என் விகடன் - மதுரை
என் விகடன் - சென்னை
என் விகடன் - திருச்சி
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - கோவை
Published:Updated:

காதலை மிஸ் பண்ண மாட்டேன்!

இர.ப்ரீத்தி

##~##

மில்நாட் மேகசின்... ஓ வாவ்... கிரேட்! இப்பதான் ரெண்டு வாரம் முன்னாடி தமில்நாட் வந்தேன். அது என்ன ஆச்சி? ஆங்... பொள்ளாச்சி! அங்கேதான் ஷூட்டிங். இப்போ என் ஹாலிடே ஸ்பாட்ல பொள்ளாச்சியும் ஒண்ணு!'' - அவரது காலர் டோனைக் காட்டிலும் அழகாகச் சிரிக்கிறார் பிரியங்கா சோப்ரா.

 ''தமிழ்ல விஜய்கூட மறுபடியும் நடிக்கிறீங்கனு கேள்விப்பட்டோம்... அப்படியா?''

''அப்படினு செய்திகள்தான் வருது. ஆனா, அப்படி எந்த ஆஃபரும் வரலை. அப்படி எதுவும் வாய்ப்பு கிடைச்சா, உங்களைவிட அதிகமா சந்தோஷப்படுற ஆள் நான்தான். விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் சார் காம்பினேஷன்... ஸோ ஸ்வீட்! பார்க்கலாம்... எனக்கு அதிர்ஷ்டம் இருக்கானு!''

''இந்தியில் இலியானா அறிமுகமாகும் படம் உங்களால் தாமதம் ஆகுதுனு சொல்றாங்களே... உங்களுக்குள் என்ன பிரச்னை?''

''அப்படியா என்ன? இது எனக்கே நியூஸ். 'பர்ஃபி’ படத்தில் ரன்பீர் கபூர், நான், இலியானா நடிக்கிறோம். இலியானா ரொம்ப புரொஃபஷனலிஸ்ட். வேலையில் சின்சியரா இருப்பாங்க. அசரடிக்கும் அழகும் அபாரத் திறமையும் உள்ளவங்க. பார்த்தீங்களா... எவ்ளோ பாராட்டுறேன். நான் எப்படி அவங்களுக்குப் பிரச்னை பண்ணுவேன்? ஷி இஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்!''

காதலை மிஸ் பண்ண மாட்டேன்!

''கேத்ரீனா கைஃப், ப்ரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி எல்லாம் கிரிக்கெட் லீக்கில் பரபரப்பா இருக்காங்க. ஆனா, தியேட்டர் ஸ்க்ரீன் தாண்டி உங்களை எங்கேயும் பார்க்க முடியலையே?''

''இப்படி யாரும் கேட்டுடக் கூடாதுனுதான் ஹோம்வொர்க் பண்ணிட்டு இருந்தேன்.சீக்கிரமே இங்கிலீஷ் ஆல்பம் ஒண்ணு ரிலீஸ் பண்ணப்போறேன். சின்ன வயசுல இருந்தே மியூஸிக் ஆர்வம் உண்டு எனக்கு. வெஸ்டர்ன் மியூஸிக் கத்துக்கிட் டேன். இப்போ யூ.எம்.ஜி. தேசி ஹிட்ஸ் மூலம் என் ஆல்பம் ரிலீஸ் பண்றேன். நானே பாட்டு எழுதி... நானே பாடி இருக்கேன். சர்வதேச அளவில் ரீச் பண்ற அளவுக்கு புரொமோஷன் இருக்கும். மத்தபடி கிரிக்கெட்பத்தி நான் யோசிச்சதுகூட இல்லை. ஆனா, பார்க்கலாம்! எதிர்காலத்தில் நானும் ஐ.பி.எல்-ல குதிச்சாலும் குதிக்கலாம்!''

''சவுத் இந்தியன் ஹீரோயின்ஸ்பத்தி என்ன நினைக்கிறீங்க. யார்லாம் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ்?''

''எல்லா கேர்ள்ஸும் ரொம்ப அழகு, ரொம்ப டேலன்டட். சும்மா சொல்லலை. ஒரு காரணத்தோடுதான் சொல்றேன். என்ன காரணம் தெரியுமா? என்னோட ஜீன்ஸ்லயும் தென்னிந்தியப் பாரம்பரியம்

காதலை மிஸ் பண்ண மாட்டேன்!

கலந்திருக்கு. என் அம்மா வீட்ல எல்லோ ரும் கேரளா பக்கம். இப்போ தெரியுதா நான் ஏன் அப்படிச் சொன்னேன்னு?''

''கிட்டத்தட்ட எல்லா இந்திய உலக அழகிகளும் 'மிஸஸ்’ ஆகிட்டாங்க. நீங்க மட்டும் இன்னும் 'மிஸ்’ஸாவே இருக்கீங்களே?''

''ம்ம்ம்... என்ன சொல்றது? எனக்கு மேரேஜ் பார்ட்னர்ஷிப் மேல நம்பிக்கை இருக்கு. ஆனா, இன்னும் அதுக்கான நேரம் வரலைனு நினைக்கிறேன். என் கேரியர்லயே நான் இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கு. அதனால கல்யாணம்பத்தி யோசிக்கவே இல்லை. ஆனா, நிச்சயம் காதல் திருமணம்தான். எனக்கான காதலை மிஸ் பண்ண மாட்டேன்!''