ஒரு விலையுயர்ந்த பொருளும் அதைத் தேடி அலையும் சில காமெடியர்களும்... என்கிற ஆதாம் காலத்துக்கதை. அந்தப்பொருள் எல்லோர் கைகளிலும் சுற்றிச்சுற்றி வந்து, இறுதியில் சேர வேண்டிய கைகளில் பத்திரமாகச் சேருகிற சுத்தமான சுந்தர்.சி படம் ‘கலகலப்பு -2’.

நாயகர்களாக ஜெய்,ஜீவா மற்றும் மிர்ச்சி சிவா. ஏராளமான நடிகர்களுக்கு நடுவில் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்கள். கேத்தரின் தெரசா, நிறைய கிளாமர் காட்டிக் கொஞ்சமே கொஞ்சம் நடித்திருக்கிறார். நிக்கி கல்ராணி, கொஞ்சமாக நடித்து, கொஞ்சமாக கிளாமர் காட்டியிருக்கிறார்.

ராதாரவி, யோகிபாபு, சதீஷ், ரோபோ சங்கர், மனோபாலா, ஜார்ஜ், சிங்கமுத்து, சிங்கம்புலி, விடிவி கணேஷ் என சினிமா டைரக்டரியில் இருக்கும் முக்கால்வாசி நடிகர்கள் படத்தில் வருகிறார்கள். இவர்கள் அடிக்கும் காமெடிக்குச் சில இடங்களில் வயிறுவலி, சில இடங்களில் தலைவலி.

சதீஷ் சந்நியாசம் பெற்றுக்கொள்ளும் காட்சி, யோகிபாபு வீட்டில் அடைபட்டுக் கொள்ளும் காட்சி எனச் சில காட்சிகளை நினைக்க நினைக்கச் சிரிப்பு வருகிறது. ஆனால், நிறைய காட்சிகள் தியேட்டரில் பார்க்கும்போதே அலுப்பைத் தருகின்றன.

சீக்கிரம் முடிங்க வீட்டுக்குப் போகணும் எனச் சலிப்பாக நகரும் படத்தைத் தனி ஒருவனாக முட்டுக்கொடுத்துக் காப்பாற்றுவது மிர்ச்சி சிவாதான். அவர் திரைக்கு வந்தாலே திருவிழாதான்.

முந்தைய படத்தின் அதே டெம்ப்ளெட் என்பதால், அடுத்து இதுதான் நடக்கப்போகிறது என்பதை மூளை முன்னரே சொல்லிவிடுவது பெரிய மைனஸ்.

மினிமம் கியாரன்டி ஒன்-லைன். அதிலும் சுந்தர்.சி படம் வேறு. லாஜிக்கெல்லாம் பார்க்காமல் திரைக்கதையில் ஜாலி மசாலா சேர்த்து அடித்து நொறுக்கியிருக்கலாம். வசனங்களில் வரிக்குவரி சிரிப்பைக் கூட்டியிருக்கலாம். எல்லா வாய்ப்புகளும் இருந்தும் தவறவிட்டிருக்கிறார்கள்!

யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு காசியை கலர்ஃபுல்லாகக் காட்டியிருக்கிறது. லாரி லாரியாகக் கொட்டியிருக்கும் கலர் பொடிகளுக்கும் நன்றி சொல்ல வேண்டும். என்.பி.ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு சேஸிங்கில் சிறப்பு. கலகலப்பான படத்திற்கு ஏற்றமாதிரியான பின்னணி இசையைத் தரத் தவறியிருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா. பாடல்களும் சுமார்தான்.

சுந்தர்.சி படங்களின் அடையாளங்கள் மூன்று. சுறுசுறுப்பு, கலகலப்பு, கிளுகிளுப்பு. இந்த மூன்றும் ‘கலகலப்பு 2’-விலும் இருக்கிறது. ஆனால், எல்லாமே குறைச்சலாக...

- விகடன் விமர்சனக் குழு