Published:Updated:

“இனி அனிமேஷன் படங்கள்தான்!”

“இனி அனிமேஷன் படங்கள்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“இனி அனிமேஷன் படங்கள்தான்!”

ப.சூரியராஜ்

“இனி அனிமேஷன் படங்கள்தான்!”

ப.சூரியராஜ்

Published:Updated:
“இனி அனிமேஷன் படங்கள்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
“இனி அனிமேஷன் படங்கள்தான்!”

காக்கி உடையில் கார்த்தியின் மிடுக்கையும், கதை சொல்லலில் வினோத்தின் டீடெய்ல்ஸையும் தாண்டி இன்னுமொரு படி `தீரனை’ ரசிக்கவைத்தது, படத்திலுள்ள இரண்டு அனிமேஷன் அத்தியாயங்கள். இரண்டில் ஒன்றை படு ஸ்டைலிஷாகவும், மற்றொன்றை செம க்ளாஸாகவும் தந்து ரசிகர்களை அட போட வைத்திருக்கிறார்கள் `ஹைப்ரீட் ஸ்டுடியோஸ்’ குழுவினர். குழுவில் ஒருவரான ஓவியர் செந்திலிடம் பேசினேன்.

``யார் ப்ரோ நீங்கெல்லாம்?’’

“ ஜெயச்சந்திரன், பாலச்சந்தர், நான்னு மூணு பேரும் சென்னை கவின் கலைக் கல்லூரில க்ளாஸ்மேட்ஸ். மூணு பேரும் படிப்பை முடிச்சுட்டு வெவ்வேறு இடங்கள்ல வேலை பார்த்துட்டிருந்தோம். அனிமேஷன் துறையில் சாதிக்கணும்ங்கிற ஆர்வம் மட்டும் எங்களை ஆட்டிப்படைச்சுட்டிருந்தது. கிட்டத்தட்ட ஏழு வருசம் கழிச்சு, மூணு பேரும் சேர்ந்து ஸ்டுடியோ தொடங்கி, அனிமேஷன் வேலைகள் பண்ணிட்டிருந்தோம். அப்போதான் `மூடர் கூடம்’ நவீன் வந்தார். அந்தப் படத்தில் குபேரன் முன்கதையை அனிமேஷனாகப் பண்ணோம். அது பரவலாகக் கவனிக்கப்பட்டுச்சு. அடுத்ததாக ஹெச்.வினோத்தின் `சதுரங்க வேட்டை’யில் சில காட்சிகள் பண்ணோம். வினோத்துடனான முதல் சந்திப்பே ரொம்ப சுவாரஸ்யமானது. நான் விகடனுக்காக நிறைய ஓவியங்கள் வரைஞ்சிருக்கேன். அப்படி நான் வரைஞ்சிருந்த ஒரு ஓவியத்தைச் சொல்லி `விகடன்ல செந்தில்னு ஒருத்தர் வரையுறார். அந்த ஸ்டைலிலேயே பண்ணிக் கொடுங்க’னு வினோத் கேட்க, `அந்தச் செந்திலே நான்தான்’னு சொல்ல, மனிதர் ஷாக் ஆகிட்டார்.’’

“இனி அனிமேஷன் படங்கள்தான்!”

`` `தீரன்’ அனுபவம் சொல்லுங்க?’’

“படத்தில் இரண்டு இடங்கள்ல அனிமேஷன் சீக்வன்ஸ் வரும். ஒரு சீக்வன்ஸை இன்ஃபோகிராபிக் ஸ்டைலில் பண்ணோம். இன்னொரு சீக்வன்ஸ், 18-ம் நூற்றாண்டில் நடந்த கதையைச் சொல்றதுனால முழுக்க முழுக்க பெயின்ட்டிங்காகவே பண்ணோம்.  இந்தப் பெயின்ட்டிங்தான் ரொம்பவே சவாலா இருந்துச்சு. ஏறக்குறைய 4,000 ஃப்ரேம்கள் வரைய வேண்டியிருந்தது. இதுக்காகவே 10 ஓவியர்களை வேலைக்கு எடுத்து, அவங்களுக்குப் பயிற்சியும் கொடுத்தோம். வினோத் ஷூட்டிங் ஆரம்பிக்கும்போதே, நாங்க வரைய ஆரம்பிச்சுட்டோம். அந்த மூன்றரை நிமிட சீக்வன்ஸை வரைந்து அவுட் புட் எடுக்க ஆறு மாசம் ஆச்சு ப்ரோ!”

``தமிழில் முழுநீள அனிமேஷன் திரைப்படங்கள் வெளியாகி, வெற்றிகரமான படமாகவும் அமையும் காலம் வருமா?’’

“தமிழ் சினிமாவில்  ஏற்கெனவே சில அனிமேஷன் படங்கள் வந்திருக்கு. ஆனால், அப்போ நாம அதன் ஆரம்ப நிலையில்தான் இருந்தோம். இப்போ கொஞ்சம் கொஞ்சமா அனிமேஷன் துறையில் வளர்ச்சி அடைஞ்சுட்டு வர்றோம். நிறைய திறமையும் அனுபவமும் வாய்ந்த டெக்னீஷியன்கள் உருவாகிட்டு வர்றாங்க. அதனால், கண்டிப்பா தமிழ் சினிமாவில் முழுநீள அனிமேஷன் திரைப்படங்கள் வெளியாகி, அவை வெற்றிகரமான படங்களாகவும் மாறும் காலம் ரொம்ப தூரம் இல்லைனு நினைக்கிறேன். இனி அனிமேஷன் படங்கள்தான் நிறைய வரும். அனிமேஷன் படங்கள்னா வெறும் காமெடிப் படங்கள் மட்டும் இல்லாம, சீரியஸான படங்களும் வரும். வரணும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“இனி அனிமேஷன் படங்கள்தான்!”

``ஒரு திரைப்படத்தின் கதை சொல்லலில் அனிமேஷன் எந்தளவுக்குத் தேவையானதா இருக்கு?’’

“அனிமேஷன் ரொம்ப சுவாரஸ்யமானது. படம் பார்த்துட்டிருக்கும்போது இடையில் திடீர்னு வந்து உங்களை வேறொரு உலகத்துக்குக் கூட்டிட்டுப் போயிடும். `தீரன்’ல வர்ற இரண்டாவது சீக்வன்ஸை நிஜத்தில் படமாக்கினால் மூன்று கோடி ரூபாய் வரை செலவாகும். அதை அனிமேஷனாகப் பண்ணும்போது குறைந்த செலவிலேயே முடிச்சிடலாம். வெறும் வாய்ஸ் ஓவரிலேயே பிரமாண்டத்தைக் கொண்டு வந்துடலாம்.’’