பிரீமியம் ஸ்டோரி

ஹெலிகாப்டரில் பறந்து வந்து, வானத்தில் 10,000 பலூன்களைப் பறக்கவிட்டு, அழுக்கு பாத்ரூமில் கட்டாயப்படுத்தி என காதலை ஹீரோயின்களிடம் எல்லாவகையிலும் சொல்லிவிட்டார்கள் நம்ம ஹீரோஸ். ஆனால், உண்மையிலேயே  ஹீரோயின்களுக்கு ரியல் லைஃப்பில் காதலை எப்படிச் சொன்னால் பிடிக்கும்? வாங்களேன் கேட்போம்!

மஹிமா நம்பியார்:

ப்ரபோசல்ஸ் பொழியுது!

தாடி இருக்குற பையன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். சினிமாலகூட தாடி வெச்சிருக்கிற ஹீரோ நடிச்சிருந்தா அவ்ளோ ஆர்வமா படத்தைப் பார்ப்பேன். ஸோ, தாடிவாலா எப்படி எனக்கு ப்ரபோஸ் பண்ணுனாலும் பிடிக்கும். பார்க்குறதுக்கு அழகா இருக்கணும்னு எந்த அவசியமும் கிடையாது. சுமாரான பையன்தான் கெத்து. எனக்கு முதல் ப்ரபோசல், நான் ஒண்ணாவது படிக்கும் போதே வந்துருச்சு. அப்போ என் அம்மாதான் எனக்கு க்ளாஸ் டீச்சர். ஒரு பையன் எனக்கு பேப்பர்ல ‘ஐ லவ் யூ’னு எழுதி ஹார்ட்ஸ் அண்டு ஸ்மைலீஸ் எல்லாம் வரைஞ்சு தூக்கிப்போட்டிருக்கான். அதை என் அம்மா பார்த்துட்டாங்க. இந்த விஷயம் ரொம்ப நாளா எனக்குத் தெரியாது. நான் காலேஜ் படிக்கும்போதுதான் அம்மா இந்த விஷயத்தை என்கிட்ட சொன்னாங்க. அந்த லவ் லெட்டரை என்னால பார்க்க முடியலையேன்ற வருத்தம் இன்னமும் இருக்கு. என்னோட  வாழ்க்கையில வந்த முதலும் கடைசியுமான லவ் லெட்டர் அதுதான்.’’

மடோனா செபாஸ்டியன்:

``நான் ஸ்கூல் படிக்கும்போது என்னோட புக்குக்கு மேல யாரோ ஒரு ரோஜாப் பூவை வெச்சிட்டுப் போயிட்டாங்க. எனக்கு அது யாருனு தெரியல. இப்போ வரைக்கும் பத்திரமா அதை புக்குக்கு நடுவுல வெச்சிருக்கேன். கொஞ்ச நாளுக்கு அப்புறம் என்னோட இன்னொரு புக்குல ஒரு கவிதை எழுதியிருந்துச்சு. அதுவும் அதே பையன்தான்னு நெனைக் கிறேன். இன்னொருத்தர் எனக்கு மரத்தால் செஞ்ச மோதிரத்தைப் பரிசா கொடுத்தார். இதுவரை நான் அப்படி ஒரு மோதிரத்தைப் பார்த்ததேயில்லை.

ப்ரபோசல்ஸ் பொழியுது!

எனக்குத் தனியா இருக்கும்போது லவ்வைச் சொன்னாதான் பிடிக்கும்.  எல்லோர் முன்னாடியும் காதலைச் சொன்னா பயங்கர டென்ஷனாகிடுவேன். சினிமாத்தனமா  ‘உனக்காக நான் இருப்பேன். எனக்காக வாழ்நாள் முழுக்க நீ இருக்கணும்’னு டயலாக் விட்டா, பிச்சு... பிச்சு...’’

நிக்கி கல்ராணி:

ப்ரபோசல்ஸ் பொழியுது!

``முதல்ல, எனக்கு யாரும் நேர்ல ப்ரபோஸ் பண்ணாதீங்கனுதான் சொல்வேன். எனக்கு அவங்களைப் பிடிக்கலைனு முகத்துக்கு நேரா சொல்லப் பிடிக்காது. எனக்கு ஒருத்தர் நாய்க் குட்டி கிஃப்ட்டா கொடுத்தார். செம க்யூட்டா இருந்துச்சு. எனக்கு நிறைய பணம் செலவு பண்ணி ட்ரீம் ப்ரபோசல் பிடிக்காது. நான் எளிமையான பொண்ணு. என் கையைப் பிடிச்சி ‘லவ் யூ’னு சொன்னாலே நான் மயங்கிருவேன். காதலுக்கு வார்த்தைகளும் செயல்களும்தானே முக்கியம்!’’

அதிதி பாலன்:

ப்ரபோசல்ஸ் பொழியுது!

``லவ் பண்றதுக்கு முன்னாடி ஒருத்தரை நல்லா புரிஞ்சிக்கணும், தெரிஞ்சுக்கணும். சும்மா நானும் லவ் பண்றேன்னு பேருக்குப் பண்ணக் கூடாது. பழகி, கொஞ்ச நாள்லயே ப்ரபோஸ் பண்ணுனா நான் ஒத்துக்க மாட்டேன். அப்புறம் அருவி படத்துல சொன்ன மாதிரி, ‘லவ் யூ அருவி’னு எழுதிக்கொடுத்தா மட்டும் பத்தாது. அதுக்கும் மேல, என்கூட இருந்து என்னை நல்லா பார்த்துக்குவேனு சொல்ற பையன்தான் வேணும். அவங்கதான் என்கிட்ட ப்ரபோஸ் பண்ணணும்னு கிடையாது. ரொம்பப் பிடிச்சுருந்ததுனா நானும் அவங்ககிட்ட என் காதலைச் சொல்லுவேன். ஆகமொத்தம், என்கூட கொஞ்ச நாளைக்கு நண்பனா இருந்து தைரியம், தன்னம்பிக்கை சேர்ந்த புரிந்துணர்வோட ஒரு பையன் காதலைச் சொன்னா டபுள் ஹேப்பி.’’

பார்வதி நாயர்:

ப்ரபோசல்ஸ் பொழியுது!

``லவ்வை எப்படிச்சொல்றாங்க என்பதைவிட `அந்தப் பையன் யாரு?’ என்பதுதான் எனக்கு முக்கியம். என் மைண்டு வாய்ஸை கேட்ச் பண்றமாதிரி ஒருத்தன் வந்தா நல்லா இருக்கும்.  என்னோட லவ்வர் எனக்கு கிஃப்ட் கொடுக்கணும்னு ஒருபோதும் நினைக்க மாட்டேன். யார் எனக்கு கிஃப்ட் கொடுத்தாலும் வாங்குறதுக்கு யோசிப்பேன். நான் காலேஜ் படிக்கும்போது எனக்கு ஒரு பையன் ப்ரபோஸ் பண்ணுனான். ஒரு ரூம் முழுக்க பலூன், சின்ன சின்ன கிஃப்ட், பூ இவை எல்லாத்தையும் செவத்துல ஒட்டி வெச்சு என்னை சர்ப்ரைஸ் பண்ணுனான். அந்தநாளை என்னால மறக்கவே முடியாது. அதுமாதிரி இன்னொரு முறை என்னை யாராலயும் சந்தோஷப்படுத்த முடியாதுனு நினைக்கிறேன்.’’

தான்யா:

ப்ரபோசல்ஸ் பொழியுது!

``நான் எட்டாவது படிக்கும்போது யாரோ பெயர் தெரியாத ஒருத்தர் ‘ஐ லவ் யூ தான்யா’னு எழுதி என்னோட லன்ச் பாக்ஸ்ல வச்சுட்டாங்க. எனக்கு இப்போ வரைக்கும் அது யாருன்னே தெரியாது. லவ் ப்ரபோசல்னு சொன்னாலே இந்தச் சம்பவம்தான் எனக்கு முதல்ல நியாபகத்துக்கு வரும். அதுக்கு அப்புறம் சுவாரசியமான காதல் கடிதங்கள் எதுவும் வரலை. வாழ்க்கைல நமக்கு யாருன்னு எழுதி வெச்சிருக்கோ, அவங்க எப்படி ப்ரபோஸ் பண்ணுனாலும் எனக்கு ஓகேதான். முதல்ல பையனைப் பாருங்க... அதுக்கப்புறம் எப்படி ப்ரபோஸ் பண்றதுனு பார்ப்போம்!’’

ஆத்மிகா:

ப்ரபோசல்ஸ் பொழியுது!

``மெசேஜ், போன் கால், அவுட்டிங் இப்படி எல்லா விதத்துலயும் காதலை வெளிப்படுத்திட்டாங்க. இதெல்லாம் ரொம்ப போர் அடிச்சிருச்சு. புதுசா எதாவது ட்ரை பண்ணுனாதான் சுவாரஸ்யமா இருக்கும். `சர்ப்ரைஸ் பிளானர்ஸ்’னு ஒரு க்ரூப் இருக்கு. அவங்ககிட்ட நம்ம யாரை, எதுக்காக சர்ப்ரைஸ் பண்ண ஆசைப்படுறோம்னு சொன்னா போதும். அவங்க நிறைய சாய்ஸஸ் நமக்குக் கொடுப்பாங்க. நானும் சில பல யோசனைகளை மனசுல வெச்சிருக்கேன். அதுல முக்கியமானது ரோட்ல நானும் அவரும் நடந்து போயிட்டு இருக்குறப்போ, திடீர்னு அந்த சர்ப்ரைஸ் ப்ளானர்ஸ் வந்து மியூசிக் போட்டு அமர்க்களப்படுத்தணும். அந்தச் சமயத்துல அவர் எனக்கு ப்ரபோஸ் பண்ணணும். சாதாரணமா இந்த கேண்டில் லைட் டின்னர், அவுட்டிங் எல்லாம் கூட்டிட்டுப் போனா அவங்க ப்ரபோஸ் பண்ணப்போறதை நாம முன்னாடியே  கண்டுபிடுச்சிருவோம். ஸோ, எதிர்பார்க்காத சமயத்துல ஒரு அதிரடி ப்ரபோசல் வந்துச்சுன்னா ஏத்துக்கிறதுக்கு நான் ரெடி.’’

ரைசா:

ப்ரபோசல்ஸ் பொழியுது!

``தனக்கு வராத எதையும் என் லவ்வர் ட்ரை பண்ண வேண்டாம். அவனுக்கு எந்த மாதிரி ப்ரபோஸ் பண்ணணும்னு தோணுதோ, அந்த மாதிரி பண்ணுனாலே போதும். ப்ரபோசல் அவங்கவங்க ஸ்டைலுக்கு ஏத்த மாதிரி வித்யாசப்படும். ஆனா, எனக்கு ஒரு கனவு இருக்கு. என் லவ்வர் பாய் என்னைத் தனியா ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போய் சத்தமா கத்தி ‘ஐ லவ் யூ’னு சொன்னா நல்லா இருக்கும். ஆனா, அவனுக்கு  இந்த மாதிரியான ஹீரோ ஸ்டைல் ஒத்து வரலைன்னா பரவாயில்ல... தேவையில்லாத எந்தவொரு விபரீதமும் வேண்டாம் மை டியர் லவ்வர் பாய்.’’

நந்திதா:

ப்ரபோசல்ஸ் பொழியுது!

``எனக்கு நிறைய ப்ரபோசல்ஸ் வந்திருக்கு. நான் அஞ்சாவது படிக்கும்போது, ஏழாவது படிக்கிற பையன் வந்து ப்ரபோஸ் பண்ணுனான். அதுதான் எனக்கு வந்த முதல் ப்ரபோசல். ஹார்ட் ஷேப்ல பொம்மை கொண்டுவந்து கொடுத்த ஒருத்தர், என்னைப் பத்திக் கவிதை எழுதிக் கொடுத்த ஒருத்தர், என் பேரைக் கையில டாட்டூவா போட்டு ப்ரபோஸ் பண்ணுன ஒருத்தர்னு... மறக்கமுடியாத நிறைய  விண்ணப்பங்கள் இருக்கு. நான் ஒருத்தருக்கு லவ் சொல்ற மாதிரி இருந்தா, என் கையால நான் சொல்ல நினைக்குற விஷயத்தை எழுதி, நானே பண்ணுன ஹேண்டு மேடு பொம்மையை அவங்க கையில கொடுத்துட்டு,  திரும்பிப் பார்க்காமல் வெட்கப்பட்டு ஓடி வந்துடுவேன். எனக்கு ப்ரபோஸ் பண்றவங்க எனக்குப் பிடிச்ச, என்கிட்ட இருந்து தொலைஞ்சுபோன பொருள்கள திரும்பக் கொண்டுவந்து கிஃப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் பண்ணுனா குமுதா செம ஹேப்பி ஆகிடுவேன் அண்ணாச்சி!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு