Published:Updated:

திருட்டுப்பயலே - 2 - சினிமா விமர்சனம்

திருட்டுப்பயலே - 2 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
திருட்டுப்பயலே - 2 - சினிமா விமர்சனம்

திருட்டுப்பயலே - 2 - சினிமா விமர்சனம்

முக்கியப்புள்ளிகளின் செல்போன் பேச்சுகளை ஒட்டுக்கேட்பதையே வேலையாகக் கொண்ட மோசடி போலீஸ்,  அவன்  மனைவிக்கே ஸ்கெட்ச் போடும் ஃபேஸ்புக் ப்ளேபாய் என இரண்டு திருடர்களுக்கும் இடையே நடக்கும் சைபர் க்ரைம் சண்டைகள்தான் திருட்டுப்பயலே - 2.

ஆபாசம் கூட்ட ஆயிரம் வாய்ப்புகள் இருக்கிற கதை. அதைத் தவிர்த்துவிட்டு ஆன்லைன் ஆபத்துகள் பற்றி அக்கறையாகப் படமெடுத்திருக்கும் இயக்குநர் சுசி கணேசனுக்குப் பாராட்டுகள். காலமாற்றத்திற்கு ஏற்றபடி ஃப்ரெஷ்ஷான களம் பிடித்து, கச்சிதமாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். க்ரைம் த்ரில்லர்  நாவல்போல  மூச்சுவிடக்கூட முடியாத  அளவுக்குத் திரைக்கதையில் அத்தனை முடிச்சுகள்.

திருட்டுப்பயலே - 2 - சினிமா விமர்சனம்

வேண்டிய அளவே நடித்து வெளுத்து வாங்கியிருக்கிறார் பாபி சிம்ஹா. காதல் அத்தியாயங்கள் கொஞ்சம் காலை வாரினாலும், வில்லத்தனமான பார்வையில் சமன் செய்துவிடுகிறார்.

சிக்ஸ் பேக், டிரிம் தாடி, ரொமான்டிக் கண்களோடு ஆன்லைன் ரோமியோவாக பிரசன்னா. முகத்தில் மாறாத புன்னகையோடு வெளிப்படுத்தும் சைக்கோத்தனம் மிரட்டுகிறது.கேலி, ரொமான்ஸ், பயம், பதற்றம் எனப் பல உணர்வுகளை வெளிப்படுத்தக் கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் அமலாபால்.  `பினாமி சேட்ஜி’யாக வரும் பிரதீப் கே விஜயனும், காவல் அதிகாரி முத்துராமனும் கவனிக்க வைக்கிறார்கள்.

``எல்லாத் தனி மனிதனும் கரப்டா இருக்க ஆசைப்படறான், சொசைட்டி மட்டும் எப்படி க்ளீனா இருக்கும்?”, ``ரகசியம் மாட்டிக்கிட்டா, வாய் வீறாப்பு பேசும்... மனசு ஐயோ அம்மானு அலறும்” எனப் படத்தைத் தாங்கிப்பிடிக்கின்றன பக்குவமான வசனங்கள்.

ரொமான்ஸ் காட்சிகளில் ஐஸ்க்ரீமாகவும், ஆக்‌ஷன் காட்சிகளில் புல்லட் ட்ரெயினாகவும்  வேலை செய்திருக்கிறது பி.செல்லதுரையின் கேமரா. திரைக்கதையை, குழப்பாமல் தேவையான பரபரப்புடன் கொடுத்திருக்கிறது ராஜா முகமதுவின் எடிட்டிங். பிரசன்னாவின் பிரமாண்டமான வீடு, சிம்ஹாவின் ரகசிய ரெக்கார்டிங் ரூம், அமலா பாலின் வீட்டு அலங்கரிப்பு என ஆர்.கே.நாகுராஜுவின் கலை இயக்கம் கச்சிதம். இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு நல்ல கம்பேக்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
திருட்டுப்பயலே - 2 - சினிமா விமர்சனம்

முகம் தெரியாதவர்களுடனான ஃபேஸ்புக் நட்பின் அபாயங்களை உணர்த்துவது சரி, அதற்காக ஃபேஸ்புக்கில் பெண்கள் இருப்பதே ஆபத்து என்ற ரீதியில் அதைக் காட்சிப்படுத்தியிருப்பது நெருடல்!

வீட்டுக்குள் நுழையும் சைபர் கிரிமினல்களை அடையாளம் காட்டியதற்காகவே திருட்டுப்பயல் பாராட்டுக்குரியவன்.

- விகடன் விமர்சனக் குழு