
“உன் மாமியார்கூட என்ன சண்டை?”
“மழைல குடைய எடுத்துட்டுப் போனதுக்கு, ‘ஏன் ஈரமாக்கிக் கொண்டு வர்ற?’னு கேட்கறாங்க.”
- வி.சாரதி டேச்சு


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“அரசியல்ல நீங்க அடைந்த லாப நஷ்டம் என்ன தலைவரே?”
“லாபத்தை ரெய்டு சொல்லும்! நஷ்டத்தை கோர்ட் சொல்லும்!”
- அம்பை தேவா

“நம்ம படம் ரிலீஸே ஆகலை. அதுக்குள்ள ‘கதை என்னோடது’னு யார்யா கோர்ட்ல கேஸ் போட்டது?”
“படத்தைப் பார்த்த சென்ஸார் போர்டு உறுப்பினர் சார்!”
- எஸ்.முகம்மது யூசுப்

"அந்த அம்பயரு மேட்ச் பிக்ஸிங்ல ஈடுபட்டிருக்கார்னு எப்படிச் சொல்றே..?"
"பேட்ஸ்மேன் அடிச்ச பாலை அவரே கேட்ச் பிடிச்சுட்டு, அவுட் குடுக்கறாரு..!"
- சி.சாமிநாதன்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism