Published:Updated:

“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”

“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: க.பாலாஜி

“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, படங்கள்: க.பாலாஜி

Published:Updated:
“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”
பிரீமியம் ஸ்டோரி
“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”

``2017 எனக்கு மிகப்பெரிய மாற்றத்தைக் கொடுத்த வருஷம்.  ‘புரியாத புதிர்’ ரிலீஸ் ஆகாதோனு

“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”

நினைச்சேன். ஆனா, படம் நல்லபடியா ரிலீஸானது. ‘கருப்பன்’ படம் எனக்கு வேற ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. ‘விக்ரம் வேதா’, ‘கவண்’ இரண்டு படங்களும் எனக்கு நல்ல பேரைக் கொடுத்தது. நிறைய வேலை செஞ்சிருக்கேன். நிறைய சர்ப்ரைஸ் கிடைச்சது. ஆசைப்படலாம்... கனவு காணலாம்... ஆனால், இதுதான் நடக்கும்னு கண்டிப்பா நினைக்காதீங்கனு சொல்லிக் கொடுத்த வருஷம் 2017” - எமோஷனலாகப் பேச ஆரம்பிக்கிறார் விஜய் சேதுபதி. 2018-ல் எட்டுப் படங்கள் என செம ரிலே ரேஸில் ஓடிக்கொண்டிருக்கிறார். 

“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”

“ஒரே நேரத்தில் வேற வேற படங்களில் நடிக்கிறீங்களே... நடிக்கும்போது எதுவும் குழப்பம் வராதா?”

``நான்தான் வேற வேற படங்கள் ஒரே நேரத்தில் பண்றேனே தவிர, அந்தந்த இயக்குநர்களுக்கு அது ஒரே ஒரு படம்தானே. அதனால், அவங்க ரொம்பத் தெளிவா இருப்பாங்க. அப்புறம், அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகள், நண்பர்கள்னு எல்லாரோடவும் நாம ஒரே நேரத்துல பழகினாலும் யார் யார்கிட்ட என்ன மாதிரியான எமோஷன்ஸ் காட்டணும்னு நமக்குத் தெரியும்தானே. அந்தமாதிரிதான் சினிமாவும். ஒவ்வொரு ஷூட்டிங் ஸ்பாட்டும், வெவ்வேற மாதிரி இருக்கும். அதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை.”

“ஏன் ஒரே நேரத்தில் நிறையப் படங்களில் நடிக்கிறீங்க... எதுவும் ஸ்பெஷல் காரணங்கள் உண்டா?”

``ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி வேலை செய்றது பிடிக்கும். எனக்கு  இப்படி  நடிக்கிறதுதான் பிடிச்சிருக்கு. இதனால என்னை எப்பவுமே என்கேஜ்டா வெச்சுக்க முடியுது. அதேசமயம் நான் நடிக்கிற படங்கள் மக்களுக்குப் பிடிச்சிருக்கணும்கிறதுல ரொம்பக் கவனமா இருக்கேன். கிராமத்துப் படம் பண்ணினா, அடுத்து சிட்டி ஸ்டோரி பண்ணணும்னெல்லாம் எனக்கு எந்த பிளானும் கிடையாது. கதை நல்லாயிருந்தா, ஒரே ஜானர்லகூட தொடர்ந்து நடிப்பேன். இது கிட்டத்தட்ட நமக்கு நாமே  வெச்சுக்கற டெஸ்ட். மக்கள் கலாய்க்காமல் இருந்தால், அதுவே சந்தோஷம்தான்.”

“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”
“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”

“விஜய் சேதுபதி ஹீரோ, வில்லன், காமெடின்னு எந்த கேரெக்டர்ல நடிச்சாலும் ரசிகர்கள் ஏத்துக்கிறாங்களே... ரசிகர்களோட பல்ஸை எப்படிப் பிடிக்கிறீங்க?’’

``நாமதான் வேற வேற யோசனையில் இருக்கோம். `நாம போன படத்துல இப்படி நடிச்சோம், அடுத்த படத்தில் இப்படி நடிச்சா ரசிகர்களுக்குப் பிடிக்காது... மக்கள் விரும்ப மாட்டாங்க’ன்னு நினைச்சுக்கிறோம். ஆனால், மக்கள் ரொம்பத் தெளிவா இருக்காங்க. முடிஞ்ச அளவுக்கு மக்களோட மனசைத் தொடுற மாதிரியான கேரக்டர்கள் இருந்தால் போதும். எல்லாமே இயற்கைதான். இயற்கைகிட்ட சில விஷயங்கள் கேட்கிறேன். அதுவா கொடுக்குது. வாங்கிக்கிறேன்.”

“அப்படி என்னென்ன கிடைச்சிருக்கு?”

“இயற்கைக்கு நிறைய சக்தி இருக்குங்க. மரம், செடி, கொடி, மனுஷன், புழு பூச்சினு எல்லாருடைய எனர்ஜியாலும் உருவானதுதான் இயற்கை. அதுக்கு நாம பேசினா கேட்கும். அதை அது நமக்குத் திருப்பிக்கொடுக்கும்.  2011-ல் துபாய்ல இருந்தபோது திடீர்னு ஒருநாள் தூக்கத்திலிருந்து எழுந்து ‘நான் ஒரு நடிகன்... நான் ஒரு நடிகன்...’னு என்னை அறியாமச் சொன்னேன். மீண்டும் அதை தூக்கத்திலேயே திருத்திக்கிட்டு... ‘நான் ஒரு நல்ல நடிகன்... நல்ல நடிகன்’னு சொன்னேன். அப்பெல்லாம் சினிமாவில் நான் இல்லவே இல்லை. ஆனால், அது இன்னைக்கு உண்மையாவே நடந்திருக்கு. இது இயற்கையோட சுவாரசியம்தான்னு   நினைக்கிறேன். அதனால நாம நினைக்கிறது நடக்கும். இயற்கையை நம்புங்க. நான் நம்புறேன்.”

`` `ஜூங்கா’, `சீதக்காதி’, `சூப்பர் டீலக்ஸ்’, ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’னு தொடர்ந்து பல படங்கள்ல நடிச்சிட்டிருக்கீங்க. என்னென்ன ஸ்பெஷல்?”

`` ‘ஜூங்கா’ல ஒரு டான். டார்க் ஹியூமர் டான். ‘சூப்பர் டீலக்ஸ்’ல ஒரு திருநங்கை. அது மிகப்பெரிய அனுபவம். இயக்குநர் குமாரராஜா கைகளுக்கு ஆயிரம் முத்தங்களைக் கொடுக்கணும். அதுவும் அந்த ஷில்பா கேரக்டர்ல வந்தே அவருக்கு முத்தம் கொடுக்கணும்னு ஆசைப்படுறேன். கிட்டத்தட்ட குறிஞ்சி மலர் மாதிரியான ஒரு ஸ்க்ரிப்ட். அதைக் கேட்டதுமே, ‘ஐயா... என்னையும் சேர்த்துக்கோங்க’னு நானா விருப்பப்பட்டுப் பண்ற கேரக்டர் அந்தத் திருநங்கை கேரக்டர். `சீதக்காதி’ படத்துல ஒரு நாடகக்கலைஞர். பயங்கரக் கற்பனையான ஸ்க்ரிப்ட். ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்துல திருடன் கேரக்டர். ரொம்ப ஜாலியான படம். செம ஜாலியா நடிச்சிருக்கேன்.”

“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”

“திருநங்கை கேரக்டர் ரொம்ப சவாலா இருந்ததா?”

`` முதல்ல, ஒரு ஆணா இருக்குறவங்க தன்னைப் பெண்ணா நினைச்சுக்கிறப்போ, அந்தத்தன்மை, அந்த நளினத்தைக் கொண்டு வந்துடலாம்னுதான் நினைச்சேன். ஆனா, நடிக்க ரொம்ப சேலன்ஜிங்கா இருந்துச்சு. திருநங்கை கேரக்டர்ல நடிக்கிறேன்னு சொன்னதுமே சில பேர் அருவருப்பான கமென்ட்ஸ் சொல்ல ஆரம்பிச்சாங்க. அவங்களுக்கெல்லாம் இன்னும் பக்குவம் வரலை, வாழ்க்கைன்னா என்னன்னு புரியலைன்னுதான் சொல்லணும்.   திருநங்கைகளும் சக மனுஷங்கதானே. பக்கத்து வீட்டுக்கு சாவு வந்தா, நம்ம வீட்டுக்கு வராதுங்கற குருட்டு நம்பிக்கை மாதிரியிருக்கு பலபேரின் நினைப்பு. எல்லோருக்கும் எல்லாமும் நடக்கும். நம்ம வீட்டிலும் திருநங்கை, திருநம்பின்னு யாரோ நாளைக்கு மாறலாம். மேல்சாதி, கீழ்சாதினு பாக்கிறமாதிரி, திருநங்கைளையும் பிரிச்சுப்பாக்குறாங்க. இப்படி சாதிரீதியா, செக்ஸுவல் ரீதியாப் பிரிக்கிறது எல்லாமே நம்ம தலைக்குள்ள திணிக்கப்பட்ட மிகப்பெரிய அரசியல். அதுதான் சக மனுஷங்களைத் தள்ளி வெச்சுப் பார்க்கவைக்குது. மக்கள் சேரவே கூடாதுங்கிறதுதான் அந்தக் கீழ்த்தரமான அரசியலோட நோக்கம். அதை ஜெயிக்க நட்பால மட்டும்தான் முடியும்.”

“ இப்பெல்லாம் நிறைய அரசியல் பேசுறீங்களே. ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் டீசர்ல வந்த ராமன், ராவணன் பத்தின டயலாக்ஸ்கூட சர்ச்சைகளை ஏற்படுத்துச்சே?’’

“டீஸர் வந்தப்போ, அது அவ்ளோ சர்ச்சையாகும்னு நினைக்கலை. படத்துல அந்த டயலாக் கண்டிப்பா வராது. அதை மாத்திட்டோம். இனிமேல் இதில் அரசியல் பேச வேணாம். எங்களோட நோக்கம் யாரையும் புண்படுத்துறது கிடையாது. அதை நாங்க மாத்திட்டோம்... மாத்திட்டோம்... மாத்திட்டோம்.”

“மணிரத்னம் படத்தில் நடிக்கப்போறதா செய்திகள் வருதே. அதுல என்ன கேரக்டர்?”

``ஆமாம். நடிகர்கள் எல்லோருக்குமே மணி சார் படத்துல நடிக்கணும்னு கனவு இருக்கும். எனக்கும் அந்த ஆசை, கனவெல்லாம் இருந்துச்சு. கனவு இப்போ நிஜமாகுது.  கதை சொன்னதில் என்னோட போர்ஷன் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. நிறையப் பேர் நான் கெஸ்ட் ரோல் பண்றேன்னு சொல்லுறாங்க. அப்படி எல்லாம் எதுவும் இல்லைங்க. படம் முழுக்க நான் வருவேன். வித்தியாசமான ஒரு கேரக்டர்.”

“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”

“சினிமாவைத் தாண்டி... இங்க நடக்கும் அரசியல் மாற்றங்களை எல்லாம் கவனிக்கிறீங்களா?’’

`` எதைப் பத்திப் பேசினாலும் அது சாதிக்குள்ளதானே வந்து நிக்குது. `நீட்’ பிரச்னையில  உயிரிழந்த அனிதாவின் விஷயத்திலும் அதேதான் நடந்தது. இன்னொரு பக்கம் எல்லாமே ஒழிஞ்சிட்ட மாதிரியான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்திவெச்சிருக்காங்க. அப்படியெல்லாம் எதுவும் இங்க ஒழிஞ்சிடலை. ஆழமா அதை விதைச்சிட்டே இருக்காங்க. முக்கியமா இளைஞர்கள்கிட்ட சாதி நிறையவே இருக்கு. அதை விட்டு வெளில வரணும்னு நமக்குத் தெரியணும், புரியணும். வாழ்க்கைக்குத் தேவை நல்ல நண்பர்கள், நல்ல மனிதர்கள். அதை சாதி, மதம் பார்த்தெல்லாம் தேர்ந்தெடுக்க முடியாது. நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் நமக்கு நண்பனாவும் இருக்க முடியாது; நமக்கு நல்ல தலைவனாவும் இருக்க முடியாது.”
 
``குடும்ப வாழ்க்கை எப்படிப் போயிட்டிருக்கு? பசங்க என்ன பண்றாங்க?’’

``நான் ஒண்ணே ஒண்ணுதான் என் பசங்ககிட்ட சொல்லியிருக்கேன். 18 வயசு வரைக்கும் உங்களோட மூளையும் உடம்பும் பவர்ஃபுல்லா இருக்கிறதுக்கான எல்லா முயற்சிகளையும்  ஒரு அப்பாவா நான் செய்வேன். அதுக்கு அப்புறம் உங்களைப் பலப்படுத்த வேண்டியது இந்தச் சமுதாயம்தான். அவங்களோட ஒட்டி உறவாடிப் பழகிக் கத்துக்கோங்கனு சொல்லியிருக்கேன்.

“நம்மைப் பிரிக்கணும்னு நினைக்கிறவன் தலைவனா இருக்க முடியாது!”

என் மனைவி ஜெஸ்ஸி. என்னைப் பார்க்காம இருந்தா, என் மனைவி இன்னும் கொஞ்சம் நிம்மதியா வாழ்ந்திருக்கலாம். என்னால அவங்க கஷ்டப்படுறாங்கனு நினைக்கிறேன். எனக்கு இந்த வருஷம் 40 வயசாகப்போகுது. இத்தனை வருஷத்துல நான் கத்துக்கிட்டது ஒண்ணேஒண்ணுதான். வாழ்க்கை இப்படியிருக்கும், அப்படியிருக்கும்னு கணிக்கவே முடியாது.  என்ன வருதோ, அதை அப்படியே ஏத்துக்கணும். இப்ப வயசாகுதோனு எனக்குத் தோணுது.  ஆனா, அதுவும் கொஞ்ச நாள்ல மறைஞ்சுபோய்டும். 50-ஐக் கடக்கிறப்போ வாழ்க்கை, நம்மை  மரணத்துக்கு  தயாராக்கிடும்னு நினைக்கிறேன்.”