Published:Updated:

கலாய் இலக்கியம்!

கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

கலாய் இலக்கியம்!

ப.சூரியராஜ், ஓவியங்கள்: கார்த்திகேயன் மேடி

Published:Updated:
கலாய் இலக்கியம்!
பிரீமியம் ஸ்டோரி
கலாய் இலக்கியம்!

ரசியல்வாதிகளை அவல் பொரிபோல் அசால்டாக ஊதித்தள்ளுகிறார்கள் மீம் க்ரியேட்டர்கள். பாவம், பரிதாபம், பாரபட்சம் பார்க்காமல் எல்லோரையும் வெச்சு செய்கிறார்கள். அவர்களிடமிருந்து தப்பிப்பதுதான் எப்படி? இதோ அரசியல்வாதிகளுக்குச் சில யோசனைகள்...

* ``நானும் ரௌடிதான்’’, ``சிங்கம் போல ஸ்ட்ரென்த் எனக்கு” என பன்ச் டயலாக்குகளை எல்லாம் பேசிடவே கூடாது மை டியர் அரசியல்வாதிஸ். `பன்ச் பேசிட்டு அடிக்குறதெல்லாம் பழைய ஸ்டைல். பன்ச் பேசுறவங்களையே அடிக்குறதுதான் புது ஸ்டைல்’ என்ற கொள்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் மீம் க்ரியேட்டர்கள். எனவே, வாயிலிருந்து பன்ச் வந்தால், பஞ்சராக்கப்படுவது உறுதி.

கலாய் இலக்கியம்!

எந்தவித முன்னேற்பாடுமில்லாமல் பேட்டி கொடுக்கவே கூடாது. பேட்டிக்கு முன்பாகவே பாயின்ட்டுகளை மனப்பாடம் செய்துவிட்டு, கேள்வி கேட்பதற்கு முன்பாகவே சம்பந்தமில்லாமல் ஒவ்வொன்றாய் ஒப்பித்துவிட்டால் தப்பிக்க வாய்ப்புள்ளது. அதுவே, வார்த்தைக்கு வார்த்தை கால் மாத்திரை அளவில் கேப் விழுந்து, தடுமாறுவதுபோல் தெரிந்தாலும் மீம் மழை வெளுத்து வாங்கும்.

எந்நேரமும் குளியல் சோப் விளம்பரத்தில் வரும் அம்மாக்களைப் போல சிரித்துக்கொண்டும் இருக்கக்கூடாது, பாத்திரம் துலக்கும் சோப்பு விளம்பரத்தில் வரும் அம்மாக்களைப் போல `சிடுசிடு’வெனவும் இருக்கக் கூடாது. துணி சோப் விளம்பரத்தில் வரும் அம்மாக்களைப் போல ஒருவித ஜென் நிலையிலேயே இருத்தல் வேண்டும். ரியாக்‌ஷன்கள் கொடுத்தால் மீம் க்ரியேட்டர்கள் ஆக்‌ஷனில் இறங்கிவிடுவார்கள்.

மேடையிலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலோ காட்டுக்கத்து கத்தினாலோ, கடுப்பில் கெட்டவார்த்தையைச் சிதறவிட்டாலோ, கட்டாயம் மீம்ஸ் போட்டுப் பதறவைப்பார்கள். அதேபோல், எக்காரணத்தைக் கொண்டும் மேடையிலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ செல்போனை மட்டும் எடுத்துவிடாதீர்கள். போனை எடுத்து எது பேசினாலும் கதறல் சிதறல்தான்!

 தீர்வுகள் எட்டப்படாத பிரச்னைகளுக்கு எட்டாம் அறிவிலிருந்து யோசித்து ஐடியா சொல்லும் வேலைகள் கூடவே கூடாது. அறிவியல் லாஜிக்கோ, அரைகுறை ஆங்கிலமோ பேசிடவே கூடாது. அதாவது அரசியல்வாதிகளே, தனக்குத் தெரியாத ஒரு விஷயத்தைத் தெரிந்த மாதிரியே பில்டப் கொடுத்தால் மீம் க்ரியேட்டர்களுக்கு சுத்தமா பிடிக்காது பார்த்துக்கிடுங்க. அதேநேரம், அரசியல்வாதிகள் நீங்கள் பிரபலமாக வேண்டுமென நினைத்தால், இன்றைய தேதிக்கு இதே தமிழ்ப் பிள்ளைகளின் மீம்ஸ் துணையில்லாமல் ஆகவே முடியாது, அதையும் பார்த்துக்கிடுங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கலாய் இலக்கியம்!

நெட்டிசன்களின் படுபயங்கரமான ஆயுதம், போட்டோஷாப். அதை பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்களில்தான் பரிசோதித்துப் பார்ப்பார்கள். பாவத்த! சமீபத்தில், பெல்ஜியத்தைச் சேர்ந்த ராபர்ட் வேன் இம்பே என்பவர் பரிசோதித்துப் பார்க்க, கிடைத்த ரிசல்ட் இதோ. செலிபிரிட்டிகளை வெச்சு செஞ்சுட்டார் மனுஷன்...

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

ஜினி அரசியல் தமிழகத்தில் எடுபடுமாங்கிறது சந்தேகம்தான். மாதவன் அரசியலும் அதேமாதிரிதான், எடுபடுமாங்கிறது ரொம்ப சந்தேகம். தீபக்குக்கே மாதவனைத் தெரியலையாம், தமிழ்நாட்டு மக்களுக்கு எப்படித் தெரியும்ங்கிறேன். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகம்லாம் என்ன ஆகும்னே தெரியலை. ஆனால், எனக்கு அப்படி எந்த பயமும் இல்லை. வேட்புமனு ஃபில் பண்றது எப்படினு நான் கத்துக்கிட்டு வரேன். சீக்கிரமே, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி புரிவாள் இந்த இளைய புரட்சித் தலைவி, குட்டிம்மா, சின்ன அம்மா, பேபிம்மா, தீபாம்மா.

இப்படிக்கு,
ஜெ. தீபா

அச்சச்சோ... நான் ஆரம்பிச்ச கட்சிப் பெயர் என்ன, திடீர்னு மறந்துடுச்சே!

கலாய் இலக்கியம்!
கலாய் இலக்கியம்!

`ராவணன்’ படத்தின் க்ளைமாக்ஸில் ஸ்லோ மோஷனிலேயே பள்ளத்தாக்கில் பாய்ந்த வீரா விக்ரம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். ஆமாம், அதுதானே தமிழ் சினிமாவின் வழக்கம். ஐந்நூறு அடி பள்ளத்துக்குள் விழுந்தவரை, அங்கே வாழும் மலைவாழ் மக்கள் தூக்கிக் கொண்டுபோய் வாழை இலை விரித்துப் படுக்கவைத்து, மூலிகைகளை எல்லாம் அரைத்துப் பூசிக் காப்பாற்றிவிட்டார்கள். தமிழ் சினிமா வழக்கம்போல் கொஞ்சகாலம் பழைய நினைவுகளை மறந்து வாழ்ந்து கொண்டிருந்தார். ஒருமுறை டிவியில் டி.ஆர் டேபிளைத் தட்டியே `டன்டனக்கா டனக்குனக்கா’ பாடிக்கொண்டிருக்க, வீராவுக்கு `டன்டன்டன் டன்டனக்கா’ நினைவுகள் எல்லாம் திரும்பிவிட்டது. மலைவாழ் மக்கள் வீராவைப் பார்த்து ``வரையாடுகூட எட்டிப்பார்க்க பயப்படும். நீ எதுக்கு அறிவுகெட்டுப் பள்ளத்துக்குள்ளே குதிச்ச?’’ எனக் கேட்டதற்கு, ``நீ ஏன் அறிவில்லாமல் காப்பாத்துன?’’ என வீரா கடுப்படிக்க, உலக்கையாலேயே ஊமை அடியாய் அடித்துத் துரத்திவிட்டார்கள். தற்போது, கோணிப்பையைத் தலையில் மாட்டிக்கொண்டு தலைமறைவாய்ச் சுற்றிக்கொண்டிருக்கிறார்.