கமல் ஸ்வரூப்... ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய ‘காந்தி’ திரைப்படத்தின் உதவி இயக்குநர், தான் இயக்கிய சுயாதீனத் திரைப்படங்களுக்காக இருமுறை தேசிய விருது பெற்றவர். தமிழ் ஸ்டுடியோ இயக்கமும், சலனம் அறக்கட்டளையும் இணைந்து சென்னையில் நடத்திய ‘சென்னை சுயாதீனத் திரைப்பட விழா’வுக்காக வந்திருந்த கமல் ஸ்வரூப்பைச் சந்தித்தேன்.

“1974-லேயே ‘Film and Television Institute’ ல் பட்டம் பயின்று வெளிவந்தவர் நீங்கள். இன்றைக்கு இருப்பது டிஜிட்டல் யுகம். எப்படி இருக்கிறது இந்தப் பயணம்?”

``ரொம்பவே த்ரில்லிங்கா இருக்கு. திரைப்படக்கல்லூரியிலிருந்து வெளியில் வந்தபோது ரிச்சர்ட் லீகாக்கைச் சந்தித்தேன். அப்போது ‘டைரக்ட் சினிமா’ என்றொரு இயக்கம் இருந்தது. அவரிடமுள்ள `ஃபிலிம் கிட்’டை அரசாங்கம் மூலமாக எங்களுக்குக் கொடுத்தார். அதில், கேமரா, டெவலப்பர், ஒலிக்கருவி, புரொஜக்டர் ஆகியவை இருக்கும். அதை எடுத்துக்கொண்டு ஊர் ஊராகச் சென்று சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சினிமாவைப் பார்ப்பது எப்படி, சினிமா எடுப்பது எப்படி என்றெல்லாம் கற்றுக்கொடுத்தோம். அற்புதமான நாள்கள் அவை. அதன்பிறகு இஸ்ரோவின் ‘வீடியோ புராண்’ புராஜக்ட், நண்பர்களோடு ஆரம்பித்த ‘யுக்த் ஃபிலிம் கார்ப்பரேஷன்’ என்று பயணப்பட்டேன். பிறகுதான் 1982-ல் ரிச்சர்ட் அட்டன்பரோ இயக்கிய ‘காந்தி’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். சுயாதீனப் படங்களையும் ஆவணப்படங்களையும் இயக்குவதில்தான் என் ஆர்வம்.”

``தாதா சாகேப் பால்கேமீது இத்தனை பிரியமும், அவரது வாழ்க்கையைப் படமாக்கவேண்டும் என்ற ஆர்வமும் எதனால் வந்தது?”

``1990-ல் அவரது வாழ்க்கையைப் படமாக்க நினைத்து அவரைப் பற்றிய தகவல்களைச் சேர்த்தபோது, அவரது வாழ்க்கைப் பயணமே என்னை மிகவும் பிரமிப்புக் குள்ளாக்கியது. 74 வருடங்கள் வாழ்ந்த அவரது வாழ்க்கையை 74 பகுதிகளாகப் பிரித்துக்கொண்டு ஒவ்வொரு வருடத்திற்குமான அவர் வாழ்க்கை நிகழ்வுகளைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அவர் ஒரு லெஜண்ட். தன் காலத்தையும் தாண்டி வாழும் ஒரு கலைஞன்.’’

“இப்போது திரையிடப்பட்ட ‘ரங்பூமி’ தேசியவிருது பெற்ற ஆவணப்படம். அதைப் படமாக்கிய அனுபவம்?”

“தாதா சாகேப் பால்கே வாரணாசியில் தங்கி எழுதிய நாடகம் ‘ரங்பூமி’. அப்போது அவர் தங்கியிருந்த இடம், நாடகம் நடத்திய இடம் ஆகியவற்றைப் பதிவு செய்ய ஆசைப்பட்டேன்.அதனால் அதே பெயரில் ஆவணப்படமாக்கி யிருக்கிறேன்.அதை நேர்மையாகப் படமாக்கிய காரணத்தால்தான் அதற்கு தேசிய விருது கிடைத்தது.’’

``ஏன் உங்கள் ஆர்வம் மெய்ன் ஸ்ட்ரீம் சினிமாவை நோக்கி நகரவில்லை?”

“அவை பெரும்பாலும் திரை நட்சத்திரங்களைச் சார்ந்து இருக்கிறது. எனக்கு அந்த உலகில் வேலையில்லை என்று உணர்ந்தேன். ஆவணப் படங்களில் இருக்கும் உண்மைத்தன்மை எனக்குப் பிடித்தது.

``சினிமாவில் எழுத்தாளர்களின் பங்கு?”

“ஆவணப்படங்களைவிட மெய்ன் ஸ்ட்ரீம் சினிமாவைப் பொறுத்தவரை எழுத்தாளர்களின் பங்கும், இலக்கியத்தின் பங்கும் மறுக்க முடியாது. அவர்களின் அறிவும், புரிதலும், உழைப்பும் மிக முக்கியம். தமிழ் ஸ்டூடியோ அருண், இளைஞர்களை இலக்கியம் படிக்க வைப்பதில் ஆரம்பித்து படிப்படியாக சினிமாவைக் கற்றுக்கொள்ளச் செய்கிறார். இது மிக முக்கியம் என்று கருதுகிறேன். இந்தச் ‘சென்னை சுயாதீனத் திரைப்படவிழா’ அடுத்தவருடம் இன்னும் பல்வேறு மாற்றங்களோடு, மேலும் அதிக கவனத்தைப் பெறும். அவருக்கும் என் வாழ்த்துகள்!”

``மற்றமொழிப்படங்களையும் கவனிப்பதுண்டா?”

“நிச்சயமாக. என் வீட்டினருகே உள்ள மாலில் வெளியாகும் பல முக்கியமான பிறமொழிப்படங்கள் திரையிடப்படும். தமிழில் அப்படிப் பார்த்து என்னை மிகவும் கவர்ந்த படம், `விசாரணை.’ ’’