மலையாள மண்ணின் மோஸ்ட் வான்டட் நாயகி, ஐஸ்வர்யா லட்சுமி. அடுத்தடுத்து இரண்டு ஹிட். அதில்

சமீபத்தில் வெளியான ‘மாயாநதி’ மல்லுவுட்டில் மெகாஹிட்.

``முதல் படத்துல நிவின் பாலி, ரெண்டாவது படத்துல டொவினோ தாமஸ். ரெண்டு பேருமே என்கூட நடிச்ச நடிகர்கள் மட்டும் இல்ல. என் நண்பர்களும்கூட” என்று நிறைய மலையாளமும் கொஞ்சும் தமிழுமாகப் பேசுகிறார்.

“டாக்டருக்குப் படிச்சுட்டு நடிகையாகிட்டீங்களாமே...”

“ஆமாங்க... நான் மெடிக்கல் காலேஜ் ரெண்டாவது வருஷம் படிக்கும்போதே மாடலிங் பண்ணிட்டிருந்தேன். கேரளாவில் வெளியாகிற நிறைய பத்திரிகைகளின் கவர் கேர்ள் நான்தான். தமிழ் மற்றும் மலையாள விளம்பரங்கள்ல நடிச்சிருக்கேன். இதை ஒரு பொழுதுபோக்காதான் பண்ணிட்டிருந்தேன். மிகப்பெரிய மாடலா வரணும்னு எனக்கு எந்தக் குறிக்கோளும் இருந்ததில்ல. மாடலிங் மூலமாதான் சினிமா வாய்ப்பு வந்துச்சு. ‘நண்டுகளுடே நாட்டில் ஓரிடவேளா’ படம்தான் முதல் படம். நிவின்பாலிதான் ஹீரோ. அந்தப் படம் கத்துக்கொடுத்த அனுபவம் சினிமா மேல இருந்த பார்வையையே மாத்திருச்சு.’’

``மாயாநதி?’’

``இந்தப்படத்தோட ஸ்க்ரிப்ட் கேட்டதும் உடனே ஒப்புக்கிட்டேன். நாங்க படிக்கிறதுக்காக முக்கால்வாசி தமிழ்நாட்டுக்குதான் வர்றோம். ஸோ, தமிழ்நாட்டு காலேஜ்ல கிடைச்ச அனுபவங்களை இந்தப்படத்துல பார்க்கலாம். படத்தோட முக்கால்வாசிக் காட்சிகள் தமிழ்நாட்டுலதான் எடுக்கப்பட்டிருக்கு. மதுரை, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, கொடைக்கானல் ஆகிய இடங்கள்ல ஷூட்டிங் பண்ணினோம். இந்தப்படம் அல்மோஸ்ட் தமிழ்ப்படம்தான். ஐ லவ் தமிழ்நாடு. திரையில பார்க்குற காட்சிகளோட அழகு தமிழ் நாட்டுல ஷூட் பண்ணலைன்னா கிடைச்சிருக்குமானு தெரியல. ‘மாயாநதி’ படம் தமிழ் டயலாக்லதான் தொடங்கும். எங்க ஊர்ல எல்லோரும் சப்டைட்டிலே இல்லாம தமிழ்ப் படம் பார்ப்போம். தமிழ் ஹீரோஸ் எங்க ஹீரோஸ் மாதிரி. வாய்ப்பு கிடைச்சா கட்டாயம் தமிழ்ப் படத்துல நடிக்கணும். தமிழ் கத்துக்கிட்டு அந்தப் படத்துல டப்பிங் பண்ணணும்.”

“சினிமாக்கு வீட்ல எப்படி ஓகே சொன்னாங்க?”

“என் அம்மா அப்பா ரெண்டு பேருக்குமே ஆரம்பத்துல கொஞ்சம் பயம் இருந்துச்சு. `சினிமா நம்மளுக்கு ஒத்துவராது’னு சொன்னாங்க. எங்களோடது மிடில் க்ளாஸ் குடும்பம். அப்பா-அம்மா ரெண்டு பேருமே அரசு ஊழியர்கள். முதல் படம் இவ்வளவு பெரிய குழுவோட அமைந்ததுல நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. அதனால எந்தவித பயமும் படபடப்பும் எனக்கு இல்லை.”

“நிவின் பாலி பற்றி சொல்லுங்க?”

“சார் பயங்கர வாலு, எல்லோர்கிட்டயும் வம்பிழுத்துக்கிட்டே இருப்பார். செட்டுல ஒருநாள்கூட அமைதியா இருந்ததா சரித்திரமே கிடையாது. மிகவும் உண்மையான மனிதர்.”

“உங்களோட பொழுதுபோக்கு?”

“நிறைய புத்தகங்கள் படிக்கவும், பாடல்கள் கேட்கவும் பிடிக்கும். டான்ஸ் ஆடுறதை இன்னும் நல்லா கத்துக்கணும்னு நினைக்கிறேன். எந்த ஒரு நடிகரும் நடிக்கிறதுக்கு மொழி ஒரு தடையா இருக்கக் கூடாது. அதனால நேரம் கிடைக்குறப்போ, நிறைய மொழிகள் கத்துக்கணும்னு ஆசைப்படுறேன். அப்படி இருந்தாதான் நூறு சதவிகிதம் அர்ப்பணிப்பு உணர்வோட படத்துல நடிக்க முடியும்.”