எமனுக்குச் செய்த சத்தியத்தை எமசிங்கபுரத்தின் `எமன்’ விஜய் சேதுபதி நிறைவேற்றினாரா... என்பதே `ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்.’

திருடுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் வசிக்கிற மலைக்கிராமம் எமசிங்கபுரம். அந்த ஊர்த் தலைவியின் மகன் விஜய் சேதுபதி நண்பர்களோடு சென்னைக்குத் திருடக் கிளம்புகிறார். சில நாள்கள் `கடமைக்காகத்’ திருடிவிட்டு, கல்லூரியில் படிக்கும் கெளதம் கார்த்திக்கின் காதலி நிஹாரிகாவைக் கடத்திக்கொண்டு ஊருக்குப் பறக்கிறது விஜய் சேதுபதி டீம். காதலியை மீட்க நண்பன் டேனியலோடு சேஸிங்கில் சீறுகிறார் கெளதம் கார்த்திக். விஜய் சேதுபதி நிஹாரிகாவை எதற்காகக் கடத்தினார், எமனுக்குச் செய்த சபதம் என்ன, நிஹாரிகாவை கெளதம் மீட்டாரா என்பதை காமெடியாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார்.

சிரிக்கவைக்கும் முகபாவனைகள், அலட்டல் இல்லாத உடல்மொழி, படபடவென வெடிக்கும் வசனங்கள் என வழக்கமான விஜய்சேதுபதி. கெளதம்கார்த்திக் ஒரு காலேஜ் பையனுக்கே உரிய படபடப்பு, அலட்சியமின்மை எனப் பக்காவாகப் பொருந்தியிருக்கிறார்.

`கொஞ்சம் சிரிங்க பாஸ்’ எனப் போராடும் படத்தில் டேனியலின் காமெடிகள்தான் நகைப்பூட்டுகின்றன. சிரிப்பும் சிறப்புமான எதிர்காலம் காத்திருக்கு ப்ரோ.

நாயகி நிஹாரிகா அடாவடிப் பெண்ணாக முடிந்தவரை நடித்திருக்கிறார். இன்னொரு நாயகி காய்த்ரி இறுதிக்காட்சிவரை விஜய் சேதுபதிக்குப் போடும் ஸ்கெட்ச் சொதப்பினாலும், ‘பாவா’வுக்கு கெத்து குறையாமல் பார்த்துக் கொள்கிறார்.

விஜய் சேதுபதி மாதிரி ஒரு மாஸ் பர்ஃபார்மரை வைத்துக்கொண்டு கலகலப்பான காமெடிப் படம் எடுக்கலாம் என யோசித்த இயக்குநர், கதாபாத்திரங்களின் வடிவமைப்பில் மெனக்கெட்டிருக்கலாம். காமெடியும் இல்லை, கதாபாத்திரங்களின் பின்னணியில் தெளிவுமில்லை என்பதால் படம் தந்திருக்கவேண்டிய உணர்வுகளைத் தரத்தவறுகிறது.

வசனத்தைவிட, ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை பல இடங்களில் கிச்சுகிச்சு மூட்டுகிறது. ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவில் எந்தப் பிசகும் இல்லை. படத்தில் கலை இயக்கம், ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பும் கவனிக்க வைக்கின்றன.

சிரிக்கும்படியான காமெடிகளைச் சேர்த்து, திரைக்கதையில் நம்பகத் தன்மையை கூட்டியிருந்தால் படம் பல நல்ல நாள்களைப் பார்த்திருக்கும்!

- விகடன் விமர்சனக் குழு