்கூட வேலை செஞ்சுட்டு இருக்கேன்’னு சொல்லி என்னை ஒரு நண்பனா நடத்தினார். நானும் அவரோட செம க்ளோஸ் ஆகிட்டேன்’’

‘`டெக்னீஷியன்ஸ்?”

‘` ‘மாயா’ படத்தோட இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எலெக்ட்ரானிக் அதிகமா பயன்படுத்தாம, நேச்சுரல் இசையை அதிகமா பயன்படுத்தியிருப்பார் ரான் யோகன். அதனாலதான், இந்தப் படத்துக்கு அவரைப் பயன்படுத்தினேன். டெக்னிக்கலா அதே டீம், இன்னும் மிரட்டலான கதை எனப் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. பாத்துட்டுச் சொல்லுங்க.”

நம்பிக்கையோடு கைகுலுக்குகிறார் கார்த்திக் நரேன்.