Published:Updated:

சினிமாவில் பெண்கள்!

சினிமாவில் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சினிமாவில் பெண்கள்!

உ.சுதர்சன் காந்தி, ஆர்.வைதேகிபடங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து, வீ.நாகமணி, க.பாலாஜி

சினிமாவில் பெண்கள்!

உ.சுதர்சன் காந்தி, ஆர்.வைதேகிபடங்கள்: சு.குமரேசன், பா.காளிமுத்து, வீ.நாகமணி, க.பாலாஜி

Published:Updated:
சினிமாவில் பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
சினிமாவில் பெண்கள்!

சினிமா ஆண்களுக்கான ஊடகம் என்பதுபோய் பெண்களின் ஊடகமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் கோலிவுட் கொண்டாட வேண்டிய குதூகலச் செய்தி. நடிகைகளாக, மேக்-அப் ஆர்ட்டிஸ்ட்களாக மட்டுமன்றி இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் எனப் பெண்களின் பங்கு சினிமாவில் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. அப்படி சினிமாவில் கலக்கும் லேட்டஸ்ட் முகங்கள் இவர்கள்!

`‘இயக்குநரா ஜெயிக்கணும்!’’

பிரியதர்ஷினி

“நான் முதல்ல ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் ஸ்க்ரிப்ட் எழுதினேன். பெரிய பட்ஜட், பெரிய நடிகர்கிட்ட அப்ரோச் பண்ணும்போது கால்ஷீட் பிரச்னை இருந்தது. அதனால், மறுபடியும் ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை ரெடி பண்ணி அதைத்தான் வரலட்சுமியிடம் சொன்னேன். முதல் படத்தையே தமிழ், தெலுங்கு, இந்தினு  மூன்று மொழிகளில் இயக்கும் அனுபவம் செம சவாலா இருக்கு” எனச் சொல்லும் பிரியதர்ஷினி மிஷ்கினிடம் சினிமா பயின்றவர். `சக்தி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சினிமாவில் பெண்கள்!

“என் சொந்த ஊர் உடுமலைப் பேட்டை. சின்ன வயசுல இருந்தே ஏதாவது கிரியேட்டிவா பண்ணிட்டே இருப்பேன். எனக்கு எழுத்து, சினிமா மேல ஆர்வம் அதிகமா இருந்துச்சு. அதுதான் மிஷ்கின் சார்கிட்ட உதவி இயக்குநரா சேர வெச்சதுனு நினைக்கறேன். அவரோட ரெண்டு படங்கள்ல உதவி இயக்குநரா இருந்தேன். இப்போ தனியா படம் பண்றேன்’’ என்கிறார் ப்ரியதர்ஷினி.

“வெற்றியை அடைய ஒரு ஆண் நூறு சதவிகிதம் போராடினால், பெண்கள் இருநூறு சதவிகிதம் போராட வேண்டியிருக்கு. அதைத்தான் என் படத்துலயும் சொல்லியிருக்கேன். இந்த மாதிரியும் ஒரு ஹீரோயின் சப்ஜக்ட் படம் பண்ணலாம்னு சொல்ற அளவுக்கு இந்தப் படம் இருக்கும்னு நம்புறேன். இதுதான் ப்ளான்னு சொல்ல முடியாது. ஆனா, ஓர் இயக்குநரா ஜெயிக்கணும். என்னால் முடிஞ்ச ஒரு சின்ன மாற்றத்தை இந்தச் சமுதாயத்துல ஏற்படுத்தணும்.’’

‘`தேசிய விருதுதான் என் டார்கெட்...’’

சுனுலட்சுமி

“ரெண்டு குழந்தைகளுக்கு அம்மா கேரக்டர்னு சொன்னவுடனே, கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு. ஆனாலும், இந்த வயசுல இந்த மாதிரியான ரோல் பண்ணா வித்தியாசமா இருக்கும்னு உடனே ஓகே சொல்லிட்டேன். உண்மையாவே, நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். ஒரு அம்மானா என்ன, அவங்களோட வலி, பாசம், அரவணைப்புனு ஒரு தாயாகவே வாழ்ந்த அனுபவம் புதுசா இருந்துச்சு. `அறம்’ சுமதி ரோலுக்குதான் நன்றி சொல்லணும்” என சுனுலட்சுமி பேசும் வார்த்தைகளில் தன் நடிப்பு கவனிக்கப்பட்டதன் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சினிமாவில் பெண்கள்!

“என் சொந்த ஊர் எர்ணாகுளம். எனக்கு ஸ்கூல் படிக்கும்போதே டான்ஸ், ஷார்ட் ஃபிலிம்ஸ்னு கலை மேலே ஆர்வம் அதிகமாகிடுச்சு. கேரளாலயே முறைப்படி டான்ஸ் கத்துக்கிட்டு, இப்போ கோரியோவும் பண்ணிட்டிருக்கேன். நான் நடிச்ச ஷார்ட் ஃபிலிம், விளம்பரங்கள் மூலமா, சினிமா வாய்ப்பு வரும்னு நினைச்சுப் பார்க்கல. ‘செங்காத்து பூமியிலே’னு ஒரு தமிழ்ப் படம்தான் என் முதல் படம். ‘டூரிங் டாக்கீஸ்’, ‘எப்போதும் வென்றான்’னு சில படங்கள் பண்ணேன். அப்புறம்தான், ‘அறம்’ படத்துக்கான வாய்ப்பு வந்துச்சு. நடிக்கும்போது மட்டும் இல்ல, உண்மையிலேயே அந்தக் குழந்தைகளோட  அம்மா மாதிரிதான் படம் முடியுற வரைக்கும் இருந்தேன். தன்ஷிகா எப்பவும் என் மடியிலேயேதான் உட்கார்ந்திருப்பாள். நான்தான் சாப்பாடு ஊட்டிவிடுவேன்.

 என்னை ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டுப் போற சீனுக்கு ரமேஷ் நிஜமாவே கண்கலங்கி நடிச்சான். அப்பதான் நாம உண்மையா அம்மாவாவே வாழ்ந்திருக்கோம்னு உணர்ந்தேன். நயன்தாரா மேடம் ஒருநாள் என்கிட்ட, ‘ஏன் இந்தச் சின்ன வயசுல அம்மா கேரக்டர் பண்ற?’னு கேட்டாங்க. ‘கதை ரொம்பப் பிடிச்சது. என்னை நிரூபிக்கவும் இந்த கேரக்டர் சரியா இருக்கும்னு தோணுச்சு. அதான் பண்றேன்’னு சொன்னேன். `ஆல் தி பெஸ்ட்’ சொல்லித் தட்டிக்கொடுத்தாங்க. செம உற்சாகமாகிட்டேன்.”

“எனக்கு ஒரே மாதிரி இல்லாம, ஒவ்வொரு படத்துலயும் வித்தியாசமான கேரக்டர் பண்ணணும்னு ஆசை. மலையாளம், தமிழ்னு நிறைய வாய்ப்புகள் வந்திட்டிருக்கு. ஆனா, வித்தியாசமான கதாபாத்திரத்துக்காக வெயிட்டிங். நல்ல நல்ல கேரக்டர்கள் நடிச்சு, தொடர்ந்து சினிமாவில் இருக்கணும். தேசிய விருதுதான் என் டார்கெட்” என நம்பிக்கையுடன் சொல்கிறார் சுனுலட்சுமி.

‘`அப்போ கலாய்ச்சவங்க இப்ப ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுக்குறாங்க’’

சிவாத்மிகா

“மியூசிக்ல எனக்கு இன்ஸ்பிரேஷன் என் லைஃப்தான். ஏன்னா, ஸ்கூல் படிக்கும்போது என்னோட சந்தோஷம், கஷ்டம் எல்லாத்தையும் வெளிப்படுத்த மியூசிக்கைத் தேர்ந்தெடுத்துக்கிட்டேன். மூணு வயசிலிருந்தே  கர்னாட்டிக் மியூசிக் கத்துக்க ஆரம்பிச்சேன். ஆறாவது படிக்கும்போதிலிருந்து நானே பாட்டு எழுதி மியூசிக் கம்போஸ் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இப்போ அந்த ஆர்வம்தான் இசையமைப்பாளர் வரை கொண்டுவந்திருக்கு” எனச் சொல்லும் சிவாத்மிகாவுக்கு வயது பத்தொன்பது. `ஆண்டனி’ படம்மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

சினிமாவில் பெண்கள்!

“நான் கோயம்புத்தூர் பொண்ணு. குடும்பத்தில் முதல் இசைக்கலைஞர் நான்தான். அதென்னவோ தெரியல படிப்புக்கும் எனக்கும் செட்டே ஆகல. நான் பதினொண்ணாவது படிக்கும்போது என்னை ஸ்கூல்ல இருந்து தூக்கிட்டாங்க. ஒரு முறை ஃபிசிக்ஸ் எக்ஸாம்ல நாலு மார்க்தான் வாங்குனேன்னா பார்த்துக் கோங்களேன். அப்போ, என் அப்பா `நீ பப்ளிக் மேக்ஸ் எக்ஸாம்ல நல்ல மார்க் எடுத்தா கீ போர்டு வாங்கித் தரேன்’னு சொன்னார். உடனே, நைட்டும் பகலும் படிச்சு ஏ1 க்ரேடு வாங்கினேன். என் அப்பாவுக்கு நான்தான் இவ்ளோ மார்க் வாங்கினேனானு ஒரே ஆச்சர்யம். என் இசை ஆர்வத்துக்கு வீட்டில் ஓகே சொன்னாங்க. ரஹ்மான் சார் காலேஜ்ல ஆறு மாசம் எலக்ட்ரானிக் மியூசிக் புரொடக்ஷன் கத்துக்கிட்டேன். அப்போதான் `ஆண்டனி’ பட வாய்ப்பு கிடைச்சது’’ எனப் படபடவெனப் பேசுகிறார் சிவாத்மிகா.

``நான் சரியா படிக்க மாட்டேங்கறதால, எனக்கு ஸ்கூல்ல யாரும் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. அன்னைக்கு நான் எக்ஸாம்ல ஃபெயில் ஆகுறேன்னு என்னைக் கிண்டல் பண்ணவங்க, இப்போ எனக்கு ஃபேஸ்புக்ல  ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுக்குறாங்க. அவங்களைத் திரும்பிப் பார்க்க வெச்சது சந்தோஷமா இருக்கு. எல்லோருடைய படங்களிலும் வேலை பார்க்கணும். கெளதம் மேனன், கார்த்திக் சுப்பராஜ், கார்த்திக் நரேன் இவங்க படங்கள்ல வொர்க் பண்ணணும்னு ஆசை. அப்புறம், மியூசிக் கம்போஸ் பண்றதுக்கு முன்னாடியே கதை எழுத ஆரம்பிச்சுட்டேன். அதனால், நிச்சயமா ஒரு படமாவது இயக்குவேன்” என அடுத்த ட்விஸ்ட் கொடுத்துப் புன்னகைக்கிறார் சிவாத்மிகா.

‘`அக்கா நடிப்பு... தங்கச்சி அரசியல்’’

பூஜா சரத்குமார்

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே ஷாப்பிங் போறது ரொம்பப் பிடிக்கும். ஏன்னா, அங்கதான் விதவிதமான கலர்களைப் பார்க்க முடியும். வித்தியாசமான கலர்ல எதையாவது பார்த்தா உடனே அதை வாங்கிடுவேன். நான் பி.காம் முடிச்சுட்டு ஸ்காட்லாந்துல மேனேஜ்மென்ட்  படிச்சேன். இப்போ நான் ஒரு ஈவன்ட் மேனேஜ்மென்ட் கம்பெனில வொர்க் பண்ணிட்டிருக்கேன். ஒரு நாள் என் அக்கா வரலட்சுமி  `நீ ஏன் படங்களுக்கு காஸ்ட்யூம் பண்ணக்கூடாது!’னு கேட்டாங்க. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் சொல்றாங்கனு நினைச்சு இதை பெரிய விஷயமா எடுத்துக்கலை. எனக்கே தெரியாம ‘சக்தி’ படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனிங் பண்றேன்னு தயாரிப்பாளர், இயக்குநர்கிட்ட சொல்லி, அடுத்த நாள் மீடியாவுல எல்லாம் வர வெச்சுட்டாங்க” என சினிமாவுக்குள் வந்த கதை சொல்கிறார் பூஜா சரத்குமார்.

சினிமாவில் பெண்கள்!

“அக்காவோட மத்த படங்களுக்கு பர்சனலா சில காஸ்ட்யூம் டிப்ஸ் தருவேன். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து படம் பார்த்தா என் கண்ணு, என்ன காஸ்ட்யூம் போட்டிருக்காங்க, அது எப்படி இருக்குனுதான் முதல்ல பார்க்கும். ஆனா, அக்கா அவங்க நடிப்பைப் பார்ப்பாங்க. அதை எல்லாம் கவனிச்சுதான் அக்கா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பாங்கனு நினைக்கிறேன்.”

“உங்களுக்கு நடிப்புல ஆர்வம் இல்லையா?” எனக் கேட்டால்... “ஐயோ... அதெல்லாம் நம்மளால முடியாதுங்க. எனக்கு அரசியல்ல ஆர்வம் அதிகம். அப்பாகிட்டயும் சொல்லிட்டே இருப்பேன். அப்பா கட்சியில சேர்ந்து இன்னும் நிறைய கத்துக்கிட்டு அப்புறம் அடுத்த கட்டத்துக்குப் போகணுங்கிறது என் ரொம்ப நாள் ஆசை. அக்கா நடிப்பு... தங்கச்சி அரசியல். சூப்பரா இருக்கில்ல?” என அடேங்கப்பா ப்ளான் சொல்கிறார் பூஜா.

‘`இந்தச் சமூகத்துக்கு என் இசை மருந்தா இருக்கணும்’’

பிந்துமாலினி

“ நானும் என் நண்பர் வேதாந்தும் நிறைய ஆல்பங்களுக்கு இசையமைச்சிட்டிருந்தோம். அப்பதான் `அருவி’ பட வாய்ப்பு எங்களுக்குக் கிடைச்சது. `அருவி’ மூலம் நிறைய பாராட்டுகள், அனுபவங்கள் கிடைச்சிருக்கு. இதில் இயக்குநர் அருண் பிரபுவுடைய பங்களிப்பும் முக்கியமானது. இசையின் தாக்கத்தைப் பத்தி நல்லா தெரிஞ்சு மியூசிக்கை வாங்குற திறமைசாலி” எனத் தன் முதல் படத்திற்குக் கிடைத்த வரவேற்பின் மகிழ்ச்சியோடு பேசுகிறார் பிந்துமாலினி.

சினிமாவில் பெண்கள்!

“எங்க வீட்ல எல்லோரும் பரதம், சங்கீதம், கச்சேரினு ஏதோ ஒண்ணுல ஸ்பெஷலிஸ்ட்டா இருப்பாங்க. அதனாலயே,  நானும் முறையா கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டேன். அஹமதாபாத்ல கிராஃபிக் டிசைனிங் படிச்சேன். வேதாந்துடன் இணைந்து மியூசிக் பண்ணலாம்னு ஒரு தோழி ஐடியா கொடுத்தாங்க. அவர் என் நண்பரும்கூட. சரி ட்ரை பண்ணலாம்னு ப்ளான் பண்ணி நான் கர்னாட்டிக் பாட ஆரம்பிக்க அவர் அதுக்கு வெஸ்டன் மியூசிக் போட்டார். அது வித்தியாசமா வர ஆரம்பிச்சு, நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்க உற்சாகமாகிட்டோம். ஒரு ஆல்பத்துல நாங்க ரெண்டு பேரும் பாடி இசையமைச்ச ‘மாயா...’ங்கிற ஒரு பாட்டுதான் இப்போ நாங்க மியூசிக் டைரக்டரா இருக்கக் காரணம்.

‘அருவி’ படம் ஒரு பெண்ணைப் பத்தின கதைங்கிறதனால எல்லாப் பாடலையும் என்னையே பாடச்சொன்னார் அருண்பிரபு” என்று தன் இயக்குநரிடம் பணிபுரிந்த அனுபவங்களை நினைவிற்குக் கொண்டுவந்து சொல்லச்சொல்ல அவர் முகத்தில் புத்துணர்ச்சி பூக்கிறது.

``அடுத்து என்ன ப்ளான் வெச்சிருக்கீங்க?” என்றால், ‘`இந்தப் படம்தான் என் முதல் புராஜெக்ட். இதுக்குப் பிறகு, கன்னடத்துல இரண்டு படங்கள் பண்றேன். என்னால் முடிஞ்ச வரைக்கும் இந்தச் சமூகத்துக்கு நல்ல மருந்தா என் இசை இருக்கணும்னு ஆசைப்படுறேன்.’’

வாழ்த்துகள் பிந்து!

``ரஹ்மான் சொன்ன அட்வைஸ்!’’

ஸ்ரீநிதி வெங்கடேஷ்

‘`இசையமைக்கிறதைத் தாண்டி, ஒரு படத்துக்கான இசை எப்படித் தயாராகுதுங்கிறதைத் தெரிஞ்சுக்கிறதுல எனக்கு ஆர்வம் அதிகம். காலேஜ்ல எலெக்ட்ரானிக் மீடியா படிச்சிக்கிட்டே, ரஹ்மான் சாரோட ஸ்டூடியோல இன்டர்ன்ஷிப் பண்ணிட்டிருந்தேன். எட்டுவார இன்டர்ன்ஷிப்புக்காகப் போனது ஒரு வருஷத்துக்கும் மேல அங்கேயே என்னை இருக்க வெச்சுடுச்சு” என ஆஸ்கர் நாயகனிடம் சவுண்ட் இன்ஜினீயரான கதை சொல்கிறார் ஸ்ரீநிதி வெங்கடேஷ்.

சினிமாவில் பெண்கள்!

“ `ஒரு வருஷம் இன்டர்ன்ஷிப் பண்ணிட்டேன். வேலை தேடிட்டிருக்கேன். உங்ககிட்ட ஏதாவது வாய்ப்பிருக்குமா?’னு ரஹ்மான் சாருக்கு மெயில் அனுப்பினேன். `மீட் பண்ணலாம்’னு பதில் வந்தது. வெறும் அஞ்சு நிமிஷம்தான் பேசியிருப்பார். ஆறாவது நிமிஷத்துலேர்ந்து நான் அவர்கூட வொர்க் பண்ண ஆரம்பிச்சிட்டேன். நான் ரஹ்மான் சார்கிட்ட சேர்ந்தப்ப ‘ராவணன்’ மற்றும் ‘எந்திரன்’ படங்களுடைய வேலைகள் போயிட்டிருந்தது. டைட்டில் கார்டுல என் பேர் போட்டு வந்த இந்தப் படங்களை மறக்கவே முடியாது’’ என்பவர் ரஹ்மானின் இசைப்பயணத்தில் இன்று வரை கூடவே இருக்கிறார்.

``ஸ்டுடியோவுலயே  சின்ன கீ போர்டு வெச்சு ஜாலியா ஒரு சிங்கிள்ஸ் ரெடி பண்ணி யூட்யூப்ல போட்டேன். அதைப் பார்த்த பிறகுதான் நான் பாடுவேன்ங்கிறதே ரஹ்மான் சாருக்குத் தெரியும். ‘ஓகே கண்மணி’யின் ஹிந்தி வெர்ஷன் ‘ஓகே ஜானு’ படத்துல ஒரு பாட்டு பாடியிருக்கேன். ‘ரெமோ’ படத்துல அனிருத் மியூசிக்ல ‘சிரிக்காதே...’ நான் பாடினதுதான்.

`24’ படத்துல வொர்க் பண்ணதை மறக்கவே முடியாது. அங்கதான் இயக்குநர் விக்ரம் குமாரோடு அறிமுகம்.  முதல்ல அது வேலை சார்ந்த நட்பாதான் இருந்தது. படம் ரிலீசான பிறகு ‘கல்யாணம் பண்ணிக்கலாமா’னு கேட்டார். யோசிக்கவே இல்லை. `யெஸ்’ சொல்லிட்டேன். என் வேலையைப் பத்தி அவர் இதுவரைக்கும் ஒரு குறைகூடச் சொன்னதில்லை. ஆனா, நான் அப்படியே ஆப்போசிட். அவர் டைரக்ஷன்ல ஆயிரத்தெட்டுக் குறைகள் சொல்வேன். அப்பெல்லாம் ரஹ்மான் சாரின் அட்வைஸைக் கஷ்டப்பட்டு நினைவுபடுத்தி, அவர் சொன்னதுபோல் இருக்கணும்னு முயற்சி பண்ணுவேன். ஆமாம்,  ரஹ்மான் சார், கல்யாண இன்விடேஷன் கொடுக்கப்போனப்ப முதல்முறையா  அட்வைஸ் பண்ணினார். ‘கோபப்படக்கூடாது. பொறுமையா இருக்கணும். விக்ரம் வொண்டர்ஃபுல் பர்சன். அவரை மாதிரியே இருக்கணும்’னு சொன்னார். ட்ரை பண்ணிட்டே இருக்கேன்... முடியல’’ எனச் சிரிக்கிறார் ஸ்ரீநிதி.