Published:Updated:

"ஜெய் என் நண்பர் மட்டும்தான்!”

"ஜெய் என் நண்பர் மட்டும்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
"ஜெய் என் நண்பர் மட்டும்தான்!”

சுஜிதா சென், படம்: சொ.பாலசுப்ரமணியன்

"ஜெய் என் நண்பர் மட்டும்தான்!”

சுஜிதா சென், படம்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
"ஜெய் என் நண்பர் மட்டும்தான்!”
பிரீமியம் ஸ்டோரி
"ஜெய் என் நண்பர் மட்டும்தான்!”

ற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார் அஞ்சலி. தெலுங்கில் ஹிட் நாயகியாக வலம்வரும் அஞ்சலி நீண்ட இடைவெளிக்குப்பிறகு `பலூன்’ படம்மூலம் தமிழுக்குத் திரும்பியிருக்கிறார். இதற்கிடையே ஒரு ஜோடி மலையாளப் படங்களிலும் கமிட் ஆகியிருக்கும் அஞ்சலியைச் சந்தித்தேன்.

“சென்னையை மறந்துட்டீங்களா?”

 “சென்னை எனக்கு எப்பவுமே ரொம்ப ஸ்பெஷல். இப்போதைக்கு ஹைதராபாத்ல இருக்கேன். சென்னைக்கு வேலைக்காக அடிக்கடி வருவேன். எனக்கு குறிப்பிட்டுச் சொல்லும்படி ரெண்டு மூணு நண்பர்கள் இங்க இருக்காங்க. அவங்களுக்காக அடிக்கடி வந்துட்டுதான் இருக்கேன். அப்படியெல்லாம் சென்னையை விட்டுட முடியாதுங்க!”

“பெரிய இடைவெளிக்குப் பிறகு `பலூன்’ மூலமாக தமிழுக்கு வர்றீங்க... அப்படி என்ன இந்தப்படத்துல ஸ்பெஷல்?”

“இந்த இடைவெளில நிறைய தெலுங்குப் படங்கள் பண்ணிட்டிருந்தேன். ரொம்ப நாளைக்கு அப்பறம் தமிழ்ல அமைந்த நல்ல கதைன்னா அது `பலூன்’ மட்டும்தான். `பலூன்’ டார்க் ஹாரர் படம் கிடையாது. இது ஒரு கமர்ஷியல் பேய்ப் படம். எனக்கு பேய்ப்படங்கள்னா ரொம்பப் பிடிக்கும். அதுதான் காரணம்.”

“ ‘கற்றது தமிழ்’ வந்து பத்து வருடங்கள் ஆகிடுச்சு. `தரமணி’, ‘பேரன்பு’ன்னு இயக்குநர் ராமோட படங்கள்ல தொடர்ந்து நடிக்கிறீங்களே?”

“எனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்த கடவுள் ராம் சார்தான். என்னுடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு போனவர். பத்து வருஷம் கழிச்சு மீண்டும் சாரைப் பார்க்கும்போதுகூட எதுவுமே மாறலை. அப்போ எப்படி நடந்துக்கிட்டாரோ, அதேமாதிரிதான் இப்பவும் நடந்துக்கிறார்.’’

"ஜெய் என் நண்பர் மட்டும்தான்!”

“ ‘பேரன்பு’ ஹீரோ மம்மூட்டி, அவரோடு நடிச்ச அனுபவங்கள் எப்படி இருந்தது?’’

“என்கிட்ட இருக்குற நல்ல பழக்கம் எல்லோர்கிட்டயும் ஈஸியா ஃப்ரெண்ட் ஆகிடுறதுதான். தொண தொணன்னு பேசிக்கிட்டே இருப்பேன். அப்படித்தான் மம்மூட்டி சார்கிட்டயும் பேச ஆரம்பிச்சேன். அப்போ அவர்,  `நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. ரொம்ப நல்லா நடிக்கிறீங்க. நானும் உங்கள மாதிரி யங்ஸ்டர்தான். என்னை ஃப்ரெண்ட் மாதிரி நெனச்சுக்கோங்க’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார்.”

“திருமண உறவில் நம்பிக்கை உண்டா?”

“ஈடுபாடு-நம்பிக்கை ரெண்டுமே இருக்கு. ஆனா, இந்தக் காலத்துல நல்ல துணை கிடைக்குறது ரொம்பக் கஷ்டம். என்னுடைய நண்பர்கள்ல சில பேர், கல்யாணத்துக்கு அப்புறம் சந்தோஷமா இருக்காங்க. சிலபேர் சோகமாவும் இருக்காங்க. அதனால, என்னால் ஒரு சரியான முடிவுக்கு வர முடியல.  என்னோட குடும்பத்துல எல்லோருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. அக்காவுக்குக் கல்யாணமாகி ஒரு பொண்ணு இருக்கு. மாமாவோட ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. இந்தமாதிரி ஒரு கலாசாரத்துல வளர்ந்ததுனால கல்யாணம் எனக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்னு நம்புறேன்.”

“ஜெய்யுடன் காதல், லிவிங் டு கெதர்னு நிறைய செய்திகள் வந்துச்சே?”

“ஜெய்க்கும் எனக்கும் காதல் இருக்குனு எந்த இடத்துலயும் நாங்க சொல்லலை. நான் இப்போ இதை எதிர்த்து ஏதாவது சொன்னா எல்லோரும் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு எனக்குத் தெரியாது. நீங்க எங்களைப் பத்தி எதுவும் பேசாதீங்கனு சொன்னா நீங்க நிறுத்தப்போறதும் கிடையாது. இந்தப் பத்து வருஷமா சினிமால நான் கத்துக்கிட்டது, `நமக்குப் பிடிக்காத எந்தவொரு விஷயத்தைப் பத்தியும் பேசக்கூடாது’ என்பதுதான். இந்த விஷயம் மட்டும் இல்லை, வேற எந்த ஒரு சர்ச்சைக்குரிய விஷயத்தைப் பத்தியும் நான் பேசுறது கிடையாது. அப்படியே என்னுடைய ரிலேஷன்ஷிப் பத்தி எதாவது தெரிவிக்கணும்னா சமூக வலைதளங்கள்ல ஊரறிய போஸ்ட் பண்ணுவேன். ஜெய் எனக்கு நெருங்கிய நண்பர் மட்டும்தான்.”
 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism