சினிமா
தொடர்கள்
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

சினிமாவில் தமன்னாவுக்கு இது 12-வது ஆண்டு. சீனு ராமசாமி இயக்கும்  `கண்ணே கலைமானே’   தமன்னாவுக்கு 60-ஆவது படம். பப்ளி பெண்ணாக நடிக்க ஆரம்பித்தவர் இப்போது மெச்சூர்ட் மங்கை. `தர்மதுரை’ படத்தில் டாக்டராக நடித்தவருக்கு `கண்ணே கலைமானே’  படத்தில் வங்கி அதிகாரி கேரக்டர்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

லர்ஸ் டிவியின் `மாப்பிள்ளை’ ஆர்யாவுக்கு ஏப்ரல் 14-ல் திருமணம். இப்போது 16 பெண்களுடன் சுயம்வர நிகழ்ச்சியில் களமிறங்கியிருக்கும் ஆர்யா இறுதிக்கட்டமாக இவர்களில் 3 பேரைத் தேர்தெடுப்பாராம். அந்த 3 பேரில் யாரைத் தன் மனைவியாகத் தேர்ந்தெடுக்கிறார் என்பது டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. பிக் பாஸைப் போலவே டாஸ்க்கெல்லாம் இந்த நிகழ்ச்சியிலும் உண்டு!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

ரவு நேரங்களில் காரில் சென்னையைச் சுற்றிவருவது  விஷாலின் சீரியஸ் பொழுதுபோக்கு.  சாலையில் எங்கெல்லாம் மக்கள் படுத்து உறங்குகிறார்களோ அங்கே காரை நிறுத்தி, அவர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.  வயதானவர்கள் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்துகொண்டிருந்தால் அவர்களின் வண்டியில் இருக்கும் அனைத்துப் பொருள்களையும் டபுள் மடங்கு பணம் கொடுத்து வாங்கிக்கொள்கிறாராம்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

யக்குநர் பாரதிராஜாவின் பேச்சும், அவரின் கருத்துகளும் `இவர் நாத்திகரோ’ என சிலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும். ஆனால், பாரதிராஜா தீவிர இறை நம்பிக்கையாளர். அதிகாலை எழுந்து, வாக்கிங் முடித்ததும் விநாயகர் முன் நின்று பாட்டு பாடி வணங்குவது அவர் வழக்கம். 70 வயதைத் தாண்டிய இயக்குநர் இமயம், பல ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை உணவுகளைத் தவிர்த்து இயற்கை உணவுகள் பக்கம் திரும்பியதுதான் அவரின் ஆக்டிவ் ஆரோக்கியத்துக்குக் காரணம்!

பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

சில ஆண்டுகள் முன்புவரை மாடிஃபை செய்யப்பட்ட பைக்குகளில் பறப்பதை ஹாபியாகக் கொண்டிருந்த விஜய்யின் ஆர்வம் இப்போது கார்கள் மீதுதான். ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட், பி.எம்.டபிள்யு X6,  மினி கூப்பர், நிஸான் எக்ஸ்-ரெய்ல் எனப் பல படாபட்ஜெட் கார்கள் வைத்திருக்கிறார் விஜய். ஆனால் அடிக்கடி தளபதியை செம சிம்பிளாக மாருதி ஸ்விஃப்ட்டிலும் பார்க்கலாம்!

பிட்ஸ் பிரேக்

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

ஞ்சலீனா ஜோலியின் தீவிர ரசிகை ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் ஏஞ்சலீனா ஜோலி போல நடித்துப் புகழ்பெற வேண்டும் என்பது அவரது கனவாம். `` `உயிரைக் கொடுத்து நடித்தேன்’ என்று சொல்வார்களே அதுபோல `தரமணி’ படத்தில் நடித்தேன். கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள். ஆனால், படத்தில் என்னுடைய பர்ஃபாமென்ஸைப் பார்த்த பிறகும் எனக்கு வழக்கமான ஸ்டீரியோடைப் ரோல்களே வருவது தமிழ் சினிமாவின் மீதான என்னுடைய நம்பிக்கையைக் குறைக்கிறது’’ என ஃபீலாகியிருக்கிறார் ஆண்ட்ரியா. கவலைப்படாத கண்ணு!

பிட்ஸ் பிரேக்

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

டிகை சாவித்திரியின் பயோபிக்கான `நடிகையர் திலகம்’ படத்தில் இணைகிறார் அனுஷ்கா. தெலுங்கு சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாரான பானுமதியாக நடிக்கிறார் அனுஷ்கா. ``நான் நடிக்க மறுத்த படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் சாவித்திரி’’ என்பது ரியல் பானுமதியின் கெத்து கருத்து. அந்த கெத்து லேடியாக நடிப்பதில் ``செம ஹேப்பி’’ என்கிறார் அனுஷ்கா. இந்தப் படத்தில் ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான் நடிக்கிறார்!