தொடர்கள்
Published:Updated:

ஜோக்ஸ் - 3

ஜோக்ஸ் - 3
பிரீமியம் ஸ்டோரி
News
ஜோக்ஸ் - 3

ஓவியங்கள்: கண்ணா

“ ‘டாக்டர்க்குப் படிக்க எவ்வளவு செலவாகும்; எவ்வளவு சிரமப்பட்டு வேலை வாங்கணும்’ போன்ற விவரங்களை எதுக்கு கிளினிக்லே எழுதி வெச்சிருக்கீங்க?”

ஜோக்ஸ் - 3

“ஃபீஸ் அதிகம்னு யாரும் சொல்லிடக்கூடாதுல்ல... அதுக்குதான்”

- புஸ்கு

“எல்லாக் கட்சியின் கொள்கைகளையும் உள்ளடக்கிய எங்கள் புதிய கட்சியின் பெயரை தலைவர் இப்போது அறிவிப்பார்......”

ஜோக்ஸ் - 3

“அம்மா தேசிய திராவிடர் தமிழர் பாட்டாளி கம்யூனிஸ்ட் மக்கள் மறுமலர்ச்சி விடுதலை நீதி முன்னேற்ற மய்ய ஆன்மிகக் கழகம்!”

- ப்ரணா

“அவரை மாதிரி கஞ்சனைப் பார்க்க முடியாது”

“எப்படி?”

ஜோக்ஸ் - 3

“ஊசி மூலமா எலுமிச்சம் பழத்துல சாறு எடுத்துட்டு, அப்புறமா கார் டயர்ல வைக்கிறாரே!”

- எஸ்.முகம்மது யூசுப்

“சி.பி.ஐ-லேர்ந்து வந்திருக்காங்க தலைவரே!“

ஜோக்ஸ் - 3

“வெயிட் பண்ணச் சொல்லு. ஐ.டி-லேர்ந்தும், அமலாக்கப் பிரிவுல இருந்தும் வந்துடட்டும்..  சேர்த்தே பேட்டி தர்றேன்.”

- எஸ் கோபாலன்