சாதியால் பிளவுபட்டுப் போரிடும் ஒரு கிராமம். `மனிதம்தான் உயர்ந்தது’ என அந்தக் கிராமத்தையே எதிர்த்து நிற்கிறான் இந்தப் `படைவீரன்.’

நாயகன் விஜய் யேசுதாஸுக்கு நல்வரவு. சிரிக்க, முறைக்க, அழ... அத்தனைக்கும் படத்தில் இடம் இருக்கிறது. வட்டார மொழியை பக்காவாகப் பேசி நன்றாகவே நடித்துக் கொடுத்திருக்கிறார். படத்தின் இரண்டாவது ஹீரோ பாரதிராஜா! சரோஜாவிடம் ``ஏ குருவி... சிட்டுக்குருவி...’’ என ஜாலி கேலி செய்வதாகட்டும், கவிதாபாரதியிடம் ``இரு, சரக்கைப் போட்டு வரேன்’’ என சைகையிலேயே மிரட்டுவதாகட்டும், குணச்சித்திர நடிப்பில் கெத்து காட்டியிருக்கிறார் மனிதர்.

கவிதாபாரதி... உற்றுப்பார்த்தாலே நமக்கு `டர்’ ஆகிறது. முகபாவனையில், வசன உச்சரிப்பில், உடல்மொழியில் ஆர்ப்பாட்டமில்லாத அவ்வளவு வில்லத்தனம். நாயகி அம்ரிதா அழகாக இருக்கிறார். `கல்லூரி’ அகிலும் நிறைவாக நடித்திருக்கிறார்.

நல்ல கதை! ஆனால், கதைக்குள் வரமாட்டேன் என அடம்பிடிக்கிறார் இயக்குநர் தனா. இடைவேளையெல்லாம் முடிந்து இருபது நிமிடம் கழித்துதான் படம் எதை நோக்கிப்போகிறது என்பதே தெரியவருகிறது. அதனாலேயே ஊர்ப்பெண்கள் ஒன்று கூடிச் செய்கிற அந்த ஆணவக்கொலைக் காட்சி நமக்குள் கடத்துகிற பதற்றத்தை, உணர்வுத்தீண்டலை ஒட்டுமொத்தப் படமும் தரத் தவறுகிறது. முதல் பத்து நிமிடங்களும் கடைசி இருபது நிமிடங்களும் சுறுசுறுவெனப் பயணிக்கும் திரைக்கதை, இடைப்பட்ட நேரத்தில் சுருண்டு படுத்துவிடுகிறது.

சாதி வேண்டாம் என்பதையே படம் வலியுறுத்த முயற்சி செய்கிறது. ஆனால், இறுதிக்காட்சிக்கு முன்பு, “உன் அடையாளத்தை நீ பேசு. ஆனா, இன்னொருத்தனை மட்டம் தட்டாதே” என பாரதிராஜா சொல்வது ஒருவகையில் `சாதியை விட்டுக்கொடுக்காதே’ என்கிற அர்த்தத்தையும் கொடுக்கிறதே! அவ்வளவு மோசமான சாதிக்கலவரத்தை அடக்குவதற்குப் பயிற்சிக்காவலர்களைத்தான் அனுப்புவார்களா என்ன?

கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை சில இடங்களில் `அடடே’ போடவைக்கிறது. குறிப்பாக அந்த இரவில் ஹீரோ ஹரோயின் சந்திக்கும் காட்சி. ரணகளமான கிராமத்தையும் அவ்வளவு அழகாகப் படம்பிடித்திருக்கிறது ராஜவேல் மோகனின் கேமரா. ஒளிப்பதிவாளரும் கலரிஸ்ட்டும் இணைந்து டெக்னிக்கலாக படத்தின் தரத்தை மிகச்சிறப்பாக மெருகேற்றியிருக்கிறார்கள்.

மிக அவசியமான கருத்தை இன்னும் `நறுக்’கென துணிந்து பேசியிருக்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு