Published:Updated:

“‘வாவ் நமீதா’னு சொல்லாம ‘ஹாய் நமீதா’னு சொன்னார்!”

“‘வாவ் நமீதா’னு சொல்லாம ‘ஹாய் நமீதா’னு சொன்னார்!”
பிரீமியம் ஸ்டோரி
“‘வாவ் நமீதா’னு சொல்லாம ‘ஹாய் நமீதா’னு சொன்னார்!”

சனா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

“‘வாவ் நமீதா’னு சொல்லாம ‘ஹாய் நமீதா’னு சொன்னார்!”

சனா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்

Published:Updated:
“‘வாவ் நமீதா’னு சொல்லாம ‘ஹாய் நமீதா’னு சொன்னார்!”
பிரீமியம் ஸ்டோரி
“‘வாவ் நமீதா’னு சொல்லாம ‘ஹாய் நமீதா’னு சொன்னார்!”

ந்த உலகத்தில் எல்லோருக்கும் யாராவது ஒருத்தர் இருப்பாங்கனு சொல்வாங்க. அப்படி ஒருத்தரை சந்திக்கும்போது, ‘இவங்கதான் நமக்கானவர்’னு ஒரு ஃபீல் வரும். அவங்க நம்மகூட இருக்கிற ஒவ்வொரு தருணமுமே ஸ்பெஷல்னு நினைப்போம். அந்தமாதிரிதான் நமீதாகூட இருந்த தருணங்களும் எனக்குப் பிடிச்சிருந்துச்சு. ஹேப்பியா ஃபீல் பண்ணினேன். அப்பதான் நம்மகூட இருப்பது விலைமதிப்பில்லா வைரம்னு புரிஞ்சுது. அதைவிடப் பெருசா வேறென்ன வேணும்? உடனே நமீக்கு ப்ரபோஸ் பண்ணிட்டேன்.” தன் கணவர் வீர் பேசுவதைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருக்கிறார் புதுப்பெண் நமீதா!

“எனக்கும் வீருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள். என் வாழ்க்கையில் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கேன். பெரிய ஹீரோஸ்கூட நடிச்சிருக்கேன். ஆனா, யாருகிட்டயும் இந்தளவுக்கு இம்ப்ரஸ் ஆனதில்லை. அவ்வளவு உண்மையா, நேர்மையா இருக்கிற வீராவை எனக்குப் பிடிச்சிருந்துச்சு. என் கையில் ஒரு தங்கக்கட்டி கிடைச்சிருக்கு. யெஸ், வீர் எனக்கு கோல்டு மாதிரி” என்கிற நமீதாவைக் கட்டியணைக்கிறார் வீரா. தங்கமும் வைரமும் பேசப்பேச, காதல் மழை கொட்டுகிறது.

‘`வீர் பிறந்தது, படிச்சது எல்லாமே ஆந்திரா.  அவரோட முழுப்பேரு மல்லுரெட்டி வீரேந்திர செளத்ரி. அவங்க அப்பா ஒரு சினிமா டிஸ்ட்ரிபியூட்டர். அதனால சின்ன வயசுல இருந்தே இவருக்கும் சினிமா பிடிக்கும். நாகார்ஜுனா ஃபேன். ஆந்திரா யுனிவர்சிட்டியில் டிகிரி... பிறகு தெலுங்குப் படங்கள்ல சின்னச்சின்ன கேரக்டர்கள்ல நடிச்சிருக்கார். அம்மா சினிமா வேண்டாம்னு சொல்ல, அவங்களுக்காக டெல்லி டி.சி.எஸ்ஸில் வேலை செஞ்சிருக்கார். இரண்டு வருஷம் வேலை பார்த்தவர் சென்னைக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துட்டார். ஆமாம், வீரா எனக்காகவே சென்னை வந்ததாகத்தான் நான் ஃபீல் பண்றேன்” என உருகுகிறார் நமீதா.

“‘வாவ் நமீதா’னு சொல்லாம ‘ஹாய் நமீதா’னு சொன்னார்!”

“வீரை நான் முதலில் சென்னையில் ஒரு காபி டேயில்தான் பார்த்தேன். எங்க இரண்டு பேருக்குமான மியூச்சுவல் ஃப்ரெண்ட் ஒருத்தர்தான் எங்களை அறிமுகப்படுத்திவெச்சார். இன்றைக்கும் அந்த ‘காபி டே’ ல சந்திச்ச நாள் நல்லா ஞாபகம் இருக்கு. உனக்கு ஞாபகம் இருக்கா பேபி’ என்று வீரைக் கேட்க, `ஆமாம்’ என்பதுபோல நமீதாவுக்குக் கண்களாலேயே பதில் சொல்கிறார் வீரா.

``ஓகே... எப்படி குடும்பம் நடத்தப்போறீங்க?’’ என்றால் ``அதெல்லாம் எப்பவோ பிளான் பண்ணியாச்சு’’ என இருவருமே சிரிக்கிறார்கள்.

``எல்லா ஆன்லைன் ஷாப்பிங்கும் நமீக்குத் தெரியும். வீட்டுக்கான மொத்த ஷாப்பிங்கையும் ஆன்லைனிலேயே முடிச்சுருவாங்க. என்னோட இந்த டிரஸ், அவங்க போட்டிருக்கிர டிரஸ் எல்லாம் ஆன்லைன்ல வாங்கினதுதான். நமீ வீட்ல ரிலாக்ஸா இருந்தா ஆன்லைன்ல ஏதோ ஷாப் பண்ணிட்டிருக்காங்கனு அர்த்தம்” என்கிறார் வீரா.

அடுத்து நமீதா. ``இவருக்கு சமையல் செய்யப் பிடிக்கும். அதுவும் எனக்காகச் சமைக்கிறது ரொம்பவே பிடிக்கும். சாப்பாட்டில் எனக்கு என்ன பிடிக்கும்னு என்னைவிட வீர்க்கு நல்லாவே தெரியும்... அதனால் வீட்டில் சமையல் நோ ப்ராப்ளம்” என்கிற நமீதாவிடம், ``உன் ஃபேவரிட் டிஷ்ஷஸை இவங்ககிட்ட சொல்லலாமா பேபி” என்று அனுமதி வாங்கிவிட்டுத் தொடர்கிறார் வீர். ``நமீக்கு மலேசியன் அண்ட் தாய்லாந்து ஃபுட் பிடிக்கும். அதிலும் லக்‌சா ஃபுட் இஷ்டம். அது உடம்புக்கும் நல்லது. எங்க இருவருக்குமே ஹெல்த் கான்ஷியஸ் அதிகம். அதனால லக்சா ஃபுட் அண்ட் டாம் யம் சூப் செஞ்சு கொடுப்பேன்” என்றபடி நமீதாவின் கையைப் பிடித்துக்கொள்கிறார் வீரா.

“நான் வெயிட் போட்டதுக்குக் காரணமே வீரோட சமையல்தான். அடிக்கடி பாஸ்தா செஞ்சு கொடுப்பார். நானும் அவருக்காக ஏதாவது குக் பண்ணித் தரணும்னு முயற்சி பண்ணுவேன். எல்லாம் சொதப்பிடும். ஆமாம், எனக்கு அவ்வளவா சமைக்கத் தெரியாது” என்று சிரிக்கிறார் நமீதா.

“நானும் வீரும் ‘மியா’னு ஒரு படம் பண்ணினோம். அதில் நாங்க இருவரும் கணவன் மனைவி. ஆனால், ஆரம்பத்தில் அந்த கேரக்டரில் வீர் நடிக்கமாட்டேன்னு சொல்லிட்டார். ஏன்னு நீங்களே சொல்லுங்க பேபி” என்று நமீதா சொல்ல, தொடர்கிறார் வீரா.

``அந்தப்பட ஸ்க்ரிப்ட்படி நமீயை நான் அடிச்சுத் துன்புறுத்தணும். சினிமாவாகவே இருந்தாலும் சென்ட்டிமென்ட்டா அது சரியா படலை. ஏன்னா நமீயை அப்பவே நான் ஒன் சைடா லவ் பண்ண ஆரம்பிச் சிட்டேன்” என ஃபீலாகிறார் வீரா. 

``இவர் என்னை முதல்முறை பார்த்தப்ப, ‘வாவ் நமீதா’னு வாய் பிளக்காமல், ‘ஹாய்’ என்று கேஷுவலாகப் பேசினார். வீரிடம் ஃப்ரெண்ட்ஷிப் வைக்க அதுதான் காரணம். அதுதான் பிறகு லவ் ஆச்சு. இவர் எனக்கு ரெண்டு ப்ரப்போஸல் பண்ணினார். முதல்ல பண்ணினது, லவ் ப்ரப்போஸல். அடுத்து மேரேஜ் ப்ரப்போஸல். லவ் ப்ரப்போஸல் `பிக் பாஸ்’ வீட்ல இருந்து நான் வெளியே வந்ததும் நடந்தது” என்கிற நமீதாவைத் தொடர்கிறார் வீரா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“‘வாவ் நமீதா’னு சொல்லாம ‘ஹாய் நமீதா’னு சொன்னார்!”

``பிக் பாஸ் வீட்ல இருந்து வெளியே வந்ததும் நமீ கொஞ்சம் அப்செட்ல இருந்தாங்க. அன்றைக்கு நைட்டே அவங்களைச் சந்திச்சு, ‘`உன்னை ஷோவில் எப்படிக் காட்டி யிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. ஐ நோ நமீ. ஐ லவ் நமீ’’னு சொன்னேன். அந்த ப்ரப்போஸல் இவங்களுக்குப் பிடிச்சிருந்திருக்கு. இன்னொரு முக்கியமான விஷயம், நமீக்கு அவங்களோட வளர்ப்பு நாய்கள் ரொம்பப் பிடிக்கும். அவங்க `பிக் பாஸ்’ போயிருந்த சமயத்தில் அந்த பெட்ஸ் எல்லாத்தையும் நான்தான் பார்த்துக்கிட்டேன். ஒரு பெட்டுக்கு நான் டெலிவரிகூட பார்த்தேன்” என்கிற வீரைக் கட்டிப்பிடித்துக்கொள்கிறார் நமீதா. ``வீட்ல பெருசா பிரச்னையில்லைன்றதால உடனே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஆனால், மச்சான்ஸ்தான் எங்க கல்யாணத்துல ரொம்ப அப்செட்னு நினைக்கிறேன்’’ என்கிறார் நமீதா.

“ஆமாம், நமீ ரசிகர்கள் என் மேல ரொம்பக் கோபமாக இருக்காங்க. நானும் நமீயும் சேர்ந்திருக்கிற ஃபோட்டோஸை இன்ஸ்ட்ராகிராமில் போட்டாலே, என்னைத் திட்டி ஏகப்பட்ட கமென்ட்ஸ் வருது” என்று சிரிக்கிறார் வீரா.

 ``சினிமால தொடர்ந்து நடிப்பேன். ஆனா, வித்தியாசமான கேரக்டர்ஸா இருக்கணும். எந்தக் காலத்துலயும் அம்மா, அண்ணி, அக்கா கேரக்டர்ஸ் பண்ண மாட்டேன்” என்னும்  நமீதாவிடம் ``நீங்க அரசியல் களத்துல குதிச்சீங்களே... என்ன ஆச்சு?’’ என்றால் இன்னும் ஆர்வமாகிறார்.

“‘வாவ் நமீதா’னு சொல்லாம ‘ஹாய் நமீதா’னு சொன்னார்!”

‘`எனக்கு ஜெயலலிதா மேடமை ரொம்பப் பிடிக்கும். அதனாலதான், அவங்க முன்னால அ.தி.மு.க-ல சேர்ந்தேன். இன்னமும் அ.தி.மு.க-லதான் இருக்கேன். ஆனா,  இப்ப அங்க என்ன நடக்குதுனு புரியல. அதனால, இந்த நேரத்துல நான் யாருக்கும்  சப்போர்ட் பண்ண விரும்பலை. எதிர்காலத்துல வாய்ப்பு கிடைச்சா தேர்தல்ல நின்னு மக்களுக்கு நல்லது பண்ணுவேன்” என்று நமீதா சொன்னதும், ``அதுக்கு நானும் நமீக்கு உறுதுணையா இருப்பேன்” என்கிறார் வீரா.

மச்சான்ஸ்... வாக்காளர் அட்டையோட ரெடியா இருங்க... நமீதா இஸ் ஆன் தி வே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism