Published:Updated:

நேர் கோணல்

நேர் கோணல்
பிரீமியம் ஸ்டோரி
நேர் கோணல்

கற்பனை: கொஸ்டின்குமார், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

நேர் கோணல்

கற்பனை: கொஸ்டின்குமார், ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

Published:Updated:
நேர் கோணல்
பிரீமியம் ஸ்டோரி
நேர் கோணல்

நிருபர்: சார், வணக்கம். எதுக்கும் தள்ளி உக்காந்துக்கவா?

கவர்னர்: ஏன்?

நிருபர்: கன்னத்தைத் தட்டினாலும் தட்டுவீங்களே?

கவர்னர்: நோ, நோ, நல்ல கேள்வி கேட்டாத்தான் கன்னத்தைத் தட்டுவேன்!

நிருபர்: எது நல்ல கேள்வின்னு யார் முடிவு பண்ணுவாங்க?

கவர்னர்: வேற யாரு, நான்தான்!

நேர் கோணல்

நிருபர்: அதுசரி, தமிழ்நாட்டில எல்லாத்தையும் நீங்கதானே முடிவு பண்றீங்க! நீங்களாவது பரவாயில்லை சார். கன்னத்துல தட்டுறீங்க. ஒருத்தர் கன்னத்துலயே பொளீர்ன்னு விடுவார்.

கவர்னர்: ஹூ இஸ் தட் மேன்?

நிருபர்: கவர்னர் வேஷம் தவிர போலீஸ் ஆபீஸர், கலெக்டர், தேர்தல் ஆணையர்னு பல கேரக்டர்ல நடிச்சிருக்கார். அடிக்கடி கோபத்துல கண்ணு சிவப்பாயிடும்!

கவர்னர்: எனக்கே அவரைப் பார்க்கணும்போல இருக்கே?

நிருபர்: நாங்களே அவரை எப்பவாவதுதான் பார்ப்போம். அதிருக்கட்டும் சார். பொதுவா தமிழ்நாட்டில ஒரு பிரச்னைன்னா தமிழக அரசு தான் விசாரணை கமிஷன் போடும். ஆனால் நீங்க போட்டது மட்டும் இல்லாம, ‘தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது’ன்னு சொல்லியிருக்கீங்களே?

கவர்னர்: ஆமா, தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாதுதான்!

நிருபர்:  யார் சார் சொன்னது?

கவர்னர்: நான் தான் சொன்னேன்.

நிருபர்: நீங்க சொன்னா நாங்க ஏத்துக்க முடியுமா?

நேர் கோணல்

கவர்னர்: ஏன் வேணும்னா எடப்பாடிகிட்டயே கேட்டுப்பாருங்களேன், அவருக்கு அதிகாரம் இருக்கா, இல்லையான்னு...

நிருபர்: ம்க்கும், அவருக்கு அதிகாரம் இல்லைங்கிறதுதான் டோட்டல் தமிழ்நாட்டுக்கே தெரியுமே. இருந்தாலும் உங்கமீதே குற்றச்சாட்டு இருக்கிறப்போ நீங்களே கமிஷன் போடுறது நியாயமா?

கவர்னர்: முள்ளை முள்ளாலதான் எடுக்கணும்.

நிருபர்:  பழமொழியெல்லாம் பேசறீங்களே?!

கவர்னர்: எல்லாம் எடப்பாடி சொல்லிக்கொடுத்ததுதான்.

நிருபர்: அதுசரி, எப்படி சமாளிக்கிறதுங்கிறதுல எம்.பில் பட்டம் வாங்கினவங்க ஆச்சே. இருந்தாலும் உங்கமீதே குற்றச்சாட்டு....

கவர்னர்: ஜெயலலிதா ஹாஸ்பிடலில் இருந்தப்போ பன்னீரு சி.எம், எடப்பாடி அமைச்சர். இப்போ அவங்களே மரணத்துல மர்மம் இருக்கான்னு விசாரணை கமிஷன் போடுறாங்களே. அது சரின்னா இதுவும் சரிதான்!

நிருபர்: உண்மைதான். தமிழ்நாட்டுல நடக்கிற எல்லாமே தப்புதான். பார்த்துக்கிட்டு நாங்க சும்மா இருக்கிறதும் தப்புதான். ஆமா, தமிழ்நாடு முழுக்க ஆய்வு போனீங்களே, என்ன கண்டுபிடிச்சீங்க?

கவர்னர்: தமிழ்நாட்டில ஆட்சியே நடக்கலைனு கண்டுபிடிச்சேன்.

நேர் கோணல்

நிருபர்: இதை நாங்க ஆய்வு செய்யாம எப்பவோ கண்டுபிடிச்சிட்டோம். சார் அர்ஜென்டா போகணும். பாத்ரூம் எங்கே போகணும்?

கவர்னர்: பாத்ரூம் எனக்கு இங்கிலீஷ்ல பிடிக்காத வார்த்தை

நிருபர்: இருக்கட்டும் சார்.  பேட்டி முடிச்சுட்டே போறேன். ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நானும் சொன்னேன்’னு சொன்னீங்களே, யார்கிட்ட சொன்னீங்க?

கவர்னர்: யார்கிட்ட....அதுவந்து...அதான் அன்னைக்குப் பத்திரிகைகாரங்ககிட்ட சொன்னேனே?

நிருபர்: அவங்ககிட்ட சொன்னீங்க சரி. சொல்ல வேண்டியவங்ககிட்ட சொன்னீங்களா?

கவர்னர்: கேட்க வேண்டியவங்க கேட்கலையே? தமிழிசைகூட என்னைப் பார்க்க வந்தாங்களே, அவங்ககிட்டயும் சொன்னேனே?

நிருபர்: பிரதமர் எங்க சி.எம்மையே பார்க்க மாட்டேங்கிறார். ஆனா நீங்க தமிழிசையைக் கூப்பிட்டுக் காவிரி பத்திப் பேசுறீங்களே, அவங்கதான் தமிழ்நாட்டுக்கு முதல்வரா?

நேர் கோணல்

கவர்னர்(கோபமாக) : ந்நோ!

நிருபர்: தெரியும் சார், நீங்கதான் தமிழ்நாட்டுக்கு முதல்வர். தமிழிசை, ஹெச்.ராஜால்லாம் துணை முதல்வர்கள். கரெக்டா சார்?

கவர்னர்: நல்ல கேள்வி. உங்க கன்னத்தைத் தட்டிக்கவா?

நிருபர்: சார், மான் உள்ளே வந்துடுச்சு பாருங்க...

(கவர்னர் திரும்பிப் பார்க்கும் நேரம் பின்வாசல் வழியாகத் தெறித்து ஓடுகிறார் நிருபர்)