" வருடத்துல ஆறு மாசம் திருட மாட்டியா, ஏன்? "

" ஜனங்க சேர்த்து வெக்கிறதுக்கு டைம் தரணுமே, எஜமான்! "
- ஏந்தல் இளங்கோ

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
"உங்களுக்கு எல்லா டெஸ்டும் நார்மலா இருக்கு."
"ரொம்ப நல்லது டாக்டர்"

"அவசரப்படாதீங்க.. அடுத்த வாரம் ஒரு புது டெஸ்ட் வருது. அதை எடுத்து ஏதாவது மாட்டுதான்னு பாப்போம்.."
- மாணிக்கம்
“சிஸ்டர் அந்த பேஷன்ட்கிட்டே அதிர்ச்சியான விஷயம் எதுவும் சொல்லக்கூடாது!”

“அப்படின்னா பில்லை எப்படி காட்டறது டாக்டர்?”
- எஸ்.முகம்மது யூசுப்
“படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதைவிட பஸ்சிலும் ஃப்ளைட்டிலும் ரிலீஸ் செய்வதற்கு அந்த டைரக்டர் ஏன் இவ்வளவு மெனக்கெடுறாரு?”

“அப்பத்தான் படம் பிடிக்கலேன்னாலும் யாரும் பாதியில் எழுந்து போக மாட்டாங்களாம்”
- ரஹீம் கஸாலி
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism