“தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருக்கிற எல்லா சமூக மக்களும் ஒண்ணா சேர்ந்து கும்பிடுற ஒரு குல தெய்வ - சாஸ்தா வழிப்பாட்டு சாமி பேரு பரியேறும் பெருமாள். அங்க எல்லா வீட்டுலயும் எல்லாத் தெருவுலயும் ஒரு பரியேறும் பெருமாள் இருப்பான். எங்க வீட்டுலயும் எங்க தெருவுலயும் ஒருத்தன் இருந்தான். அவன்தான் என்னோட பரியேறும் பெருமாள். உங்களைப்போல என்னைப்போல ஓர் இளைஞன். அப்படி என்ன அவன் மட்டும் ஸ்பெஷல்னு கேட்டீங்கன்னா, ‘பெரிய வெளிச்சத்தை நோக்கிக் கறுப்புக் குதிரையில கிளம்பிப் போன ஒருவன்னு’ சொல்வேன்.” - அழுத்தம் திருத்தமாகப் பேசுகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் 12 ஆண்டுக்காலம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ‘மறக்கவே நினைக்கிறேன்’ தொடர் வழியாக விகடன் வாசகர்களுக்குப் பரிச்சயமானவர். கவிஞர்; சிறுகதையாளர்; இப்போது ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குநர். ஆவி நெளிந்து மேலெழும் பச்சைத் தேநீர்க் குவளையைக் கைகளில் ஏந்தியபடியே பேசுகிறார் மாரி...

``படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு நாய் பிரதான இடத்தை எடுத்துக்கொண்டு நிற்கிறதே, `பரியேறும் பெருமாளுக்கும்’ அந்த நாய்க்கும் என்ன தொடர்பு?

“அவ கறுப்பி. அவதான் என் திரைக்கதையோட பிரதானம்; வழித்தடம்னும் சொல்லலாம். அவ பின்னாடியே அலைஞ்சு திரிஞ்சிதான் இந்தக் கதையை நான் எழுதி முடிச்சேன். படத்துல அவ மட்டுமில்ல, அவளோட தோழிகள் அலமு, மஞ்சு, அபர்ணானு இன்னும் மூணு பேரும் நடிச்சிருக்காங்க.”

``முதல் படம்... நினைத்ததை எடுக்க முடிந்ததா?’’

“மறைக்காம சொல்லணும்னா, முதல் படமா நினைச்சி இந்தப் படத்துல நான் வேலை செய்யலை. நூறாவது படம் எடுக்கிற திமிருலதான் வேலை செஞ்சேன். அந்தத் திமிரையும் சுதந்திரத்தையும் எனக்குக் கொடுத்தது அண்ணன் பா.இரஞ்சித். அவர்தான் என்னோட முதல் படத் தயாரிப்பாளர்ங்கிறதால, என்னோட நிலத்துல இருக்கிற நிஜத்தை, வெப்பத்தை அப்படியே படமாக்குறதுல எந்தப் பிரச்னையும் வரல. கெரில்லா யுத்த பாணியில அவ்வளவு வேகமா, உணர்ச்சிபூர்வமா நான் நினைச்சதை எடுத்திருக்கேன்; நினைக்காததையும் எடுத்திருக்கேன். மகிழ்ச்சி.”

``போஸ்டர், படத்தைப் பற்றித் தற்போது நீங்கள் சொன்ன அறிமுகம் என எல்லாமே படம் சீரியஸ் படமோ என நினைக்கவைக்கிறதே. என்ன ஜானர் படம் இது?”

“நிஜ வாழ்க்கையில் ஒரு மனுஷனோட வாழ்க்கை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமா மாறுது. ஒரு நாள் டிராமாவா இருக்கு, மறுநாள் திரில்லிங்கா இருக்கு, அடுத்த நாள் ஆக்ஷனா இருக்கு, அதுக்கு அடுத்த நாள் ரொமான்ஸா இருக்கு; வாரக்கடைசி நாள் ஐயோ கொடுமையேனு இருக்கு. அப்படி இருக்கும்போது, ஒரு லைஃப் ஸ்டைல் மூவிய எப்படி ஒரு வகைமைக்குள்ள சுருக்க முடியும். அதனால, எனக்கு சுருக்கிச் சொல்லத் தெரியல. சினிமா வழக்கப்படி ஏதாவது ஒரு வகைமையைச் சொல்லித்தான் ஆகணும்னா `பரியேறும் பெருமாள்’ படத்தை ஒரு பயோகிராபி படம்னு சொல்லுவேன்.”

“கதிர், ஆனந்தி இரண்டு பேரும் உங்க கதைக்கு எவ்வளவு தூரம் பொருந்தி வந்திருக்காங்க?

“கதிர், கதை கேட்கும்போதே உள்ள வந்துட்டார்னு நான் கண்டுபிடிச்சிட்டேன். ஏன்னா ஒரே நாள்ல கதை அவருக்கு மனப்பாடம் ஆகிடுச்சி. அன்னைக்கு இராத்திரியே என் கதையை எனக்கே அவர் திருப்பிச் சொல்ல ஆரம்பிச்சிட்டார். அதனால, அவர்கிட்ட வேலை வாங்குறது எனக்கு ஈஸியாகிடுச்சி. ஆனந்தி, ‘கயல்’ பார்த்த நம்பிக்கையில் முடிவு பண்ணின நடிகைதான். ஆனா, கதையோட கனத்தையும் அதை எடுக்குறத்துக்கான எங்களோட உழைப்பையும் உணர்ந்து நடிச்சிருக்காங்க. என்னோட ‘ஜோ’வா மாறி என்னையே சில இடங்கள்ல பிரமிக்க வைச்சிருக்காங்க. ஒரு வரியில சொல்லணும்னா `பரியேறும் பெருமாள்’ படத்தோட ஒளி ஆனந்திதான். இந்தப் படத்துக்கு அப்புறம் அந்த ஒளி தமிழ் சினிமாலயும் பரவும்.”

``தென்மாவட்ட வாழ்க்கையை, பண்பாட்டை சந்தோஷ் நாராயணன் இசையில் எப்படிக் கொண்டு வந்திருக்கிறார்?’’

“சந்தோஷ் நாராயணன் சார்கிட்ட அரை மணி நேரம்தான் கதை சொன்னேன். ‘நான் பண்றேன்’னு சொல்லி அனுப்பிட்டார். ஒருவேளை இரஞ்சித் அண்ணாவுக்காக ஒத்துக்கிட்டாரோனு முதலில் நினைச்சேன். முழுப் படத்தையும் எடுத்து முடிச்சிட்டுதான் அவர்கிட்ட மறுபடியும் போனேன். முழுப்படத்தையும் பார்த்தார். அப்புறம் என்கிட்ட திரும்பிப் பேச ஆரம்பிச்சார், என்னைப் பத்தியே எல்லோர்கிட்டேயும் பேச ஆரம்பிச்சார். என் படத்துக்குள்ள முழுசா வந்துட்டார். அப்புறமென்ன, அவரும் கறுப்பியா மாறி இந்தக் கதையோட மூலைமுடுக்கெல்லாம் திரிஞ்சி பெரும் உழைப்பை இந்தப் படத்துக்காகக் கொடுத்திருக்கிறார். பரியேறும் பெருமாளோட மியூசிக்கல் டிரீட்மென்ட் ரொம்பவே புதுசா இருக்கும். அதேசமயம் ரொம்பக் காத்திரமாவும் இருக்கும்.”

``தமிழ் சினிமாவில் தென்மாவட்டக் கதைகள் ஏராளமா பேசப்பட்டிருக்கு. `பரியேறும் பெருமாள்’ எந்தவிதத்தில் புதுமையா இருக்கும்?’’

“பரியேறும் பெருமாளைத் தென்மாவட்டக் கதைனு மட்டும் சொல்ல முடியாது. ஏன்னா, தமிழ்நாட்ல இருக்கிற எல்லாச் சட்டக் கல்லூரிகளில் நடக்கிற கதையும் இதுல இருக்கு. இந்தியால இருக்கிற எல்லா கிராமங்களில் நடக்கிற கதையும் இதுல இருக்கு. அதுமட்டுமில்ல, உலகத்துல ஏதோ ஒரு மூலையில யாரோ ஒரு தனிமனிதன் நடத்துற பெரிய யுத்தமும் இதுல இருக்கு. `பரியேறும் பெருமாள்’ படத்துக்கு தென்மாவட்டம் என்பது ஒரு விஷூவல் பிளாட்ஃபார்ம்தான். அங்க நடந்தா இந்தக் கதை எப்படி நடக்கும் என்கிற காட்சிப்படுத்துதல் மட்டும்தான். மத்தபடி இது ஒரு பொது நில மனிதனோட கதைதான்.”

`` `மறக்கவே நினைக்கிறேன்’ தொடர்ல நிறைய மனிதர்களை அறிமுகப்படுத்தினீங்க. படத்துல அந்தப் பாத்திரங்களையும் எதிர்பார்க்கலாமா?’’

“அவர்கள் இல்லாமல் எப்படி? ஆனந்த விகடனில் வெளியான அந்தத் தொடர்தான் என்னையும் என் கதைமாந்தர்களையும் எல்லோரிடமும் கொண்டுபோய்ச் சேர்த்தது. இப்பவும் எனக்கு அந்தத் தொடர் ஒரு பெரிய விலாசமா இருக்கு. நான் இல்லேன்னு சொன்னாலும் விகடன் வாசகர்கள் நிச்சயமா கண்டுபிடிச்சிடுவாங்க. படத்தில் அந்தக் கதாபாத்திரங்களும் இருக்கிறாங்க. வேற பேர்ல, வேற முகத்துல.”

``இரஞ்சித் தயாரிப்பு... சட்டக்கல்லூரிக் கதை... திருநெல்வேலிக் களம் என, படத்துக்கு அரசியல் சார்ந்த ஓர் எதிர்பார்ப்பு இருக்கே?’’

“இங்க இரஞ்சித் அண்ணன் திறந்து விட்டிருப்பது ஜன்னலை அல்ல, பெரும் கதவை. அதனால், அவரின் வாசல் வழி வருகிறவர்கள் பெரும் விடியலை, வெளிச்சத்தை, விரும்புகிறவர்களாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்கள் பேசுகிற அரசியல் நிச்சயம் தூய்மையானதாகத்தான் இருக்கும். படத்தில் அப்படியொரு மாண்புமிக்க அரசியல், திணிப்பாக இல்லாமல் கதையோடு இழையோடியிருக்கிறது.

நான் கதை சொல்லி முடிக்கும்போது இரஞ்சித் அண்ணன் என்ன சொன்னாரோ அதையேதான் படம் பார்த்து முடிச்சதும் சொன்னார், ‘ஐ லவ் யூ டா’.”

``உங்கள் இயக்குநர் ராம் படம் பார்த்தாரா?’’

“படத்தை முதல்ல அவர்தான் பார்த்தார். ஒரே இரவு... அந்த இரவு முழுக்க `பரியேறும் பெருமாள்’ படத்தை மூன்று முறை பார்த்தார். இங்க இருக்கிற எட்டுக் கோடிப் பேரோட கண்ணு வழியாவும் பார்த்திருப்பாருன்னு நினைக்கிறேன். ஏன்னா, பன்னிரண்டு வருட உறவின் பதைபதைப்பு அதில் இருந்தது. படம் பார்த்து முடித்த பிறகு அந்தக் கைகுலுக்கலும், அந்தத் தலைகோதலும், அந்த மகிழ்ச்சியும்... அவ்வளவுதான் என் பொழுது விடிஞ்சிடுச்சி.”