Published:Updated:

அழகாய்ப் பூத்த உசுமுலரசே மிட்டாய்!

அழகாய்ப் பூத்த உசுமுலரசே மிட்டாய்!

அழகாய்ப் பூத்த உசுமுலரசே மிட்டாய்!

அழகாய்ப் பூத்த உசுமுலரசே மிட்டாய்!

Published:Updated:
##~##

'இளம் பின்னணிப் பாடகிகள் சிலரை சந்தித்தோம்.

''ஹாய்... 'அழகாய்ப் பூக்குதே’ பாட்டு பாடின ஜானகி ஐயர் அடியேன்தான். இசைக் குடும்ப வாரிசு நான். சின்ன வயசுலயே நிறைய ஆல்பம் பாடியிருக்கேன். அதன் மூலமாக் கிடைச்சது சினிமா சான்ஸ். நான் மும்பைப் பொண்ணு. இப்போ சினிமாவுக்காக சென்னையில் இருக்கேன். ஐ மிஸ் மை ஃபேமிலி!''

''அப்போ இங்கே ஒரு ஃபேமிலி உண்டாக்கிக்கோ!'' என்று கலாய்த்த ரெய்னினா, தன் வரலாறு தொடங்கினார். ''பெங்களூரு என் பூர்வீகம். பாடகி ஆசையோடு சென்னை வந்து அஞ்சு வருஷமாச்சு. என் தாய்மொழி, தெலுங்கு. அதனால், தமிழ் ஆரம்பத்தில் பயங்கரத் தகராறு. 'சிலந்தி’ படத்தில் முதல் வாய்ப்பு கிடைச்சுது. ரெண்டாவதா 'சரோஜா’வில் பாடிய 'கோடானு கோடி’ செம ஹிட். தனியா இருந்த என்கூட இப்ப அம்மாவும் வந்துட்டாங்க. அப்பாதான் பாவம்... பெங்களூருக்கும் சென்னைக்கும் ட்ரிப் அடிச்சுட்டே இருக்காரு!''

அழகாய்ப் பூத்த உசுமுலரசே மிட்டாய்!

தொடர்ந்தார் வினைத்தா. ''ஸ்கூல் படிக்கும் போதே, 'நோட் புக்’னு ஒரு மலையாளப் படத்தில் பாடினேன். எத்திராஜுல பி.ஏ., படிக்கும்போது காலேஜ்ல ஒரு போட்டியில் பாடினேன். போட்டிக்கு நடுவரா வந்திருந்த சபேஷ்-முரளி மூலமா 'மிட்டாய்’ படத்தில் பாட வாய்ப்பு கிடைச்சுது. அடுத்து, 'தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை’ பாடல் வாய்ப்பு. இதுல ஒரு பியூட்டி என்னன்னா, முதலில் நான் பாடிய 'மிட்டாய்’ படப் பாடல் இன்னும் வெளிவரவே இல்லை. ஸோ 'மிட்டாய்’ வினைத்தா ஆக வேண்டியவ, 'தீ.வி.பி’ வினைத்தாவா ஆகிட்டேன்!''

''ஏன், இப்பவும் நீ 'மிட்டாய்’ வினைத்தாவா, அப்படியே சாப்பிடலாம் போலத்தான் இருக்கே!'' என்று கண்ணடித்த ப்ரியா ஹிமேஷ், ''இப்போ என் டர்ன்!'' என்று தொடங்கினார்.

''20 வருஷமா கிளாஸிக்கல் கச்சேரிகள் பண்ண பிறகுதான் சினிமா பக்கம் கவனம் திரும்பியது. சான்ஸுக்குக் காத்திருந்த காலத் தில், அறிமுகமான கீ-போர்டு ப்ளேயர் ஹிமேஷ§டனான காதல் டூயட், கல்யாண க்ளைமாக்ஸில் முடிந்தது. என் குரு தேவிஸ்ரீ பிரசாத் அண்ணா இல்லைன்னா, எனக்கு இந்த கேரியரே இல்லை. நாலு வயசுல ஒரு பொண்ணு ஜோஷிகா. இப்பவே எல்லா பாட்டையும் ஞாபகம்வெச்சுப் பாடுறா. ஒரு வாரிசு உருவாகிறாறாறாள்!'' என்று 'லல்லல்லா’ பாடினார்.  

அழகாய்ப் பூத்த உசுமுலரசே மிட்டாய்!

''ஆக்ச்சுவலி நான் சுசித்ரா. ஆனா, இப்ப கொஞ்ச நாளா சுர்முகி!'' என்று புதிர் போட்டார் சுசித்ரா அலைஸ் சுர்முகி. ''ஏற்கெனவே ஃபீல்டுல சுசித்ரா மேடம் இருக்கிறதால, என் பேரை 'சுர்முகி’னு மாத்திட்டாங்க, இசையமைப்பாளர்கள் ஹரிஹரன் - லெஸ்லி. 'சுர்முகி’ன்னா 'ஸ்வரமுகம்’னு அர்த்தம். அப்பா ஆல் இந்தியா ரேடியோவில் செமி கிளாஸிக்கல், லைட் மியூஸிக்லாம் பாடுவார். அவர் மூலம்தான் எனக்கு இசை அறிமுகமாகி, சினிமா ஆசையும் தொத்திக்கிச்சு. எல்லோரும் கர்னாடக சங்கீதம் கத்துக்கிட்டு சினிமாவில் பாடுவாங்க. ஆனா, நான் என் குரலை மட்டுமே நம்பி வந்தவ!'' என்று தம்ஸ் - அப் உயர்த்துகிறார் சுர்முகி.  

அழகாய்ப் பூத்த உசுமுலரசே மிட்டாய்!

''ஓ.கே ஜானகி... நம்ம எல்லோரும் சந்திக்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டது இப்போதான் நிறைவேறியிருக்கு. 'உசுமுலரசே உசுமுலரசே’னு பாடி ஊரையே கலங்கடிச்சே... அப்படிலாம் இல்லாம, ஒரு செம பாட்டு பாடு இப்போ!'' என்று சாவி கொடுத்தார் ப்ரியா.

'அழகாய் பூக்குதே... சுகமாய் தாக்குதே’ என்று மெலிதாக ஜானகி பாடத் துவங்க, நால்வரும் அமைதியாகத் தாளமிட, என் பக்கம் திரும்பிக் கண்ணடித்து, அடுத்த வரியைப் பாடுகிறார் ஜானகி.

'அடடா... காதலைச் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே!’

படங்கள் : வி.செந்தில்குமார்