Published:Updated:

என் பேரு ரஜினி ஸ்பைடர்!

என் பேரு ரஜினி ஸ்பைடர்!

என் பேரு ரஜினி ஸ்பைடர்!

என் பேரு ரஜினி ஸ்பைடர்!

Published:Updated:
##~##

'அடடா ஷர்மா!’ என்று ரைமிங் மைமிங்கில் சப் எடிட்டர்கள் எடிட் செய்வார்கள். (பந்தயம்

என் பேரு ரஜினி ஸ்பைடர்!

100)  

அதா ஷர்மாவைப் பார்த்ததும் 'அடடா ஷர்மா’ என்று முதுகில் 'ஷொட்ட’த் தோன்றுகிறது! ('சொன்னோம்ல!’) 'ஜோய் ஆலுக்காஸ்’ விளம்பரத்தில் மாதவனுடன் மௌன மொழிக் கொஞ்சல்களால் வசீகரித்த மாடல், சென்னைக்கு வந்து இருந்தார்.  

என் பேரு ரஜினி ஸ்பைடர்!

''வெல்கம் டு சென்னை... இன்னொரு மும்பை மோகினியா?''

''வெயிட் ப்ளீஸ்... நான் அக்மார்க் கேரளா கேர்ள். என் அப்பா, நேவி ஆபீஸர். சின்ன வயசுல இருந்தே மும்பை வாசம். இப்பவும் வீட்ல பேசுறது மலையாளம்தான்!''

''அது என்ன அதா?''

'' 'அழகானவள், தன்னம்பிக்கை நிரம்பியவள்’னு அர்த்தம். இன்னொரு ரகசியம் சொல்லவா... எனக்கு இன்னொரு பேரும் இருக்கு. ஸ்கூல்ல என்னை 'ரஜினி ஸ்பைடர்’னு பட்டப் பேர் வெச்சுக் கூப்பிடு வாங்க. எனக்கு கதக் டான்ஸ் தெரியும். எங்கே டான்ஸ் போட்டின்னாலும், நான்தான் முதல் ஆளா நிப்பேன். கதக் மட்டும்னு இல்லை, எல்லா ஸ்டைல் டான்ஸ்லயும் பிச்சு உதறுவேன். அப்படி ஒரு சூப்பர் கலக்கல் பார்ட்டி நான்!''

''கேரியரின் ஆரம்பத்திலேயே மாதவன், கேத்ரீனா கைஃப்னு ஸ்டார்களோடு நடிச்சிட்டீங்க. அடுத்து சினிமாதானே... பாலிவுட்டா, கோலிவுட்டா?''

என் பேரு ரஜினி ஸ்பைடர்!

''ஏற்கெனவே நான் பாலிவுட் ஹீரோயின்தான். ஒரு வருஷம் முன்னாடி, '1920’-னு நான் நடிச்ச ஒரு இந்திப் படம் மூலம் தான் 'ஜோய் ஆலுக்காஸ்’ விளம்பர வாய்ப்பே கிடைச்சது. மாதவன்கூட நடிக்கணும்னு சொல்லவும் உடனே 'ரைரைட்’ சொல்லிட்டேன். நோக்கியா, ஓலே, பட்டர்ஃப்ளைனு அடுத்தடுத்து நிறைய விளம்பரங்களில் நடிச்சாலும், மாதவன்கூட நடிச்சதைப் பத்திதான் இப்பவும் விசாரிக்கிறாங்க. கேத்ரீனா வோட ரசிகை நான். அவங்களை ஒரு தடவையாவது நேர்ல பார்க்க முடியுமான்னு தவிச்சவளுக்கு, அவங்ககூடவே நடிக்கும் வாய்ப்பு. ஏகப்பட்ட அழகு கொட்டிக்கிடக்கு. கேமரா வைவிட நேர்ல கேத்ரீனா இன்னும் இன்னும் அழகு!''

என் பேரு ரஜினி ஸ்பைடர்!
என் பேரு ரஜினி ஸ்பைடர்!

''22 வயசுன்னு சொல்லிட்டீங்க... எத்தனை காதல்கள் கடந்து வந்திருக்கீங்க?''  

''ஆங்... இந்த மாதிரி கேள்வி களுக்கு ஏதோ பதில் சொல்லணும்னு கேத்ரீனா டிப்ஸ் கொடுத்தாங்களே, ஆங்... 'நோ கமென்ட்ஸ்!''’ - கன்னம் குழியச் சிரிக்கிறார் ரஜினி ஸ்பைடர்!