பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

`` `வேலைக்காரன்’ல வேற சிவகார்த்திகேயன்!’’

`` `வேலைக்காரன்’ல வேற சிவகார்த்திகேயன்!’’
பிரீமியம் ஸ்டோரி
News
`` `வேலைக்காரன்’ல வேற சிவகார்த்திகேயன்!’’

`` `வேலைக்காரன்’ல வேற சிவகார்த்திகேயன்!’’

`` ‘தனி ஒருவன்’ படம் பார்த்ததும் ஏற்பட்ட பாதிப்புல இயக்குநர் மோகன் ராஜா சார்கிட்ட பேசணும்னு தோணுச்சு. பேசும்போது, ‘நேரமும் சூழலும் அமையும்போது, உங்களோடு சேர்ந்து ஒரு படம் பண்ணணும்’னு அவர்கிட்ட சொன்னேன். அந்தச் சமயத்துல அவர் ஒரு இந்திப் படம் இயக்குறதா இருந்தது. ‘சீக்கிரமே சந்திப்போம், சிவா’னு சொன்னவர்தான், ‘வேலைக்காரன்’ கதையோட வந்தார். இதோ, பக்கா ஆக்‌ஷன் த்ரில்லரா, ‘வேலைக்காரன்’ ரெடி!” - சிரிப்பும் சிலிர்ப்புமாகப் பேசுகிறார் சிவகார்த்திகேயன்.

‘` ‘வேலைக்காரன்’ பார்வையாளர்களுக்கு என்ன மாதிரியான அனுபவத்தைக் கொடுக்கும்?”

“எல்லாரோட வாழ்க்கைலயும் நடக்கிற, நடந்துகிட்டு இருக்கிற விஷயங்களைச் சொல்ற படம் இது. பெரும்பான்மை மக்களோட பிரச்னையைச் சொல்ற, அந்தப் பிரச்னைகளை ஸ்கிரீன்ல விவாதிக்கிற படமா இருக்கும். அதேசமயம், ஆடியன்ஸ் எதிர்பார்க்குற கமர்ஷியல் விஷயங்களும் இருக்கும். ‘இந்தக் கதையை சாதாரண மக்கள்கிட்ட இருந்துதான் எடுத்திருக்கேன், சிவா’னு  மோகன் ராஜா சார்  சொன்னதுமே, ‘தயக்கம் இல்லாம இந்தப் படத்துல நடிக்கலாம்’னு தோணுச்சு. ‘வேலைக்காரன்’ படம் மேல எனக்குப் பெரிய நம்பிக்கை வந்திருக்கு. ரசிகர்களும் `சரியான படம்தான் பார்க்க வந்திருக்கோம்’னு நினைப்பாங்க.”

‘’படத்துக்கு ‘வேலைக்காரன்’னு டைட்டில் வைக்க என்ன காரணம்?”

“படத்துல நான் குறிப்பிட்ட ஒரு வேலையைப் பார்க்கிற தொழிலாளியா நடிச்சிருந்தாலும், இந்தக் கதை எல்லா வேலைக்காரர்களுக்கும் பொருந்தும். அவங்க வாழ்க்கை, சந்திக்கிற பிரச்னைகள், சின்னச் சின்ன சந்தோஷங்கள், கஷ்டங்களுக்குப் பின்னாடி இருக்கிற வலி... எல்லாத்தையும் படத்துல பதிவு செஞ்சிருக்கோம். முக்கியமா, ‘ஒரு வேலைக்காரன், தன் வாழ்க்கையில என்னென்ன எல்லாம் நடக்குதுனு யோசிக்க ஆரம்பிச்சா... அதோட விளைவுகள் எப்படி இருக்கும்?’ங்கிற கேள்விக்கான பதில்தான் இந்தப் படம். தவிர, ‘வேலைக்காரன்’ வெறும் டைட்டில் அல்ல, பவர்ஃபுல்லான வார்த்தை. ரஜினி சார் நடிச்ச படத்தோட டைட்டில். இப்படி எல்லா விதத்திலும் இந்த டைட்டில் நிச்சயம் நியாயம் சேர்க்கும்.”

`` `வேலைக்காரன்’ல வேற சிவகார்த்திகேயன்!’’

‘’பிரகாஷ்ராஜ், நயன்தாரா, ஃபஹத் ஃபாசில், சினேகா...  என சீனியர்களுடன் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?”

“இவங்க எல்லோர்கிட்ட இருந்தும் நிறைய கத்துக்கிட்டேன். ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனி அடையாளம் இருக்கு. ‘ரிகர்சல்-டேக்’ ரெண்டுக்குமான இடைவெளிக்குள்ள எப்படித் தயாராகுறாங்கனு பார்த்தேன். ரொம்ப ஆச்சர்யமா இருந்தது. தவிர, இவ்வளவு பேரோட நடிப்பைப் பார்த்துக்கிட்டே, அவங்களோட வேலை பார்க்கும்போது நமக்கே தெரியாம, நம்மளோட பர்ஃபாமென்ஸ் பெட்டரா வந்துடும். அதனால, என்ஜாய் பண்ணி நடிச்சேன்; நிறைய கத்துக்கிட்டேன். இந்தப் படத்துல இதுவரை நீங்க பார்த்த சிவகார்த்திகேயனைப் பார்க்கமுடியாது. `வேலைக்காரன்’ல கொஞ்சம் காமெடி... நிறைய சீரியஸ்னு வேற சிவகார்த்திகேயனைப் பார்க்கலாம்.”

‘’நயன்தாரா..?”

“அவங்களோட நடிச்சது ரொம்ப ஸ்பெஷல். வேலைனு வந்துட்டா, அவங்களோட ஃபோக்கஸும்,  பொறுப்பு உணர்வும் அவங்ககிட்ட இன்னும் அதிகமா இருந்ததை இந்தப் படத்தோட ஷூட்டிங்லதான் பார்த்தேன். அதுதான், அவங்களோட பெரும் வளர்ச்சிக்கும் காரணம்னு நினைக்கிறேன்.”

“ ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாட்டு செம ஹிட். படம் பார்க்குற ஆடியன்ஸுக்கு வேறென்ன மியூசிக் ட்ரீட் வெச்சிருக்கார் அனிருத்?”

``பாடல்களைத் தவிர்த்து, பின்னணி இசைக்கு ரொம்ப மெனக்கெட்டிருக்கார், அனிருத். ஏன்னா, படத்தோட கதைக்களத்துக்கு எமோஷனலான இசை முக்கியம். படம் பேசுற விஷயங்களுக்கு வலுச்சேர்க்க அனிருத்தோட பின்னணி இசை ரொம்பவே பயன்பட்டிருக்கு. அனிருத்தின் இசையைப் பாராட்டிப் பேசுற பட்டியலில், நிச்சயமா ‘வேலைக்காரன்’ படமும் இருக்கும்.”