
ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி

ஞாயிறு ஒரு நாள்
மனைவியை சமாளித்துவிட்டால் ,
மீதி ஆறு நாட்களும்
மேனேஜரை சமாளிப்பது ஒரு விஷயமில்லை...!
- கிணத்துக்கடவு ரவி

முகத்தில் அறைந்தாள் காதலி.
லைக்குக்குப் பதிலா
ஷேர் பண்ணிட்டானாம்.
- லி.சீனிராஜ், தொம்பக்குளம்

உன்னைக் கடித்த கொசுவென்றால்
ஏற்றுக்கொள்கிறேன் அன்பே...
கொசுக்கடியில் படுத்திருந்தபோது யோசித்தது.
-கோவிந்த் பகவான்

நீர் தெளித்து
விளக்குமாறால் அடித்து
பேய் விரட்டிய பின்தான்.....
ஸ்பெஷல் தோசை..
- லீ.சீனிராஜ்

ஒண்ணு போனா இன்னொண்ணுன்னு தாவ
‘காதல்’ ஒண்ணும் ‘ஏர்செல்’ இல்ல!
-எஸ்.ஜெயகாந்தி

மனிதனின்
மூதாதையர்
குரங்கென்றறிய
என்ன
ஆதாரம்
என்போருக்கு
இதோ என்
ஆதார்!
- சி.சாமிநாதன்.

`ஏமாந்துட்டேன்’ என்று சொல்ல வெட்கப்பட்ட யாரோ ஒருவர் கண்டுபிடித்ததுதான் ‘விட்டுக்கொடுத்துட்டேன்’ என்ற வார்த்தை!
-பாப்பனப்பட்டு வ.முருகன்

இ.எம்.ஐ-ல் வாங்கி வந்த போனில்
முதல் இன்கமிங் கால்...
கடன் கேட்டு!
-கண்ணன்
எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!
வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!