Published:Updated:

பொங்கிடுவோம் ப்ரோ!

பொங்கிடுவோம் ப்ரோ!
பிரீமியம் ஸ்டோரி
பொங்கிடுவோம் ப்ரோ!

பரிசல் கிருஷ்ணா

பொங்கிடுவோம் ப்ரோ!

பரிசல் கிருஷ்ணா

Published:Updated:
பொங்கிடுவோம் ப்ரோ!
பிரீமியம் ஸ்டோரி
பொங்கிடுவோம் ப்ரோ!

பொங்கல்னா... என யார் ஆரம்பித்தாலும் ஃப்ளாஷ்பேக்குக்கே தாவுகிறார்கள். அப்படி ரிவர்ஸ்

பொங்கிடுவோம் ப்ரோ!

பட்டனைத் தட்டியவர்கள், சிட்டியில் இருப்பவர்கள் பொங்கலை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என டிப்ஸும் தருகிறார்கள். வாங்களேன் கேட்போம்!

ஆர்.ஜே.பாலாஜி

என்னால் மறக்கமுடியாததுனா அது போன வருஷப் பொங்கல்தான். கிரண்பேடிகூட ஒரு விழால பேசி அது வைரலானது, ஆனந்த விகடன் அவார்ட்ஸ் மேடைல ரஜினி, கமல்கூட செல்ஃபி எடுத்துக்கிட்டதுனு ஆரம்பிச்சது... ஜல்லிக்கட்டுப் போராட்டத்துல சூடு பிடிச்சது. எனக்கு மட்டுமல்ல, பெரும்பாலான தமிழர்களுக்கு போன வருஷத்துப் பொங்கல்தான் மறக்க முடியாததா இருக்கும். செலிபரேஷனா வீட்டுக்குள்ள கொண்டாடினதைத் தாண்டி, ஒரு மாநிலமே ஒண்ணா கொண்டாடின பொங்கல் அது.

பொங்கிடுவோம் ப்ரோ!

சென்னை மாதிரி சிட்டில இருக்கறவங்க எப்படிக் கொண்டாடலாம்னா, வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்காம கரும்பு வாங்கி, ஃபேமலியோட பேசி, கலகலனு கொண்டாடலாம். கடைகள்ல வாங்காம, ஸ்வீட்டெல்லாம் வீட்ல செஞ்சு ஜமாய்க்கலாம்!

ஜாக்குலின்

பொங்கிடுவோம் ப்ரோ!

ரெண்டு வருஷம் முன்ன விஜய் டி.விக்குள்ள வெச்ச பொங்கல்தான் மறக்கவே முடியாதது.  எல்லோருமே ஃபேமலி மாதிரி கூடி, பொங்கல் வெச்சது வேற லெவல்ல இருந்தது. இந்த வருஷப் பொங்கல் எனக்கு ரொம்பவே  ஸ்பெஷல்.சினிமால நடிக்கணும்கிற என் கனவு நிறைவேறியிருக்கு. பெரிய திரைல வரப்போறேன். `கோலமாவு கோகிலா’ படத்துல நயன்தாராவுக்குத் தங்கச்சியா நடிச்சிருக்கேன். ரொம்பவே ஹேப்பி பொங்கல் இதுதான். சென்னை மாதிரி சிட்டில இருக்கிறவங்க ஃப்ரெண்ட்ஸோட ஜாலியா பொங்கலைக் கொண்டாடலாம்!

அனு ஹாசன்

சின்ன வயசுல கொண்டாடின ஒரு பொங்கல் ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு. எங்கம்மா சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல் மட்டும் இல்லாம சர்க்கரை வள்ளிக்கிழங்கை வெல்லத்துல போட்டு பாகு மாதிரி பண்ணி ஒரு ஸ்வீட் கொடுத்தாங்க. அதனாலயே அந்தப் பொங்கல் ரொம்ப நல்லா ஞாபகம் இருக்கு. அப்புறம் கரும்பு கொண்டுபோன டிராக்டர் பின்னால ஓடி, கரும்பப் பிய்க்க ஆசைப்பட்டு, கையைக் கிழிச்சுக்கிட்டதெல்லாம் மறக்கவே முடியாது.

பொங்கிடுவோம் ப்ரோ!

கிராமத்துல இருக்கறவங்க, சிட்டில  இருக்கறவங்க  அப்டின்றதைத் தாண்டி, பொங்கல்ங்கறது ஓர் உணர்வு.  எங்க இருந்தாலும் புது டிரெஸ், ஒரு அவுட்டிங்னு பொங்கலைப் பொங்கலோ பொங்கல்னு கொண்டாடலாம்!

ஹரீஷ் கல்யாண்

சின்னவயசுல பொங்கல்னா 3 நாள் தொடர்ந்து லீவு கிடைக்கும்னு சந்தோஷமா இருக்கும். அப்பெல்லாம் போகிக்கு எதையாவது எரிச்சா கோபம் வரும். ‘ஏன் எரிக்கிறாங்க’னு நெனைப்பேன். இல்லாத யாருக்காவது குடுக்கலாம்னு தோணும்.  ஒரு பொங்கலப்போ யாரோ என்கிட்ட “மாடு ஒண்ணுக்கடிச்சா, சாணி போட்டா அது நம்மளை ஆசீர்வதிக்கறதா அர்த்தம்”னு சொன்னாங்க. அதனால அப்போ ‘மாடு எப்ப உச்சா போகும்’னு பார்த்துட்டே இருந்தேன். 

பொங்கிடுவோம் ப்ரோ!

சிட்டில இருந்தாலும், பொங்கல் ஸ்பெஷல்தானே?  ஸ்டவ்  இல்லாம அடுப்புல வெச்சு, கரும்பை அடுக்கி, நம்ம ஸ்டைல் டிரஸ்ல ஒண்ணா கூடிக் கொண்டாடலாம். நமக்குத்தான் பீச் இருக்கே. காணும் பொங்கலப்போ அவ்ளோ கூட்டம் மொய்க்கும். அதையும் மிஸ் பண்ணாம என்ஜாய் பண்ணுவோம்!

மதுமிதா

எனக்கு ஒரு தோட்டவீடு வாங்கி, வெளில பானை, கரும்பெல்லாம்  அடுக்கி வெட்டவெளில பொங்கல் கொண்டாடணும்னு ஆசையா இருக்கு. ஆனா நினைவு தெரிஞ்சு அப்படி ஒரு பொங்கல் கொண்டாடின ஞாபகமே இல்லையே... நான் என்னத்தச் சொல்லுவேன்!

பொங்கிடுவோம் ப்ரோ!

அபார்ட்மென்ட்ல இருக்கறவங்க எல்லோருமா ஒரு பெரிய பானை வாங்கி, அதுல ஒண்ணா பொங்கல் வைக்கலாம். எப்படியும் எல்லா அபார்ட்மென்ட்லயும் ஒரு இடம் இருக்கும். அங்க கூடி, ஒண்ணா கொண்டாடலாம். அட்லீஸ்ட் அன்னைக்கு ஒரு நாளைக்காச்சும், ‘என் பொங்கல் என் உரிமை’னு அவங்கவங்க வீட்டுக்குள்ள வெச்சுக்காம எல்லோரோடயும் ஷேர் பண்ணி கொண்டாடலாம். தேனடை சொல்றது கரெக்ட்தானே?