Published:Updated:

வாய்ப்பு கிடைச்சதெல்லாம் கடவுள் கிருபைதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வாய்ப்பு கிடைச்சதெல்லாம் கடவுள் கிருபைதான்!
வாய்ப்பு கிடைச்சதெல்லாம் கடவுள் கிருபைதான்!

சனா, படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

பிரீமியம் ஸ்டோரி

னித்துவமான தங்கக் குரலால் ஹிட்ஸ் அள்ளுபவர் அந்தோணிதாசன். ஒருபக்கம் ``சொடக்கு மேல சொடக்கு போடுவேன்’’ என எகிறி அடிக்கும் அந்தோணி, இன்னொரு பக்கம் ``அனபெல்லு பேயு வர்றா... அன்பில்குட்டி தாயி வர்றா’’ என கானாவிலும் உருகவைக்கிறார். வெறும் பாடகராக மட்டுமல்லாமல் இப்போது இசையில் புது அவதாரம் எடுத்திருக்கிறார் அந்தோணிதாசன். ஆமாம், இனி பாடகர் - இசையமைப்பாளர் அந்தோணிதாசன்.  ‘வைரி’ படத்தின்மூலம் இசையமைப்பாளராகும் அந்தோணியிடம் பேசினேன்.

வாய்ப்பு கிடைச்சதெல்லாம் கடவுள் கிருபைதான்!

``என்ன திடீர்னு இசையமைப்பாளர் ஆகிட்டீங்க?’’

`` ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தின் இயக்குநர் விஜய் தேசிங் சார்தான் `வைரி’ படத்தையும் எடுக்கிறார்.  இந்தப் படத்தின்  ஷூட்டிங் ஸ்பாட்ல டைரக்டர் என்கிட்ட சூழ்நிலையைச் சொன்ன அடுத்த நிமிஷமே, நான் தப்பு அடிச்சு சில பாட்டு எல்லாம் பாடிக் காட்டினேன். அது டைரக்டருக்கு ரொம்பப் பிடிச்சுப்போயிருச்சு. நான் கம்போஸ் பண்ணுன நாட்டுப்புறப் பாட்டு எல்லாம் கேட்டார். திடீர்னு ஒருநாள் ‘என் அடுத்த படத்துக்கு உங்களால் மியூசிக் பண்ண முடியுமா’னு கேட்டுட்டார்.  ‘என்னால ஒரு முழுப்படத்துக்கும் இசையமைக்க முடியுமானு தெரியல. நான் அந்தளவுக்கு இசையைப் படிச்சது இல்லை. நாட்டுப்புறப் பாடல்களுக்கு மட்டும்தான் நிறைய மியூசிக் பண்ணியிருக்கேன்’னு சொன்னேன். டைரக்டர் சார், ‘நான் அடுத்து பண்ணப்போற படம் நாட்டுப்புறப் பாடல்களைப் பின்புலமாகக்  கொண்ட கதைதான். நீங்க பண்ணினால் நல்லா இருக்கும்’னு சொன்னார்.

படத்தில் மொத்தம் நாலு பாட்டு. அதில் இரண்டு பாட்டுக்கு இயக்குநரே வரிகள் எழுதிக் கொடுத்தார். என்னுடைய கம்போஸிங்ல பாட்டு எல்லாம் அவருக்கு செமையா பிடிச்சுப்போச்சு.    படத்தில் எல்லா பாடல்களும் நல்லா வந்திருக்கு. படத்தில் ஒரு சாவுப் பாட்டு வரும். அது ஒரிஜினலாய் வேற எந்தப் படத்திலும் வந்திருக்கக்கூடாதுனு  தர்மபுரி, கிருஷ்ணகிரி ஊர்கள்ல எப்படி சாவுப் பாட்டு பாடுவாங்களோ அதை அப்படியே எடுத்து அங்கே இருக்கிற கலைஞர்களை வெச்சே ரெக்கார்டு பண்ணியிருக்கேன். 

இந்தப் படத்துக்காக நான் முதலில் இசையமைச்ச ‘வாட் ஆர் யூ டாக்கிங் லேடி, என் ஸ்பீச்சைக் கொஞ்சம் கேளு’ பாட்டை சோனி கம்பெனி, கேட்டவுடனேயே ரைட்ஸ் எடுத்துக்கிட்டாங்க. இது எனக்கு இன்னும் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. என் வாழ்க்கையில் முக்கியமான படமாக ‘வைரி’ இருக்கும். இந்தப் படத்தில் இசையமைச்சதுமல்லாம நடிச்சுமிருக்கேன்.  என்கூட என் மனைவி ரீத்தாவும்  நடிச்சிருக்காங்க.’’

வாய்ப்பு கிடைச்சதெல்லாம் கடவுள் கிருபைதான்!

``சீனியர் ஜூனியர் என்று எல்லாவகையான இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடல்கள் பாடுறீங்களே... எப்படி?’’

``நான் எப்போதும் பழகுவதில் எட்டிப் பிடிக்கும் தூரத்தில் இருக்க மாட்டேன். கட்டிப் பிடிக்குற தூரத்தில்தான் இருப்பேன். அந்த மாதிரிதான் என் பழக்கவழக்கம் இருக்கும். எந்த இடத்தில் இருந்தாலும் நம்மள சுத்தி இருக்கிறவங்களை சந்தோஷமாய் வெச்சுக்குவேன். என் வெள்ளந்தியான பேச்சு எல்லாம் இப்போ இருக்கிற இசையமைப்பாளர்களுக்குப் பிடிச்சுப்போச்சு. என்னைப் பாக்கும்போது எல்லா இசையமைப்பாளர்களுக்கும் ஒரிஜினல் கிராமத்தானைப் பாக்குறோம்னு தோணுது. அதனால என்கிட்ட எல்லா இசையமைப்பாளர்களும் எந்தவொரு பந்தாவும் இல்லாமல் பழகுறாங்க. இந்த ஜெனரேஷன் இசையமைப்பாளர்கள்கூட எனக்குப் பாட வாய்ப்பு கிடைச்சதெல்லாம் கடவுள் கிருபைதான்.’’
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு