தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 2

ஜோக்ஸ் - 2
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 2

ஓவியங்கள்: கண்ணா

“நீங்க பினாமி பேர்ல நிறைய சொத்துகளை வாங்கியிருக்கீங்களே?”

ஜோக்ஸ் - 2

"இதுல இருந்து தெரியலையா, நான் எனக்குன்னு எதுவுமே சேர்த்துக்கலைன்னு"

- எஸ்.கோபாலன்

“கட்சியில் சேர வந்தவர் ஏன் திரும்பிப் போயிட்டார்?”

ஜோக்ஸ் - 2

“தலைவர் ஒரு வருஷ வாரன்டி கேட்டாராம்”

- அம்பை தேவா

 "கூட்டம் வரலைன்னு தெரிஞ்சதும் தலைவர் என்ன செஞ்சார்?”

ஜோக்ஸ் - 2

" ‘வேங்கை மகன் ஒத்தையில நிக்கேன்’னு பஞ்ச் பேசுறார்"

- ஏந்தல் இளங்கோ

“அந்த சித்த வைத்தியர் ஒரு போலின்னு எதை வச்சு சொல்றீங்க?"

ஜோக்ஸ் - 2

" ‘மொபைல் நெட்வொர்க் முடக்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்படும்’னு போர்டு வச்சிருக்காரே..."

 - தொண்டி முத்தூஸ்