Published:Updated:

ரிச்சி - சினிமா விமர்சனம்

ரிச்சி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
ரிச்சி - சினிமா விமர்சனம்

ரிச்சி - சினிமா விமர்சனம்

ரிச்சி - சினிமா விமர்சனம்

ரிச்சி - சினிமா விமர்சனம்

Published:Updated:
ரிச்சி - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
ரிச்சி - சினிமா விமர்சனம்

ரு கடற்கரை கிராமம். அங்கு வாழும் சில மனிதர்கள். துரோகத்தின் நிழலாக ஒரு புதையல். ஒரு  மோசமான டான். ஊரில் நடக்கிற ஒரு கொலை; அதன் பின்னணிகள் தேடிவரும் ஒரு பெண் பத்திரிகையாளர். மகனுக்குக் காத்திருக்கும் அம்மா, ஏழை புலியாட்டக் கலைஞன். மகனைத்தவிர எல்லோரையும் மன்னிக்கும் ஒரு பாதிரியார். ஒருதலைக்காதலில் தவிக்கும் ஒரு போட் மெக்கானிக். இவர்கள் எல்லோரையும் ஒற்றைப்புள்ளியில் இணைக்கிறான் ரிச்சி. 

ஒவ்வொரு கேரக்டரும் தங்கள் பார்வையில் ஒரு சம்பவத்தைச் சொல்லும்வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் கௌதம் ராமசந்திரன். ஆனால், அதைச் சரியாகக் கையாளத்தவறியதால், பார்க்கும் கதை யாருடைய வெர்ஷன் என்பதில் குழப்பம் வருகிறது. கௌதம் கோட்டை விட்டது அங்குதான்!

ஒரே படத்தில் மூன்று ஓப்பனிங் சீன் வைத்திருக்கிறார்கள் நிவினுக்கு. ஓப்பனிங்கெல்லாம் நல்லாதான் இருக்கு... ஆனால், ஃபினிஷிங்தான் சொதப்பிவிட்டது!

ரிச்சி - சினிமா விமர்சனம்

நிவின் பாலியின் என்ட்ரிக்குக் காட்டிய மெனக்கெடலைப் பாத்திர வடிவமைப்புக்குக் காட்டாததால் பல இடங்களில் ‘என்னதான் வேணும் சேட்டா?’ எனப் பரிதாபமாக நம்மைக் கேட்க வைக்கிறார் நிவின்பாலி.  மலையாளத் தமிழில் தன் நண்பனுக்கு `டேஷ், டேஷ்... டேஷ்’ எனக் கதை சொல்லுமிடம் படத்தின் முக்கியமான காட்சி. ஆனால், நிவினின் மலையாளத்தமிழால் அதுவும் பெரிதாய் ஈர்ப்பில்லாமல் கடந்து செல்கிறது.

படத்தின் நிஜ ஹீரோக்கள் அபாரமாக பின்னணி இசையமைத்திருக்கும் அஜனீஷ் லோக்நாத்தும் நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்திருக்கும்  பாண்டிக்குமாரும்தான். 

ஷ்ரத்தா ஸ்ரீநாத், பிரகாஷ்ராஜ்,  ஆடுகளம் முருகதாஸ், துளசி, லட்சுமி பிரியா, ஜி.கே.ரெட்டி, ராஜ் பரத் என ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.ஆனாலும் இவர்களில் நட்டிக்கு மட்டுமே நடிக்கும் வாய்ப்பு. நட்டி- லட்சுமி பிரியா காதல் எபிசோடு மட்டும் க்யூட் கவிதை. குமரவேல் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார். 

இத்தனை கேரக்டர்களையும் வைத்து, கதை சொல்வதற்கு அவகாசமில்லாமல் படத்தைப் பொசுக்கென முடித்து விடுகிறார்கள். வித்தியாசப்  பின்னணியுள்ள கேரக்டர்கள் பிடித்தவர்கள் அவர்களுக்காக ஜீவனுள்ள காட்சிகளை உருவாக்கி யிருக்கலாம். படம் முடியும்போது அந்த நபர்களைப்பற்றிய அறிமுகம் மட்டுமே எஞ்சுகிறது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ரிச்சி - சினிமா விமர்சனம்

வெட்டி ஹீரோயிசம் ரிச்சியை வீழ்த்திவிட்டது!

- விகடன் விமர்சனக் குழு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism