சாதியால் பிரிந்துகிடக்கும் ஊர், அங்கே அப்பா காணுகிற ‘சமத்துவ’ ஜல்லிக்கட்டுக் கனவை நிகழ்த்திக் காட்டும் மகனே ‘மதுர வீரன்.’

பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைப் பின்னணியல் சாதிப்பெருமை பேசாமல் ஒரு படம். அக்கறையோடு கதை சொல்லியிருக்கும் அறிமுக இயக்குநர் முத்தையாவைப் பாராட்டலாம். அதை, பிரசாரம்போல இல்லாமல் அழகாகத் திரைக்கதையமைத்து கமர்ஷியல் பந்தி வைத்திருக்கிறார்!

ஹீரோ ஷண்முக பாண்டியன் ஓங்குதாங்காய் தெக்கத்தி டெர்மினரேட்டராய் கம்பீரமாய் இருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கோயில் காளையைப்போலச் சீறிப்பாய்கிறார். நடனம் தவிர எல்லாம் பக்கா மக்கா!

ஷண்முக பாண்டியனின் அப்பாவாக சமுத்திரக்கனி... கம்பீரக்கனி. மிக அழுத்தமான பாத்திரம் என்பதை உணர்ந்து நடித்திருக்கிறார். ஹீரோயின் மீனாட்சி. மண் வாசனையோடு வெடுக் துடுக் என மதுரைப் பெண்ணாய் மனசில் நிற்கிறார். தேர்ந்தெடுத்து நடித்தால் கிராமத்து ரோல்களில் ஜொலிக்க வாய்ப்பிருக்கிறது! பால சரவணனின் இயல்பான காமெடி கவுன்ட்டர்கள் நிறையவே சிரிப்பை வரவழைக்கின்றன. கொஞ்சநேரமே வந்தாலும் ஆண்ட பரம்பரைப் பெருமை பேசும் `பனானா’ பவுன்ராஜின் பன்ச்சுகளுக்கு தியேட்டரே குலுங்குகிறது.

ஆண்ட பரம்பரை-ஆளப்போற பரம்பரை என இரு எதிர்துருவ கேரக்டர்களாய் வேல. ராமமூர்த்தியும், மைம் கோபியும் சண்டக்கோழியாய் வெடைத்துக் கொண்டு கொடுத்த பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். இவர்களோடு மாரிமுத்து, தேனப்பன் எனச் சின்னச்சின்னக் கதாபாத்திரங்களில் நடித்தவர்களும்கூட தெக்கத்திச் செய்நேர்த்தி.

``திங்கிற சோறுல இருந்து கும்பிடுற சாமிவரைக்கும் சாதி பார்த்து சண்டைபோட்டுக்கிட்டு இருக்கோம். அதனாலதான் போறவன் வர்றவன்லாம் ஏறி மிதிச்சிட்டுப் போறான்...’’, ‘`அப்பனுக்கு அப்புறம் பிள்ளைங்கிறது அரசியலுக்கு வேணா ஒத்து வரும். அம்புட்டுக்கும் ஒத்து வராதுப்பு!’’ என வசனங்கள் சீவிய கொம்பாய்ச் சீறுகிறது.

இயக்குநரே ஒளிப்பதிவாளராக இருப்பதனால் காட்சிகள் ஒவ்வொன்றும் கண்களில் நிறைகிறது. பாடல்களைவிடப் பின்னணி இசையில் ஈர்க்கிறார் சந்தோஷ் தயாநிதி. விறுவிறு ஜல்லிக்கட்டுக் காட்சிகளையும் ஆக்ஷன் காட்சிகளையும் அழகாக டிரிம் செய்து கோத்திருக்கிறது பிரவின் கே.எல்லின் எடிட்டிங்.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்த படமென்பதால் மாணவர்களின் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தையும் திரைக்கதையில் அழகாகச் சேர்த்திருக்கிறார்கள். அதற்காக ஜல்லிக்கட்டை மட்டுமே மையமாக வைத்து மொத்தக் கதையும் சுற்றிச்சுற்றி வருவது ஒரு கட்டத்தில் அயர்ச்சியைத் தருகிறது.

சாதியம் கடந்தது ஜல்லிக்கட்டு என்பதை அழுத்தமாக ஆவணப்படுத்தியிருக்கிறான் `மதுரவீரன்.’

- விகடன் விமர்சனக் குழு