Published:Updated:

“பெண்கள்தான் டாமினேட்டிங்கா இருந்தோம்!”

“பெண்கள்தான் டாமினேட்டிங்கா இருந்தோம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“பெண்கள்தான் டாமினேட்டிங்கா இருந்தோம்!”

சனா, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

“இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் என் மூன்று ஆண்டுக்கால உழைப்பு. கதையை ரெடி பண்ணிட்டு, இந்தப் படத்தை வெளில யாராவதுதான் தயாரிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். `வீட்டுலயே புரொடியூசர் வெச்சிக்கிட்டு, இவங்க ஏன் வெளியே புரொடியூசரைத் தேடுறாங்க. அப்போ கதை சரியில்லையா’னு சில கேள்விகள் வரும்னு தெரிஞ்சும் தைரியமா தயாரிப்பாளர்களைத் தேடினேன். தயாரிப்பாளர் கிடைக்குறதுதான் ரொம்பக் கஷ்டமா இருந்துச்சு. அதுதான் `வணக்கம் சென்னை’ படத்துக்கும் அடுத்தபடத்துக்கும் இடையே அதிக இடைவெளி விழக் காரணம்’’- நிறுத்தி நிதானமாகப் பேசுகிறார் கிருத்திகா உதயநிதி. தி.மு.க செயல்தலைவரின் மருமகள் இப்போது கோலிவுட்டின் பிஸி இயக்குநர். 

“பெண்கள்தான் டாமினேட்டிங்கா இருந்தோம்!”

``தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் ஹீரோக்களில் மிக முக்கியமானவர் விஜய் ஆண்டனி. அவரே நடித்தும், தயாரித்துமிருக்கிறார். எப்படி அமைந்தது இந்தக் கூட்டணி?’’

`` ‘வணக்கம் சென்னை’  படம் வெளியானதும் என்னுடைய அடுத்த படம் குறித்துப்பேச சில நடிகர்கள், தயாரிப்பாளர்களைச் சந்திச்சேன். அப்போதான் ‘பிச்சைக்காரன்’ படம் ரிலீஸாகியிருந்தது. அந்தப்படம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. `வணக்கம் சென்னை’ படத்தோட ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் கிட்ட எப்பவுமே என்னோட ஸ்க்ரிப்டைப் பத்தி டிஸ்கஸ் பண்ணிட்டே இருப்பேன். ரிச்சர்ட்தான்  ஒருநாள் `இந்தக் கதையை விஜய் ஆண்டனிக்குச் சொல்லலாமா?’னு கேட்டார். `ஆமாம்ல’னு தோணுச்சு. விஜய் ஆண்டனியைச் சந்திச்சேன். ஆனா, அவர் அப்போ `சைத்தான்’ போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள்ல இருந்தார்.  கதையை மூணு மாசம் காத்திருந்துதான் அவர்கிட்ட சொன்னேன். கதை அவருக்கு ரொம்பவும் பிடிச்சிருந்துச்சு. உடனே, நானே தயாரிச்சு நடிக்கிறேன்னு சொன்னார்.’’

`` இயக்குநர் பா.ரஞ்சித் `மெட்ராஸ்’ படத்துக்கு `காளி’ டைட்டில் வாங்கப் பல முயற்சிகள் எடுத்தார். ஆனால், அவருக்குக் கிடைக்காத டைட்டில் உங்களுக்குக் கிடைச்சிருக்கே?’’

``அதுக்குக் காரணம் விஜய் ஆண்டனிதான். படத்தில் அவருடைய கேரக்டர் பெயர் காளி. அவரிடம் கதை சொல்லிட்டிருக்கும்போதே, ‘நம்ம படத்துக்குக் காளினுதான் பேர் வைக்கிறோம்’னு சொன்னார். நானும் உற்சாகமாகிட்டேன். `காளி’ன்றது பவர்ஃபுல் டைட்டில். அதுக்காகவே இன்னும் பல விஷயங்கள் கதைக்குள்ளே சேர்த்தேன். ஆனா, இந்த டைட்டில் ரொம்பக் கஷ்டப்பட்டுதான் எங்க கைக்கு வந்துச்சு. விஜய் ஆண்டனி அவரோட படங்களுக்கு வித்தியாசமான டைட்டில்ஸ் வைப்பார். சினிமாத்துறையில் சிலபேர் படத்துக்குப் பேர் வைக்கிறதுக்குக்கூட ஜாதகம் பார்ப்பாங்க. நியூமராலஜிபடி பேர் தேடுவாங்க. ஆனா, எனக்கும் சரி, விஜய் ஆண்டனிக்கும் சரி, இதுமேல் எல்லாம் நம்பிக்கை இல்லை.’’

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“பெண்கள்தான் டாமினேட்டிங்கா இருந்தோம்!”

`` ‘காளி’ என்ன மாதிரியான படம்?’’

``இந்தப் படம் என்ன மாதிரியான ஜானர்னு எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஏன்னா, இந்தப் படத்தில் நிறைய ரொமான்ஸ், ஃபேமிலி, டிராமா, சஸ்பென்ஸ், ஆக்‌ஷன் எல்லாமே இருக்கு. இந்தப் படம் ஃபேமிலி ஆடியன்ஸுக்கு ரொம்பப் பிடிக்கும்னு நினைக்குறேன். சுவாரஸ்யமான விஷயம் படத்தில் நிறைய இருக்கு. அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பான்னு நான்கு ஹீரோயின்கள் நடிச்சிருக்காங்க. பெண்களோட பங்கும் படத்துல அதிகம் இருக்கும்.’’

``பெண் இயக்குநர்களின் வருகையை எப்படிப் பார்க்குறீங்க?’’

``ஆண் இயக்குநர், பெண்  இயக்குநர்னு சினிமாவில் எந்த வித்தியாசமும் இல்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்குப் போய்ட்டா, அங்க நீங்க இயக்குநர் அவ்ளோதான். `நான் ஒரு பெண். என்னைச் சுற்றி நிறைய ஆண்கள் இருக்காங்க’னு நான் ஃபீல் பண்ணதே கிடையாது. நிறைய பெண் இயக்குநர்கள் என்னோட ஃப்ரெண்ட்ஸ்தான். சமீபத்தில்கூட `இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா, ‘காளி’ படத்தைப் பத்தி விசாரிச்சிட்டு `சூப்பரா பண்ணுங்க’னு வாழ்த்தினாங்க. ஐஸ்வர்யா தனுஷும் அப்படித்தான். அப்புறம், இந்தப் படத்தில் இயக்குநர் மட்டும்தான் பெண் என்றில்லை. விஜய் ஆண்டனியின் மனைவி ஃபாத்திமாதான் படத்தின் தயாரிப்பாளர். ஃபாத்திமா ஆண்டனியின் தங்கைதான் தயாரிப்பு நிர்வாகி. படத்துல நாலு ஹீரோயின்ஸ். அதனால,  ஷூட்டிங் ஸ்பாட்ல பெண்கள்தான்  டாமினேட்டிங்கா இருந்தோம்.’’

``உங்க கணவர் நடிகர். நீங்க இயக்குநர். சினிமா, ஸ்க்ரிப்ட் பத்தியெலாம் வீட்ல பேசுவீங்களா?’’

``என்னோட ஸ்க்ரிப்ட்ஸ் பத்தி அவர்கிட்ட தொடர்ந்து டிஸ்கஸ் பண்ணிட்டே இருப்பேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர்கிட்ட கதை சொல்ல உட்கார்ந்துடுவேன்.  அவரே சில நேரம்  `தூக்கம் வரமாட்டேங்குது... கதை இருந்தா சொல்லு’னு கேட்பார். எங்க வேலைகளைப் பத்தி அடிக்கடி பேசிக்குவோமே தவிர, ஒருத்தரை ஒருத்தர் பாராட்டிக்கிறது ரொம்பவும் குறைவு. எங்களோட படங்கள்ல இருக்கிற குறைகளைப் பத்திதான் அதிகம் பேசுவோம்.’’

“பெண்கள்தான் டாமினேட்டிங்கா இருந்தோம்!”

``உங்கள் இயக்கத்தில் உதயநிதி நடிப்பாரா?’’

``கதை எழுதும்போது நடிகர்களை மனசுல வெச்சு நான் எழுதினது கிடையாது.  ஸ்க்ரிப்ட் முழுசா ரெடியானதும்தான் நடிகர்கள் பத்தி யோசிப்பேன். நிச்சயம் என் கணவருக்காக ஒரு ஸ்க்ரிப்ட் ரெடி பண்ணுவேன். அவர் கதை பிடிச்சு ஓகே சொல்லிட்டா எனக்கும் ஓகேதான்.’’

``உதயநிதி மத்த ஹீரோயின்ஸ்கூட டூயட் பாடி ஆடும்போது ஒரு மனைவியா உங்களுக்குக் கோபம் வருமா?’’

``உதயநிதி சினிமாக்கு நடிக்க வந்த புதிதில் எனக்கு ஒரு மாதிரி இருந்துச்சு. ஏன்னா, திடீர்னு அவர் நடிக்க வந்துட்டார். இப்போ அப்படி இல்லை. அதுமட்டுமில்லாம நானும் சினிமாக்கு வந்துட்டதால் ஷூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கும், நடிகர்கள் எப்படி நடிப்பாங்கன்னு எல்லாமே புரிஞ்சிடுச்சு. அதனால அவரோட டூயட், ரொமான்ஸெல்லாம் இப்போ என்னை பாதிக்கிறது இல்ல.’’

“பெண்கள்தான் டாமினேட்டிங்கா இருந்தோம்!”

``உங்க மாமா, அத்தை படம் பார்த்துட்டு கமென்ட் சொல்லுவாங்களா?’’

``ஆமாம். அவங்கதான் என்னோட பெரிய சப்போர்ட். நான் ஷூட்டிங் போயிட்டேன்னா வீட்ல அத்தைதான் பசங்களைப் பார்த்துப்பாங்க. மாமா என்னோட சினிமா வேலைகள் பத்தி அடிக்கடி பேசுவார். கதை பத்தியெல்லாம் கேட்பார். தன்னை எல்லா விஷயங்கள்லயுமே அப்டேட்டா வெச்சுப்பார்.’’