
“தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய நதிநீரை மாநிலங்கள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்கிறீர்களே.. அதேபோல தொங்கும் சட்டசபையை சரி செய்ய எம்.எல்.ஏக்களைப் பங்கிட்டு கொள்ளக் கூடாதா?”
- ஏந்தல் இளங்கோ


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
“அண்டை மாநிலத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக்கு எங்கள் கட்சிக்கு பலம் உள்ளது. எனவே அங்குள்ள எம்.எல்.ஏக்களின் பற்றாக்குறையைப்போக்க எங்கள் கட்சியை எப்போதும் அணுகலாம் எனத் தெரிவித்துக்கொள்கிறேன்.”
-பழ.அசோக்குமார்

“சாமியார், போலீசை பார்த்தா ஏன் கண்ணை மூடிக்கறார்?”
“அது சூழ்நிலைதியானம்.”
- அம்பை தேவா

"நீ என்னை நாய்னு திட்டினதும் , உன்னையுயும் என்னையும் பார்த்து உன் நாய் குரைக்குதே ஏன்?!"
"அதை யாரோட கம்பேர் பண்ணினாலும், அது கடுபப்பாயிடும்!"
- தே.ராஜாசிங் ஜெயக்குமார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism