Published:Updated:

சத்யா - சினிமா விமர்சனம்

சத்யா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சத்யா - சினிமா விமர்சனம்

சத்யா - சினிமா விமர்சனம்

சத்யா - சினிமா விமர்சனம்

சத்யா - சினிமா விமர்சனம்

Published:Updated:
சத்யா - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
சத்யா - சினிமா விமர்சனம்

முன்னாள் காதலியின் குழந்தை காணாமல் போகிறது. அதை மீட்கப் போராடும் நாயகனுக்குக் காத்திருக்கின்றன நூறு சர்ப்ரைஸ்கள்! அத்தனையும் தாண்டி குழந்தையை மீட்கும் திடுக், திகீர் அனுபவங்களே ‘சத்யா.’

தெலுங்கில் சைலன்ட் ஹிட்டான ‘க்ஷணம்’ படத்தை ரீமேக் செய்திருக்கிறார் ‘சைத்தான்’ இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. கதையில் திரும்பிய பக்கமெல்லாம் திருப்புமுனைகள்தான். கொஞ்சம் பிசகினாலும் முதுகெலும்பையே முறித்துவிடுகிற கதையை, குழப்பமில்லாமல் படமாக்கியதற்காகப் பாராட்டுகள் பிரதீப்! 

சத்யா - சினிமா விமர்சனம்

சிபிராஜுக்குப் பேர் சொல்லும் படம். பாடி லாங்குவேஜிலும் நடிப்பிலும் நல்ல முன்னேற்றம். காதலிக்கும் காலத்தில் குறும்பு இளைஞனாக, காதல் தோல்வியில் தாடிவாலாவாக, உண்மையைக் கண்டுபிடிக்க ஆக்‌ஷனில் இறங்கிப் பரபரக்கிறவராக என மூன்று ஏரியாவிலும் கலக்கியிருக்கிறார் சிபி.

 மகளைத் தொலைத்துவிட்டுப் பரிதவிக்கும் அம்மாவாக ரம்யா நம்பீசன் உருகவைக்கிறார். படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் இளம் போலீஸ் அதிகாரியாக வரலட்சுமி. அந்தக்குரலும் மிடுக்கும் கம்பீரமும் டாப் கிளாஸ்!

த்ரில்லர் கதையில் காமெடி ஏரியாவைக் குத்தகைக்கு எடுத்துக்கொள்கிறார் ஆனந்தராஜ். சதீஷுக்குக் கொஞ்சம் சீரியஸ் ரோல். கொஞ்சநேரமே வந்தாலும் ஒன்லைனர்களில் சிரிக்க வைக்கிறார் யோகி பாபு.

`‘மனசு சொல்றதைக் கேளுங்க சார். அது எப்பவும் தப்பு பண்ணாது’’, ‘`உனக்கெல்லாம் பிளைண்ட் டேட். எனக்கெல்லாம் பிளைண்டா இருந்தாதான் டேட்!’’ என ஆங்காங்கே கார்த்திக் கிருஷ்ணாவின் வசனங்கள் சிறப்பு.

சைமன்.K.கிங்கின் பின்னணி இசையும் ‘யவ்வனா’ பாடலும் ஈர்க்கின்றன. அருண்மணி பழனியின் அட்டகாசமான ஒளிப்பதிவும் கௌதம் ரவிச்சந்திரனின் துல்லியமான எடிட்டிங்கும் கூட்டணி போட்டுப் படத்தின் பரபரப்பைக் கூட்டுகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சத்யா - சினிமா விமர்சனம்

குழந்தை கேரக்டர் இருக்கிறதா இல்லையா என்ற குழப்பம் இடைவேளை தாண்டியும் நீள்வதால் ஒரு கட்டத்தில் அயர்ச்சியே எஞ்சுகிறது. சிபிராஜிடம் குழந்தையைத் தேடச் சொல்லும் ரம்யா, அதற்கான காரணத்தை ஏன் தவிர்த்தார்? சொல்லி வைத்ததுபோல ஒருவரின் சதித்திட்டத்திற்கு இத்தனை பேருமா உடந்தையாக இருந்திருப்பார்கள்? என்னதான் ட்விஸ்ட்டுகளை உடைக்க படத்தில் பல காட்சிகளை `யதேச்சையாக’ காட்டியிருந்தாலும் அடுத்தடுத்து எல்லாமே தானாகவே நடப்பது டூமச்.

ட்விஸ்ட்டுகளை மட்டும் நம்பாமல் எமோஷனலாக எகிறி அடித்த வகையில் `சத்யா’வுக்கு வெற்றியே!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism