சினிமா
தொடர்கள்
Published:Updated:

“கடவுள் கொடுத்த வரம்!”

“கடவுள் கொடுத்த வரம்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“கடவுள் கொடுத்த வரம்!”

கே.ஜி.மணிகண்டன்

“சின்ன வயசுல, நடிக்கிற ஆர்வமெல்லாம் பெருசா இல்லை. ஆறாம் வகுப்பு படிக்கும்போது, ‘மாஸ்டர்ஸ்’ படத்துல நடிக்க சான்ஸ் வந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும்போது, ‘ராணி பத்மினி’, ‘அனுராக கரிக்கின் வெல்லம்’ படங்கள்ல நடிச்சேன். இப்போ, ப்ளஸ் டூ. பப்ளிக் எக்ஸாம் இருக்கிறதுனால, நடிக்கக் கூப்பிட்டா ‘நோ’ சொல்லிடலாம்னுதான் இருந்தேன். ஆனா, பாலா சார்கிட்ட இருந்து வாய்ப்பு வரும்போது, எப்படி சார் மறுக்கமுடியும்?” என்று புன்னகைக்கிறார் இவானா.

‘நாச்சியார்’ படத்தில் ஜோதிகா விறைப்பும் முறைப்புமாக அதகளம் செய்து  சிக்ஸர் அடித்தால், அப்பாவி முகத்தோடும், அதில் இழையோடும் குட்டிக் குட்டி ரியாக்‌ஷன்களோடும் சிங்கிள்ஸ் தட்டி அசத்தியவர் இவானா.

“கடவுள் கொடுத்த வரம்!”

“பாலா படங்கள் எல்லாவற்றையும் பார்த்திருக்கீங்களா?”

``சில படங்கள் பார்த்திருக்கேன். எங்க அப்பா பாலா சாரோட தீவிர ரசிகர். ‘இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாத’னு சொன்னார். அம்மாவும், ‘நீயே ஒரு குழந்தை. ஒரு குழந்தைக்கு அம்மாவா நடிக்கிறதுதான் ஒரு நடிகையா உனக்கான சவால்’னு சொன்னாங்க. ரெண்டுபேரும் மாத்தி மாத்திச் சொன்னதும் எனக்குள்ள பதற்றம் வந்துடுச்சு. பாலா சார் ஆடிஷன் வெச்சப்போகூட, அதே பதற்றத்தோடதான் போனேன். சிரிப்பு, கோபம், அழுகை, வெறுப்புனு விதவிதமான ரியாக்‌ஷன்ஸ் கொடுக்கச் சொல்லி போட்டோஷூட் பண்ணார். அவர் எப்படியாவது ஓகே சொல்லிடணும்னு எனக்குள்ள ப்ரே பண்ணிக்கிட்டே இருந்தேன். கடவுளும் என் ப்ரேயருக்கு ஓ.கே. சொல்லிட்டார். அதான் ‘நாச்சியார்’ வாய்ப்பு.’’

“கடவுள் கொடுத்த வரம்!”

“தமிழில் முதல் படத்துலேயே பாலா, ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் என சீனியர்களோடு வொர்க் பண்ணியிருக்கீங்க. எப்படி ஃபீல் பண்றீங்க?”

‘`உண்மையைச் சொல்லணும்னா, சந்தோஷத்துல இருந்து நான் இன்னும் மீண்டு வரலை. பாலா சார் எக்ஸலன்ட் டைரக்டர். ஜோதிகா மேடம் என்னோட ஃபேவரைட் நடிகை. ஜி.வி. சார் நல்ல நடிகர், மியூசிக் டைரக்டர். முக்கியமா, என் முதல் தமிழ்ப் படத்துலேயே இளையராஜா சாரோட இசை... எல்லாமே எனக்கு ஆசீர்வாதமா அமைஞ்சிருக்கு. உண்மையிலேயே நான் ரொம்ப லக்கி. ஜோதிகா மேடம் நடிக்கிறதைப் பார்த்துப் பார்த்துதான் எனக்குள்ள இருந்த பயம் கொஞ்சம் கொஞ்சமா விலகுச்சு.  என்கிட்ட அழற மாதிரி ஒரு சீனை இயக்குநர் சொல்லும்போது, ஜோதிகா மேடமும் அதை நடிச்சுப் பார்த்துப்பாங்க. அப்போ, அவங்க ரியாக்‌ஷனைப் பார்த்தாலே போதும், நமக்கும் அழுகை வந்திடும். ஓர் இலக்கை வெச்சுக்கிட்டா, அதை சாத்தியப்படுத்துறதுக்கு எந்தளவுக்கு உழைக்கணும்னு பாலா சாரோட டைரக்‌ஷனைப் பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். இந்த ஒரு படம் போதும்... எந்தப் படத்துலேயும் இனி தைரியமா நடிக்கலாம்.”

“கடவுள் கொடுத்த வரம்!”

“ஒரிஜினல் பெயரே ‘இவானா’தானா?”

“ம்ஹூம். அலினா ஷாஜி. உச்சரிக்க சிரமமா இருக்குனு பாலா சார்தான் பெயரை மாத்தச் சொன்னார். என்னோட சொந்தக்கார ஒருவர்தான் ‘இவானா’ங்கிற பெயரை வெச்சார். ‘கடவுள் கொடுத்த வரம்’னு அர்த்தமாம். நல்லா இருக்கில்ல!”