சினிமா
தொடர்கள்
Published:Updated:

“இப்பெல்லாம் வித்தியாசமா எதுவும் யோசிக்கிறதில்லை!”

“இப்பெல்லாம் வித்தியாசமா எதுவும் யோசிக்கிறதில்லை!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இப்பெல்லாம் வித்தியாசமா எதுவும் யோசிக்கிறதில்லை!”

பரிசல் கிருஷ்ணா, நித்திஷ்படம்: ப.சரவணகுமார்

ரே ஒரு போஸ்டரில் ஓ.பி.எஸ்ஸைவிட அதிக வைரல் ஆனது `தமிழ்ப்படம் 2.0’. தமிழ் சினிமா ஹீரோக்களை டம்மி பீஸ்களாக ஏகத்துக்கும் கலாய்த்தெடுத்த `தமிழ்ப்படம்’ சூப்பர் ஹிட். இப்போது சினிமாவைவிட அரசியலைக் கலாய்ப்பதுதான் ட்ரெண்ட் என்பதால் `தமிழ்ப்படம் 2.0’ படத்தில் அரசியல் வெடிகளைக் கொளுத்த ஆரம்பித்திருக்கும் இயக்குநர் சி.எஸ் அமுதனை ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்தேன்

 வழியை மறித்தபடி இருந்தது ஒரு திருவள்ளுவர் சிலை. `‘பாதைல யாருங்க செட் ப்ராப்பர்ட்டியை வச்சது?’’ என ஒருவர் முனங்க, சத்தம் கேட்டு சிலையே எழுந்து நகர்ந்து உட்கார்கிறது. உற்றுப்பார்த்தால் அது சிலையில்லை, நடிகர் `மிர்ச்சி’ சிவா! ‘`திருவள்ளுவருக்குத் தமிழ்ப்படத்துல என்னங்க வேலை?’’ என நாம் ஷாக்காக, ‘கதைப்படி இதுல அவர் கம்பராமாயணம் எழுதுறாரு’ என நக்கலாகக் குரல் கொடுத்தபடி என்ட்ரியாகிறார் அமுதன்.

“இப்பெல்லாம் வித்தியாசமா எதுவும் யோசிக்கிறதில்லை!”

“போஸ்டர்லயே பரபரப்பு கிளப்பிட்டீங்க. பார்ட்-2ல என்ன கதை?”

‘`என்னங்க இப்படியெல்லாம் கேட்குறீங்க? போன பார்ட்ல கதை இருந்ததா என்ன? அதேதான் இந்தப் பார்ட்லயும். கதையே இல்லாம முக்கால்வாசிப் படம் முடிச்சாச்சு. எடுத்தவரைக்கும் எப்பவும் போல சுமாராத்தான் வந்திருக்கு. மத்தவங்க என்ன சொல்றது? நானே சொல்றேன். ஒருதடவை பார்க்கலாம் பாஸ்!”

“முதல் படத்துக்கும் 2.0-க்கும் என்ன வித்தியாசம்?”

“பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. அதே ‘கம்பீரமான’ போலீஸ் அதிகாரி ரோல்ல சிவா நடிக்கிறார். ஹீரோயினா ஐஸ்வர்யா மேனன்.  யங்ஸ்டர்ஸை தியேட்டருக்குக் கொண்டு வரணும்ங்கிற நோக்கத்துல டீன் ஏஜ்ல இருக்கிற மூணு பேரை சிவா ஃப்ரெண்ட்ஸா நடிக்க வச்சிருக்கோம். ‘அட! பார்க்க இந்தப் பசங்க அசப்புல சந்தானபாரதி, மனோபாலா, ஆர்.சுந்தரராஜன் மாதிரியே இருக்காங்களே’ன்னு உங்களுக்குக் கண்டிப்பா தோணும். ஏன்னா, நடிச்சிருக்கிறதே அவங்க மூணு பேரும்தானே. முக்கியமான ரோல்ல சதீஷ் நடிச்சிருக்காரு.

முதல்  பார்ட்ல டெக்னிக்கல் மெனக்கெடல்னு எதுவுமில்லை. மக்கள் சிரிச்சாப்போதும்னு படம் எடுத்தோம். இந்தத் தடவை கொஞ்சம் வித்தியாசம் காட்டணும்னு கிராஃபிக்ஸ் எல்லாம் பயன்படுத்தியிருக்கோம். இந்திய ஷெட்யூல் முடிச்சுட்டோம்... ஃபாரின் லொகேஷன்களுக்குப் போறோம்.”

“இப்பெல்லாம் வித்தியாசமா எதுவும் யோசிக்கிறதில்லை!”

“சிவா - சதீஷ், சிவா - ஐஸ்வர்யா மேனன்... எந்த ஜோடிக்குக் கெமிஸ்ட்ரி அதிகம்?”

“கெமிஸ்ட்ரியா, ஃபிசிக்ஸா? ஐயோ... வேண்டாம் பாஸ்... இந்த ரெண்டு சாய்ஸ்ல எதைச் சொன்னாலும் வில்லங்கமாயிடும். அதனால இந்தக் கேள்விக்கு ‘பாஸ்’ சொல்லிடலாம்.”

“போஸ்டர்ல அரசியல்வாதிகளைக் கலாய்ச்சீங்க. இப்போ சினிமாவிலிருந்து அரசியல்ல என்ட்ரியாகுற சீசன். அவங்களுக்கும் படத்துல ரோல் இருக்கா?”

“சீரியஸா ஒண்ணு சொல்லவா... சரி சொல்றேன்... சீரியஸா காமெடியான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க. சின்ன லாஜிக்தாங்க... எதைப் பத்தியெல்லாம் மக்கள் பரபரப்பா பேசுறாங்களோ அதையெல்லாம் கலாய்க்கணும். தமிழ்ப்படத்துல ஹட்ச் விளம்பரத்தைக்கூட கலாய்ச்சிருப்போம். எங்களுக்கு சினிமா, அரசியல், விளம்பரம், பிசினஸ்னு எந்த வித்தியாசமும் கிடையாது!” 

“ஸ்பூஃப் படங்கள் நிறைய தமிழ்ல வராததுக்குக் காரணமென்ன? இத்தனை வருஷம் கழிச்சு திரும்ப சி.எஸ். அமுதனேதான் வந்து எடுக்கணுமா?”

“இந்தக் கேள்வி எனக்கே நிறைய தடவை தோணியிருக்கு. ஒரு பேய்ப்படம் ஹிட்டானா அதைத் தொடர்ந்து நிறைய பேய்ப்படங்கள் வருது. ஆனா, `தமிழ்ப்படம்’ ஹிட்டாகியும் அடுத்து அதே ஜானர்ல படம் வரவேயில்லை. உண்மையைச் சொல்லணும்னா `தமிழ்ப்படம்’ பார்ட் ஒன், டூன்னு நூறு பாகங்கள் எடுக்கிற அளவுக்கான விஷயங்கள் நம்மகிட்ட இருக்கு. ஆனாலும் யாரும் முயற்சி பண்றதேயில்லை. ‘அடுத்த படமும் ஸ்பூஃப்பா இருந்தா நமக்கு அதுவே அடையாளம் ஆயிடும், அதிலிருந்து வெளியே வரமுடியாது’ன்னுதான் நானும் இத்தனை வருஷமா எடுக்காம இருந்தேன். ஒருகட்டத்துல, ‘சரி! எட்டு வருஷமாயிடுச்சே! எடுப்போம்’ன்னு இறங்கியாச்சு.”

“இப்பெல்லாம் வித்தியாசமா எதுவும் யோசிக்கிறதில்லை!”

“இந்த எட்டு வருஷத்துல கோலிவுட்ல என்னவெல்லாம் மாறியிருக்கு?”

“டெக்னிக்கலா நாம கொஞ்சம் முன்னேறியிருக்கோம்தான். ஆனா, க்ரியேட்டிவிட்டி ஏரியாவுல அதே  ஸ்டேஜ்லதான் இருக்கோம். 50 வருஷங்களுக்கு முன்னாடி, ‘தாய் மகளுக்குக் கட்டிய தாலி’ என்ற டைட்டிலோடு ஒரு படம் வந்திருக்கு. இப்பெல்லாம் அப்படி ஒரு வித்தியாசமான டைட்டில்கூட யோசிக்கிறதில்லை. டைட்டில்லகூட க்ரியேட்டிவிட்டியைக் காட்டமுடியாத நிலைமைலதான் இருக்கோம்.”

“அகில உலக சூப்பர்ஸ்டாருக்கு இந்தப் படத்துல புதுப்பட்டங்கள் ஏதாவது?”

“இருக்கு. ஒரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு. ஆனா, சஸ்பென்ஸா வச்சிருக்கோம். தியேட்டர்ல பாருங்க.”

“இப்பெல்லாம் வித்தியாசமா எதுவும் யோசிக்கிறதில்லை!”

“சரி, உங்களோட அந்த ‘ரெண்டாவது படம்’?”

“சில பிரச்னைகளால அந்தப் படம் வெளிவராம இருக்கு. ‘ரெண்டாவது படம்’ என்னோட மூணாவது படமாவாவது வரும்னு நம்புறேன். அப்படியும் இல்லைன்னா நாலாவது படமா ‘ரெண்டாவது படம்’ வரும்.”
நாங்க கிளம்பிட்டோம் பாஸ்...