
அழகழகான மாம்பழங்கள்...
ஆனாலும் ‘கெமிஸ்ட்ரி’
ஒர்க் அவுட் ஆகவில்லை
எனக்குள்..
காரணம்..ரசாயனக்கல்!
- பாபி


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நேரில் வந்த கடவுள்
வரம் கொடுக்கும் முன்
‘ஆதார் காட்டு’
என்றார்.
- கோவிந்த் பகவான்

உங்க டூத் பேஸ்ட்ல
உப்பு இருக்கா?
இப்படித் திடீர்ன்னு
பாத்ரூம்க்குள்ள வர்றியே,
உனக்கு ஏதாவது இருக்கா?
- கு.வைரச்சந்திரன்

சாயந்திரம் சரக்கடிக்கலாமா
என்று டைப் பண்ணி
கை தவறி,
ஃபேமிலி குரூப்பில்
போட்டான் !
- ரியாஸ்

வழியில் பயம்வருமோ?
மடியில் கனமிருக்கிறது-
லேப் டாப்
- தஞ்சை தாமு

மாசக் கடைசியில்
செலவுகள் நம்மை
Pay எனப் பயமுறுத்திவிடுகின்றன.
- ரா.அருண்பிரகாஷ்

அந்தக் காலத்தில்
மட்டும் முகநூல்
இருந்திருந்தால்..
மதுரையை எரித்ததை
‘லைவ்’ போட்டிருப்பாள்
கண்ணகி!
- பர்வீன் யூனுஸ்
எதைப்பற்றியும் என்ன வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுதுவதே கலாய் கவிதைகள். இதை அனுபவிக்கணும், தேவையில்லாம ஆராயக்கூடாது!
வாசகர்களே, உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டு கலாய் கவிதைகளை kalaikavidhaigal@vikatan.com-க்கு அனுப்புங்கள். பிரசுரமாகும் ஒவ்வொரு கவிதைக்கும் 500 ரூபாய் பரிசு!