Published:Updated:

குட்டீஸ் இப்போ க்யூட்டீஸ்!

குட்டீஸ் இப்போ க்யூட்டீஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
குட்டீஸ் இப்போ க்யூட்டீஸ்!

ஆர்.வைதேகி, சுஜிதா சென், சனா

குட்டீஸ்களாக வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர்கள் இன்று க்யூட்டீஸாக வளர்ந்து நிற்கிறார்கள். ஒரு `ஹாய்’ மெசேஜ் தட்டினால் படங்களுடன்  வாட்ஸ் அப் வாய்ஸில் பேட்டிதட்டி மிரளவைத்தவர்கள் இங்கே!

குட்டீஸ் இப்போ க்யூட்டீஸ்!

எஸ்தர் அனில்

‘பாபநாசம்’ படத்தில் குட்டிப் பெண்ணாக அறிமுகமான எஸ்தர் அனில் இன்று  ஹீரோயின் என்ட்ரிக்காகக் காத்திருக்கிறார். கொச்சினில் உள்ள பள்ளியில் ப்ளஸ் 1 படிக்கும் எஸ்தருக்கு இப்போது வயது 16.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
குட்டீஸ் இப்போ க்யூட்டீஸ்!

`` ‘பாபநாசம் படத்துக்குப் பிறகு எங்க காணாமப்போயிட்டே?’னு கேட்குறாங்க. நான் எங்கேயும் போகலை.  `ஹாய்... நான் ஹீரோயினாகிட்டேன்’னு எல்லோர்கிட்டயும் சொல்லிட்டிருக்கேன். ‘பூவசரம் பீப்பீ’ படத்தோட டைரக்டர் ஹலீதா ஷமீம் டைரக்ட் பண்ற ‘மின்மினி’ படத்துல நடிச்சிட்டிருக்கேன். இன்டர்வெல் வரைக்கும் ஷூட் பண்ணியிருக்காங்க. செகண்ட் ஹாஃப்ல நான் வளர்ந்துட்ட மாதிரி காட்டணுமாம். அதனால ஒரு பிரேக் கொடுத்து நிஜமாவே நான் வளரணும்னு வெயிட் பண்ணிட்டிருக்காங்க. ஜூன் மாசம் மறுபடி ஷூட்டிங் ஆரம்பிக்கும். அப்புறம் மலையாளத்துல பிரபல டைரக்டர் ஷாஜி என்.காருணின் அடுத்த படத்துல ஹீரோயினா நடிக்கிறேன். ‘ஜெமினி’னு ஒரு மலையாளப்படத்துல ஹீரோயினா, கலையரசன் இயக்கத்துல ‘குழலி’னு ஒரு தமிழ்ப் படத்துல குழலிங்கிற மெயின் கேரக்டர்ல ‘காக்கா முட்டை’ விக்னேஷ்கூட நடிக்கிறேன். நடிப்புதான் என்னோட பேஷன். சீக்கிரமே முழுநேர நடிகையா என்னைப் பார்க்கலாம்!’’

குட்டீஸ் இப்போ க்யூட்டீஸ்!

அனிகா

‘என்னை அறிந்தால்’ ஈஷா, இப்போது ‘தி கிரேட் ஃபாதர்’ படத்தில் சாரா டேவிட். எட்டாவது படித்துக்கொண்டிருக்கும் அனிகாவுக்கு சினிமா, அறிவியல் தொழில்நுட்பம் என இரண்டிலுமே சாதிக்க வேண்டும் என்பதுதான் கனவாம்.

குட்டீஸ் இப்போ க்யூட்டீஸ்!

‘`ஒன்றரை வயசுலயே மாடலாகிட்டேன்.  அஞ்சு வயசுல ‘கத துடருன்னு’ங்கிற  மலையாளப் படத்துல முதன்முதலா நடிச்சேன். அப்புறம் குழந்தை நட்சத்திரமா நிறைய மலையாளப்படங்கள்ல நடிச்சிட்டேன். ‘அஞ்சு சுந்தரிகள்’ படத்துக்காக எனக்குக் கேரள அரசு விருது கிடைச்சது. அந்தப் படம்  பார்த்துட்டுத்தான் கெளதம் மேனன் சார் ‘என்னை அறிந்தால்’ படத்துக்குக் கேட்டார். இந்தியா முழுக்க அந்தப் படத்துக்காக அஜித் அங்கிள்கூட டிராவல் பண்ணினது செம ஜாலியா இருந்துச்சு. மம்முட்டி சார் மகளா ‘தி கிரேட் ஃபாதர்’ படத்துல சாரா டேவிட்னு ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.  மம்முட்டி சார்கூட இது எனக்கு மூணாவது படம். எனக்குத் தமிழ், மலையாளம்னு ரெண்டு மொழிகள்லயுமே நடிக்கணும்னு ஆசை. பார்வதி அக்கா மாதிரி!’’

குட்டீஸ் இப்போ க்யூட்டீஸ்!
குட்டீஸ் இப்போ க்யூட்டீஸ்!

சாதனா

`தங்க மீன்கள்’ படத்தில் செல்லம்மாவாக நடித்து தேசிய விருதையும் வென்ற சாதனா இப்போது பேரன்பின் பேரொளி. ராமின் `பேரன்பு’ படத்தில் சாதனாவுக்கு நடிப்பில் கலங்கடிக்கும் கதாபாத்திரம். துபாயில் பத்தாம் வகுப்பு படித்துவரும் சாதனா மிகச்சிறந்த மாணவிக்கான விருதையும் வாங்கியிருக்கிறார். ``ராம் சாரை நான் ‘அப்பா’னுதான் கூப்பிடுவேன். சினிமால எனக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது ராம் அப்பாதான். இப்போ ‘பேரன்பு’ படத்துலயும் என்னை நடிக்க வெச்சிருக்கார். இந்தப் படத்துல மம்முட்டி சாருக்கு மகளா நடிச்சிருக்கேன். அவர் ரொம்பக் கலகலனு பேசுவார். அப்படியே ராம் அப்பா மாதிரி செமையா காமெடி பண்ணுவார். ராம் அப்பா மாதிரியே இயக்குநராகணும்னுதான் எனக்கு ஆசை!”

குட்டீஸ் இப்போ க்யூட்டீஸ்!

சாரா

குட்டி நிலாவாக அறிமுகமானவர் இப்போது முழுநிலாவாக வளர்ந்து கொண்டிருக்கிறார். மும்பைப் பெண்ணான சாராவுக்கு இப்போது 12 வயது.

குட்டீஸ் இப்போ க்யூட்டீஸ்!

``நான் இப்ப பேபி சாரா இல்லை, வளர்ந்துட்டேன். எனக்குப் பனிரெண்டு வயசாச்சு. என் ஸ்கூல் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். ஹாலிடே இருக்கும் போதுதான் ஷூட்டிங் போவேன். என் ஃப்ரெண்ட்ஸ்  எல்லோருக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். அவங்க யாரும் என்னை ஒரு ஸ்டாரா பார்க்க மாட்டாங்க. இப்போ நிறைய விளம்பரங்கள்ல நடிக்கிறேன். அப்புறம் முக்கியமான ஒரு விஷயம், ‘தி சாங் ஆஃப் ஸ்கார்ப்பியன்ஸ்’னு ஒரு இன்டர்நேஷனல் இந்திப் படத்துல நடிச்சிருக்கேன். இதுவரைக்கும் அப்பா சொல்ற; இயக்குநர்கள் சொல்ற மாதிரி மட்டும்தான் நடிச்சிட்டிருந்தேன். படத்தோட கதை, என் கேரக்டர் எல்லாம் எனக்குப் புரியாது. இப்போதான் என்ன படம் எடுக்குறாங்க, என்ன கதை, நான் என்னவா நடிக்கிறேன்னு புரிய ஆரம்பிச்சிருக்கு.

 ஜிம்னாஸ்டிக்ஸ், கிளாசிக்கல் சிங்கிங்னு எக்கச்சக்க கிளாசஸ் போறேன். என்னைப் பாப்புலராக்கினது தமிழ்ப்படங்கள்தான். அதனால தமிழ் கத்துட்டிருக்கேன். வீட்டுக்கே வந்து ஒரு ஆன்ட்டி தமிழ் ட்யூஷன் எடுக்கிறாங்க. சீக்கிரமே உங்ககிட்ட சுத்தத் தமிழ்ல பேசுவேன்.’’