Published:Updated:

ஆண்களும் தேவதைகள்தான்!

ஆண்களும் தேவதைகள்தான்!
பிரீமியம் ஸ்டோரி
ஆண்களும் தேவதைகள்தான்!

கே.ஜி.மணிகண்டன்

ஆண்களும் தேவதைகள்தான்!

கே.ஜி.மணிகண்டன்

Published:Updated:
ஆண்களும் தேவதைகள்தான்!
பிரீமியம் ஸ்டோரி
ஆண்களும் தேவதைகள்தான்!

``சில நெருக்கடிகள், தடுமாற்றமான ஒரு சூழலுக்கு மத்தியில் ஒருமுறை நானும் என் மனைவியும் பேசிக்கிட்டிருக்கோம். அப்போதான், ‘நாம வாழறதுக்காக வேலை பார்க்கிறோமா, வேலை பார்க்கிறதுக்காக வாழறோமா?’னு ஒரு கேள்வி வந்தது. இந்தச் சமூகத்துக்கான முக்கியமான கேள்வி இது. இந்த நகரத்தை ஒருதடவை உத்துப்பாருங்க. தினமும் காலையில எந்திரிச்சதும் அலாரம் அடிச்சமாதிரி வேலைக்கு ஓடிக்கிட்டிருக்காங்க. பரபரப்பா இயங்கிக்கிட்டிருக்கிற இந்த நகரத்து மனிதர்களோட முகத்துல யாரையும் கவனிக்க நேரம் இல்லை. ஏன் இப்படி... இந்த வாழ்வு எதுக்காக?’’ - ‘ஆண் தேவதை’ படத்திற்கான தொடக்கப்புள்ளி இதுதான் என்கிறார், இயக்குநர் தாமிரா. பாலசந்தர் - பாரதிராஜாவை ‘ரெட்டச்சுழி’யில் இயக்கியவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமுத்திரக்கனியுடன் வருகிறார்.

ஆண்களும் தேவதைகள்தான்!

“இது ஆண்களைப் பற்றிய படமா?’’

“ஆமாம். இது ஆண் தேவதைகள் பற்றிய படம். இந்தப்படத்துல சமுத்திரக்கனியோட கேரக்டர் பெயர், இளங்கோ. ‘ஹவுஸ் ஹஸ்பெண்ட்’ கேரக்டர்ல அவரை ஸ்கிரீன்ல பார்க்கும்போது, சமுத்திரக்கனி கேரக்டர்ல பலரும் பொருந்திப் போகலாம். ஏன்னா, இங்கே அடையாளப்படுத்தப்படாத பல ‘ஆண்தேவதைகள்’ இருக்காங்க. ஒருமுறை மியூசிக் டைரக்டர் ஜிப்ரானுக்குப் போன் பண்ணி, ஆபீஸுக்கு வரமுடியுமானு கேட்டேன். ‘முடியாது. இன்னைக்கு நான் ‘ஆண்தேவதை’யா குழந்தைகளோட விளையாடிக்கிட்டிருக்கேன்’னு சொன்னார். அப்படி எல்லோர் வீட்டிலேயும் ‘ஆண் தேவதை’கள் இருக்காங்க. அதை, மனைவிகள்தான் கண்டுபிடிக்கணும்.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்களும் தேவதைகள்தான்!

‘’இந்தப் படத்தை நீங்களே தயாரிக்கணும்ங்கிற சூழல் உருவானதா, உருவாக்கிக்கிட்டீங்களா?”

‘`சில தயாரிப்பாளர்கள்கிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். இங்கே ‘டேபிள் பிராபர்ட்டி’ தயாரிப்பாளர்கள் அதிகமாவும், நல்ல படத்தை விரும்புற தயாரிப்பாளர்கள் கம்மியாவும் இருக்காங்க. தவிர, கதை சொன்ன தயாரிப்பாளர்கள் கால்குலேஷன், ஸ்கெட்ச் போடுறதுலதான் ஆர்வமா இருந்தாங்க. ஒரு படைப்புக்குத் திட்டமிடல் இருக்கலாம். ஆனா, கணக்கு பார்க்கிறதா இருக்கக்கூடாது. அதனால, நண்பர்கள் சிலரே சேர்ந்து இந்தப் படத்தைத் தயாரிக்கலாம்னு முடிவு எடுத்துட்டோம். இசையமைப்பாளர் ஜிப்ரான், எடிட்டர் காசி, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் என... படத்துல பெரும்பாலான தொழில்நுட்பக் கலைஞர்கள் எல்லோரும் அவங்களுக்கான ‘மார்க்கெட் ரேட்’டைக் கணக்குல வெச்சுக்காம, எனக்காக வேலை பார்த்தாங்க. அதனாலதான், இந்தப் படத்தை கந்துவட்டி வாங்காம பண்ணியிருக்கேன். இந்த நிமிடம் வரை இந்தப் படத்துக்காக ஒரு ரூபாய்கூட நான் கடன் வாங்கலை.”

 ``சினிமாவோட இப்போதைய ஹாட் டாபிக் கந்துவட்டி. உங்களால முடிஞ்ச இந்தத் தயாரிப்புத் திட்டமிடல் ஏன் மத்தவங்களுக்குச் சாத்தியம் ஆகுறதில்லை?”

“எப்படி ஒரு சமூகப் பண்புகளை மிடில் கிளாஸும், லோ கிளாஸும் தக்கவைக்குதோ, அதேமாதிரி லோ பட்ஜெட் படங்கள்தான் தமிழ்சினிமாவைத் தக்கவைக்குது. ஆக, சின்ன பட்ஜெட் படங்களுக்கான முக்கியத்துவத்தை இன்னும் அதிகப்படுத்தணும். அதேசமயம், பெரிய படங்களை வட்டிக்குப் பணம் வாங்கித்தான் எடுக்க முடியும். ஆனா, அதை முறைப்படுத்தணும். அசோக்குமார் மரணத்துக்குப் பிறகு கந்துவட்டியைப் பெரும் பிரச்னையா சொல்றாங்க. ஆனா, வட்டி வசூல் பண்றதுல மனிதாபிமானம் இல்லாம செயல்படுறதும், கடன் வாங்குனவங்களும் கொடுத்தவரும் அறம் இல்லாம செயல்படுறதும்தான் பிரச்னைனு சொல்வேன்.”

ஆண்களும் தேவதைகள்தான்!

“முதல் படத்துக்கும் இந்தப் படத்துக்குமான இடைவெளியில ஒரு படைப்பாளியா என்னென்ன விஷயங்களை உள்வாங்கிக்கிட்டீங்க?”

“வெற்றி தோல்வியை நோக்கி ஓடுறவங்களுக்குதான் இடைவெளி பெரும் பிரச்னையா இருக்கும். தொடர்ந்து இயங்கிகிட் டிருக்கிறவங்களுக்கு அது எந்த பாதிப்பையும் கொடுக்காது. முதல் படத்துக்குப் பிறகு கிடைச்ச இடைவெளியில மாடு மேய்ச்சேன், விவசாயம் பண்ணினேன். ஊர்ல ரெண்டாயிரம் பனை விதைச்சேன். அதுல 800 பனைகள் வளர்ந்திருக்கு. என் நிலத்தை மாசற்ற நிலமா மாத்தியிருக்கேன். இடையில ‘மெஹர்’னு ஒரு டெலிஃபிலிம் பண்ணுனேன். இதைவிடப் பெரிய வெற்றி என்னன்னு நீங்களே சொல்லுங்க. மக்களுக்கான சினிமா அல்லது மக்களுக்குப் பிடிச்ச சினிமா... இதுதான் என் இலக்கு. அதைப் பண்ணணும். கிடைக்கிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கிட்டு எதையாவது படமா எடுக்க எனக்குத் தெரியாது.”

‘`பாலசந்தர், பாரதிராஜா இருவரையும் வைத்து இயக்கிய ‘ரெட்டச்சுழி’ சரியா போகலைங்கிற வருத்தம் போயிடுச்சா?”

“ஒருவேளை ‘ரெட்டச்சுழி’ என்னுடைய இரண்டாவது படமா இருந்திருந்தா, அதுக்கான மரியாதையோட இருந்திருக்கும்னு தோணும். மத்தபடி, அந்தப் படம் பாலசந்தர், ஷங்கர் இருவருக்கும் ரொம்பப் பிடிச்ச படம். என்மீது அதீத நம்பிக்கை வைத்த ரெண்டு ஜீவன்கள் இவங்க. சினிமாவுல நான் தொடர்ந்து இயங்கணும்னு நினைக்கிறதுக்கான காரணமே, பாலசந்தரும் ஷங்கரும்தான்.”

ஆண்களும் தேவதைகள்தான்!

‘` ‘ஆண்தேவதை’க்குப் பிறகு தாமிராவை இடைவெளி இல்லாம பார்க்கலாமா?”

“இல்ல, நிச்சயம் இடைவெளி இருக்கும். ஏன்னா, என் அடுத்த படத்துக்குப் பெயரே ‘இடைவெளி’தான்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism