Published:Updated:

த்ரிஷா முதல் தீக்ஷா வரை...

2012 வரவேற்கிறது!ம.கா.செந்தில்குமார், படங்கள் : ஜி.வெங்கட்ராம்

த்ரிஷா முதல் தீக்ஷா வரை...

2012 வரவேற்கிறது!ம.கா.செந்தில்குமார், படங்கள் : ஜி.வெங்கட்ராம்

Published:Updated:
##~##

''அடடா... வாரம் ஒரு காலண்டர் பண்ண முடிஞ்சாஎவ்ளோ நல்லா இருக்கும்? இருக்கிற 12 மாசத்துல த்ரிஷா, சமீரா, ஸ்ரேயா, ஜெனிலியா, சமந்தா, அமலா பால், ரிச்சானு சில பேருக்குத்தான் காலண்டர் ஷீட் கொடுக்க முடிஞ்சது. 'எங்களுக்கு ஏன் டேட்ஸ் கொடுக்கலை?’னு கேட்டு, நிறைய ஹீரோயின்ஸ் இன்னும் கோபத்துல இருக்காங்க!''- சந்தோஷமாக அலுத்துக்கொள்கிறார் ஜி.வெங்கட்ராம். தென்னிந்திய சினிமாவுக்கு ஓப்பனிங் கலர் கொடுக்கும் ரசனையான புகைப்படக் கலைஞர். 2011 காலண்டருக்காக வின்டேஜ் கார், பைக்குகளுடன் சினிமா நட்சத்திரங் களைச் சிறை பிடித்தவர், 2012-க்காக 12 அழகிகளை ஆல்பம் ஆக்கி இருக்கிறார்!

 ''எல்லாரும் ஸ்டேட்விட்டு ஸ்டேட் பரபரப்பா ஓடிட்டு இருக்கிறப்ப, எப்படி இவ்வளவு ஹீரோயின்களைப் பிடிச்சீங்க?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''என் போட்டோஸ்ல அவங்க தங்களை சம்திங் ஸ்பெஷலா உணர்றாங்களோ என்னவோ?! ஆனா,  இந்த ஷூட்ல அவங்களோட வழக்க மான லுக் வேண்டாம்னு தீவிரமா இருந்தேன். பொதுவா, தங்களுக்குனு செட்டான விஷயங் கள்ல இருந்து ஹீரோயின்கள் வெளியே வர கொஞ்சம் தயங்குவாங்க. 'எனக்கு நெத்தி கொஞ்சம் அகலம். அதுக்கு இந்த ஹேர் ஸ்டைல் செட் ஆகுமா?’னு ஆரம்பிச்சு, சந்தேகம் கேட்டுட்டே இருந்தாங்க த்ரிஷா. ஆனா, ரிசல்ட் பார்த்துட்டு செம குஷி ஆகிட்டாங்க.

த்ரிஷா முதல் தீக்ஷா வரை...

'பாய்ஸ்’ சமயத்தில் இருந்தே ஜெனிலியா எனக்குப் பழக்கம். 'நான் மட்டும் இந்த காலண்டர்ல இல்லைன்னா, அப்புறம் உங்க கூடப் பேசவே மாட்டேன்’னு செல்லமா மிரட்டினாங்க மேடம். அப்புறம் மும்பைக்கே போய் அவங்களை ஷூட் பண்ணோம்! 'வெங்கட்.... நாளைக்கு ஷூட்டிங் பிரேக். ஷூட் வெச்சுக்கலாமா?’னு சிலர் கேட்பாங்க. பரபரனு செட் போட்டு, ஆர்ட்டிஸ்ட் வந்ததும் மேக்கப்புக்கு ஒரு மணி நேரம், ஹேர் ஸ்டை லுக்கு அரை மணி நேரம், ஷூட்டுக்கு ஒரு மணி நேரம்னு பரபரப்பா, அதே நேரம் அழகா ஷூட் நடக்கும்!''

த்ரிஷா முதல் தீக்ஷா வரை...

''ஜனவரி மாசத்துக்கு யார் போட்டோ வர்றதுனு இவங்களுக்குள் போட்டியே வந்திருக்குமே?''  

''வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்கு இவங் களுக்குள்ள பெரிய ஈகோ இருக்கும்னுதான் நினைக்கத் தோணும். ஆனா, கேர்ள்ஸ் எல்லாரும் ரொம்ப ஜாலி. ஷூட் பண்ண படங்களில் ஒரு போட்டோவை சமந்தா டிவிட்டர்ல போஸ்ட் பண்ணி இருக்காங்க. 'சூப்பர்’னு பாராட்டி வந்த மெசேஜ்களில் த்ரிஷாவுடையதும் ஒண்ணு. 'விண்ணைத் தாண்டி வருவாயா’ தெலுங்கு வெர்ஷனில் தன்னோட கேரக்டரில் நடிச்சதால் த்ரிஷாவுக்கு சமந்தான்னா ரொம்பப் பிடிக்கும். 'இந்த போட்டோ ஷூட்லயே நீதான் ரொம்ப அழகா இருக்கேனு த்ரிஷா என்கிட்ட சொன்னாங்க. தேங்க்ஸ் வெங்கட்’னு சமந்தா சந்தோஷப்பட்டாங்க!''  

த்ரிஷா முதல் தீக்ஷா வரை...
த்ரிஷா முதல் தீக்ஷா வரை...

''போட்டோகிராஃபியே போதும்னு முடிவு பண்ணிட்டீங்களா? சினிமா ஒளிப்பதிவு வாய்ப்பு உங்களுக்கு ரொம்பப் பக்கத்திலேயே இருக்கே?''

''இப்பவும் எப்பவும் எனக்கு போட்டோகிராஃபியே போதும்! இது பெரிய கடல். இதில் கத்துக்கவே இன்னும் எக்கச்சக்க விஷயங்கள் இருக்கு. உண்மையைச் சொல்ல ணும்னா, நாங்க இன்னும் சின்னச் சின்ன விஷயங்கள்தான் பண்ணிட்டு இருக்கோம். கலர், கான்செப்ட்னு புதுசா ஏகப்பட்ட விஷயங்கள் பண்ணணும். என் அப்ஸ்ட்ராக்ட் போட்டோகிராஃபி கண்காட்சியை அடுத்த வருஷம் வைக்கலாம்னு இருக்கேன். கேமராதான் என் க்ளோஸ் ஃப்ரெண்ட்!''