
News
ஓவியங்கள்: கண்ணா

“ஒரு வருஷத்துக்குப் பிறகு, இன்னைக்குத்தான் என் வீட்டுக்காரர் குழந்தைகளுடன் விளையாடுறார்!”
“வெளிநாடு போயிருந்தாரா?”
“இல்லை. செல்போன் ரிப்பேர் ஆயிடுச்சு!”
- கி.ரவிக்குமார்

“செஸ் போர்டில் 64-க்குப் பதிலாக 65 கட்டங்கள் உள்ளனவே மந்திரியாரே?”
“அதுதான் பதுங்குகுழி மன்னா!”
- அஜித்

“ஏன்யா பேங்க் லாக்கரை உடைச்சே?”
“எனக்கு இந்த பேங்க்ல லாக்கர் இருக்கு சார். வெளியில திருடின நகையை வைக்கதான் சார் உடைச்சேன்”
- வி.சாரதி டேச்சு

“என்ன டாக்டர், வலது கண்ல ஆபரேஷன் பண்ணச் சொன்னா இடது கண்ல பண்ணீட்டிங்க ?”
“கவலைப்படாதீங்க. மறுபடியும் ஆபரேஷன் பண்ண நான் ஃபீஸ் வாங்க மாட்டேன். ”
- வி.சாரதி டேச்சு