Published:Updated:

என் குழந்தைகள்தான் என் உலகம்!

என் குழந்தைகள்தான் என் உலகம்!

என் குழந்தைகள்தான் என் உலகம்!

என் குழந்தைகள்தான் என் உலகம்!

Published:Updated:
##~##
ரண்யா... இப்போது 'தமிழ் அம்மா’!  'அவனா பேசுறான், அவன் கெரகம் அப்படி... ஆடி போயி ஆவணி வந்தா, அவன் டாப்பா வருவான்!’ என 'களவாணி’யில் தஞ்சாவூர் அம்மாவைக் கண் முன் நிறுத்தியவர், 'தென்மேற்கு பருவக் காற்றில்’ தேனிக்கார அம்மாவாக வாழ்ந்திருக்கிறார். அன்பும் பொறுப்பும் நிறைந்த தமிழ்நாட்டு மிடில் கிளாஸ் குடும்பங்களின் அம்மாவுக்கு இப்போது சரண்யாவே இலக்கணம்.

 '' 'நாயகன்’ படத்தில் கமல் சாருடன் நடிச்சு 23 வருஷம் முடிஞ்சிடுச்சு. இடையில் எத்தனையோ படங்களில் ஹீரோயினா நடிச்சிருக்கேன். அப்போதுஎல்லாம் இல்லாத மனத் திருப்தியும், மதிப்பும், கௌரவமும் இப்போ கிடைச்சிருக்கு. 'தென்மேற்குப் பருவக் காற்று’ எனக்கு 100-வது படம். அந்தப் படம் பார்த்துட்டு 65 வயசுப் பெரியவர் ஒருத்தர் என் கையைப் பிடிச்சுக்கிட்டு, 'என் ஆத்தாவைப் பார்த்துட்டேன்’னு கரகரன்னு அழுகுறார். உண்மையா, நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!''- நிறைந்த புன்னகையுடன் நேர்த்தியான அழகுத் தமிழில் பேசுகிறார் சரண்யா.

என் குழந்தைகள்தான் என் உலகம்!

''நடிக்க வந்து இத்தனை வருஷம் கழிச்சும், 'நடிகை’ங்கிற நினைப்பு எனக்கு எப்பவுமே கிடையாது. என் உலகம் ரொம்பச் சின்னது. பேப்பர், டி.வி நியூஸ் எதுவும் பார்க்குறது இல்லை. ஏன்னா, நான் ரொம்ப சென்சிட்டிவ். குழந்தை களைக் கொடுமைப்படுத்தும் நியூஸ் படிச்சா, அன்னிக்குத் தூக்கமே வராது. பக்கத்துத் தெருவில் யாரோ டைவர்ஸ் பண்ணிக்கப்போறாங்கன்னு கேள்விப்பட்டாலே, 'பாவம், என்ன பிரச்னையோ? நாம பேசிச் சேர்த்துவைக்காம சும்மா வேடிக்கை பார்க்குறோமே’ன்னு குற்ற உணர்வு அடையுறேன். சுற்றி நடக்குற கெட்ட விஷயங்களைப் பார்த்து என்னால் இயல்பா இருக்க முடியலை. அதான் என் உலகத்தை நானே சுருக்கிக் கிட்டேன். ஆனா, வெங்காயம் விலை ஏறிப் போச்சு, ரேஷன் கார்டுக்கு புது லீஃப் சேர்க்கணும். இதெல்லாம் நல்லாத் தெரியும். நல்லா சமைப்பேன், பிரமாதமாக் கோலம் போடுவேன், நானே கட் பண்ணி எல்லாத் துணிகளையும் தைப்பேன். எவ்வளவு குறைவான வருமானத்திலும் என்னால் குடும்பம் நடத்த முடியும். நான் ஒரு முழுமையான தமிழ் அம்மா!

நிஜத்தில் எப்படிப் பொறுப்புள்ள அம்மாவா இருக்கேனோ, அதுபோலத்தான் சினிமாவிலும் பண்றேன். என் பெரிய பொண்ணு பிரியதர்ஷினி 9-ம் வகுப்பு, சின்னப் பொண்ணு சாந்தினி 6-ம் வகுப்பு படிக்குறாங்க. அவங்கதான் என் உலகம். அவங்களுக்கு பரீட்சை சமயத்தில் எவ்வளவு பெரிய பட வாய்ப்பு வந்தாலும் ஒப்புக்க மாட்டேன். புள்ளைங்க கையைப் பிடிச்சு நான் சொல்லித் தரப்போறது இல்லை. ஆனா, 'நல்லா எழுது. நல்ல மார்க் எடுப்பே’னு அன்போடு சொல்லி அனுப்ப ஒரு அம்மாவா நான் அவங்க பக்கத்தில் இருக்கணும்ல. அதுக்கு இல்லாத அம்மா பிறகு எதுக்கு?''

என் குழந்தைகள்தான் என் உலகம்!

பிள்ளைகள் குறித்துப் பேச ஆரம்பித்தால், அத்தனை பெருமிதம். ''என் சின்னப் பொண்ணு சாந்தினிக்கு இந்தி சொல்லித் தர டீச்சர் வெச்சப்போ, நானும் இந்தி படிச்சேன். ஆறு மாசம் படிச்சு 'பிராத்மிக்’ எக்ஸாம் எழுதப்போனா, ஹால் முழுக்க குட்டிக் குட்டி வாண்டுகள். அவங்களுக்கு மத்தியில் நானும் உட்கார்ந்து எக்ஸாம் எழுதி 96% மார்க் எடுத்தேன். அப்போதான் 'தவமாய் தவமிருந்து’ வெளியான நேரம். என் கணவர் பொன்வண்ணன் 'பருத்திவீரன்’ ஷூட்டிங்ல இருந்து போன் பண்ணி, 'ஒழுங்கா எக்ஸாம் எழுதினியா, பாஸ் பண்ணிடுவியா?’னு கிண்டல் பண்ணிட்டே இருப்பார். எனக்கு என் குழந்தைகளோட எதிர்காலம் எப்பவும் முக்கியம். அதுக்காக ரொம்ப செல்லம் கொடுக்கவும் மாட்டேன். இப்பவும் என் பொண்ணுங்க சைக்கிளில்தான் ஸ்கூல் போறாங்க. 'உங்க பொண்ணுங்குறதால எந்தச் சலுகையும் எங்களுக்கு வேண்டாம்’னு என்கிட்டேயே சொல்லுதுங்க, என் பிள்ளைங்க. இப்போகூட 'விகடன்ல பேட்டி எடுக்குறாங்கடி... வா ஒரு போட்டோ எடுத்துக்கலாம்’னு கூப்பிட்டா, 'ஸாரிம்மா, அப்புறம் ஃப்ரீயா ஸ்கூல் போக முடியாது. வேண்டாம்’னு பெரிய மனுஷி மாதிரி சொல்றா. 'நான் டென்த் எக்ஸாமில் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கணும். உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் நான் நின்னு, அந்த போட்டோ பேப்பரில் வரணும்’னு ஆசைப்படுறா என் பொண்ணு. இந்த மனசுதான் அழகு!குழந்தைகளுக்குத் திறமையைவிட முக்கியம், நல்ல பழக்கவழக்கம்! ஒழுக்கமா, நேர்மையா இருந்தா, திறமை தானா வரும். என்னைப் பொறுத்தவரை, பெத்தா மட்டும் பத்தாது, ஒழுக்கமாவும் நேர்மையாவும் குழந்தைகளை வளர்க்கவும் தெரியணும். அதுக்கு முதலில் பெத்தவங்க அப்படி வாழ்ந்து காட்டணும். நாம அவங்களுக்கு மரியாதை தரணும். குழந்தைகள் தானா நமக்கு மரியாதை தருவாங்க!

என் குழந்தைகள்தான் என் உலகம்!

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஆனால், இப்போ நடிக்கிறது முழுக்கக் கிராமத்து அம்மா ரோல். இதுக்கு எனக்கு முதல் இன்ஸ்பிரேஷன் என் மாமியார் தான். என் கணவரின் சொந்த

என் குழந்தைகள்தான் என் உலகம்!

ஊர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் இருக்கும் ஓலப்பாளையம்னு ஒரு கிராமம். என் மாமியார் ஒரு கிராமத்து மனுஷிக்கே உள்ள தைரியத்தோடு இருப்பாங்க. காப்பி டம்ளரை எப்பவும் சேலை முந்தானையில்தான் பிடிப்பாங்க. அதைத்தான் அப்படியே 'தவமாய் தவமிருந்து’வில் காப்பி அடிச்சேன். இப்போ ஷூட்டிங்குக்காக தேனி போயிருந்தப்போ, திடீர்னு குழம்பு தேவைப் பட்டுச்சு. அங்கே ஷூட்டிங் பார்த்த ஒரு அம்மா கிட்ட டைரக்டர் கேட்டதுமே, 'அதுக்கென்ன... செஞ்சுட்டாப் போச்சு’னு செஞ்சு கொண்டு வந்தாங்க. என்கிட்ட அப்படிக் கேட்டிருந்தா 'இவங்களுக்குக் காரம் பிடிக்குமா, இந்த காய் பிடிக்குமா’ன்னு ஆயிரத்தெட்டு கேள்வியோடு தயங்கி நின்னிருப்பேன். ஆனா அவங்க, 'குழம்புன்னா உப்பு போட்டு வைக்கணும், புளியைக் கரைச்சு ஊத்தணும்... அம்புட்டுத் தானே’ன்னு சாதாரணமா சொல்றாங்க.

அந்தக் கம்பீரமான, தைரியமான மனசுதான் டக்குனு பிடிச்சது. அதை எல்லாம் கவனமாக் கவனிச்சுட்டே இருப்பேன். அப்பதானே எனக்குப் பிடிச்ச அம்மா, கண்ணாம்பாள் மாதிரி நடிக்க முடியும்!''

படங்கள் : வீ.நாகமணி