Published:Updated:

விஜய் சேதுபதி வீட்ல விருந்து!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
விஜய் சேதுபதி வீட்ல விருந்து!
விஜய் சேதுபதி வீட்ல விருந்து!

உ.சுதர்சன் காந்தி, படம்: சொ.பாலசுப்ரமணியன்

பிரீமியம் ஸ்டோரி

காமெடி, சீரியஸ் என எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் அதில் அப்ளாஸ் அள்ளுபவர் காளி வெங்கட். பேட்டிகளில் கல்யாணத்தைப் பற்றிய கேள்வியைக் கேட்கும்போதெல்லாம், ‘அடுத்த கொஸ்டின், பாஸ்’ என்று நழுவி வந்தவர், திடீரென ஒரு நாள் மாலையும் கழுத்துமாய் வந்து அதிர்ச்சி கொடுக்கிறார்.

``வீட்டுல பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு கட்டத்துக்குமேல ‘சினிமாக்காரன்’னு சொல்லி, பொண்ணு தரத் தயங்குவாங்க. அதனால, அப்பப்போ தேடுதல் வேட்டை நின்னுபோயிடும். அதேமாதிரிதான் இந்த முறையும் இருக்கும்னு நினைச்சேன். ஆனா, திடீர்னு பத்து நாள்களுக்குள்ள எல்லாமே ரெடியாகி, கோயில்ல கல்யாணம்னு முடிவாச்சு. அந்தக் குறைவான நாள்களுக்குள்ள சினிமா நண்பர்கள் எல்லோரையும் கூப்பிட முடியலை” என்று தன் திருமணத்திற்குத் திரை நண்பர்களை அழைக்க முடியாமல் போனதற்கான காரணத்துடன் ஆரம்பிக்கிறார் காளி வெங்கட்.

‘`லவ் மேரேஜா பாஸ்?’’ என்றால், ``நிறைய பேர் அப்படித்தான் நினைச்சுட்டிருக்காங்க. ஆனா, எங்க கல்யாணம் டிபிக்கல் அரேஞ்டு மேரேஜ். ஏன்னா, நிச்சயத்துக்கு முதல் நாள்தான் நாங்க ரெண்டு பேரும் நேர்ல பார்த்துப் பேசிக்கிட்டோம். அந்தக் கதையை அவங்ககிட்டயே கேளுங்க” எனக் கேள்வியை மனைவி ஜனனி பக்கம் திருப்பிவிட்டார். ``நிச்சயதார்த்ததுக்கு முன்னாடி ரெண்டுபேரும் பேசிக்கவே இல்ல. ‘ஏன் இவர் பேசலை’னு  எனக்குக் கோபம். அதனால, அவர் என்கிட்ட பேசும்போது, நான் சரியாவே ரெஸ்பான்ஸ் பண்ணல. முதல்முறையா அவர் என்கிட்ட பேசியது என்ன தெரியுமா? என் பேரோட ஸ்பெல்லிங் கேட்டார்” என்று சிரிப்புடன் சொல்கிறார் ஜனனி.

விஜய் சேதுபதி வீட்ல விருந்து!

``மூணு நாளுக்கு முன்னாடியே என் அம்மாகிட்ட ‘ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணணும். சரியான ஸ்பெல்லிங் தெரியணும்’னு சொல்லி அப்படியே என் நம்பரை வாங்கிடலாம்னு பிளான் பண்ணிருக்கார் இவர். ஆனா, எங்க அம்மா அதைப் புரிஞ்சுக்காம, ‘பயோ டேட்டாவுல இருக்கிற ஸ்பெல்லிங்தான்’னு சொல்லிட்டு பல்பு கொடுத்துட்டுப் போய்ட்டாங்க” என்றவரை, இடைமறித்துத் தொடர்ந்த காளி வெங்கட், “ஆமாங்க. நாம ஒரு பிளான் பண்ணி நம்பரை வாங்கிடலாம்னு நினைச்சா, அது ஒரு பக்கம் போயிடுச்சு. சரி, அந்தக் காலத்துல இருந்தவங்க எல்லாம் போன்ல பேசியா கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கனு நினைச்சு நானும் விட்டுட்டேன். கல்யாணமாகி ஒரு வாரம் கழிச்சு நானே அவங்ககிட்ட நம்பரைக் கேட்டு வாங்கிட்டேன். அதுக்கு அவங்க, ‘இப்பதான் நம்பர் கேட்கத் தோணுச்சாங்கிற மாதிரி நக்கலா ஒரு ரியாக்‌ஷன் கொடுத்தாங்க பாருங்க... எனக்கே சங்கடமா போச்சு” என்று காளி வெங்கட் முடிக்க, இருவர் முகத்திலும் வெட்கப் புன்னகை. 

“ ‘மெர்சல்’தான் கல்யாணத்துக்குப் பிறகு ரெண்டுபேரும் பார்த்த முதல் படம். ஆனா, நான் நடிச்ச சீன்ஸ் வரும்போது, இவங்க அழுதுகிட்டே வெளியே வந்துட்டாங்க. என்னாச்சோனு பயந்துபோய்க் கேட்டா, ‘என்னங்க இது. எல்லோரும் ‘மெர்சல்... மெர்சல்...’னு சொன்னவுடனே,  உங்க கேரக்டர் வேறமாதிரி இருக்கும்னு நினைச்சேன். நீங்க இப்படி அழவைக்கிற கேரக்டர்ல நடிச்சிருக்கீங்களே’னு சொன்னாங்க” எனக் காளி வெங்கட் கலாய்க்க, “இல்லைங்க. அது நம்ம லைஃப்ல நடக்குற மாதிரியே அவ்ளோ தத்ரூபமா இருந்துச்சு. அதான், கொஞ்சம் எமோஷன் ஆகிட்டேன்” என்கிறார் ஜனனி.

``அப்புறம் கல்யாண விருந்தெல்லாம் முடிச்சாச்சா’’ என்றால், காளி வெங்கட் ஆர்வமாகிறார். “ ஜனனி, விஜய் சேதுபதி ரசிகை. விஜய் சேதுபதி குறும்படங்கள்ல நடிக்கும்போதே, எனக்கு நல்ல பழக்கம். இப்போ, ரெண்டுபேரும் படம் பண்ணிட்டிருக்கிறதுனால, அடிக்கடி பார்த்துக்க முடியலை. கடைசியா அவரைப் பார்த்தப்போ, என் மனைவி உங்க ரசிகைன்னு சொன்னேன். ‘நீங்க, நலன் குமாரசாமி, ஹிப்ஹாப் ஆதி மூணுபேரையும் குடும்பத்தோட எங்க வீட்டுக்கு வரவெச்சு விருந்து வைக்கணும்னு நானே பிளான் பண்ணி வெச்சிருக்கேன். கண்டிப்பா வந்துடுங்க’’னு சொல்லியிருக்கார். விஜய் சேதுபதி வீட்டு விருந்து காத்திருக்கு!’’

ஒரு வெட்டு வெட்டுங்க மக்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு