
``வதந்திகளைப் பரப்புவோர்க்கு ஒரு ஆண்டு சிறைன்னு தெரிந்தும் ஏன் வதந்தியைப் பரப்புன?’’
``ஒரு ஆண்டு சிறைன்னு சொன்னது வதந்தின்னு நினைச்சுட்டேன்யா!’’
- ஹெச்.உமர் பாரூக்


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
``மனிதச் சங்கிலி போராட்டம் பண்றப்பகூட தலைவரோட புத்தி மாறலை!’’
``என்ன செய்தாரு?’’
``அதையும் அறுத்துட்டு ஓடறாரு!’’
- அஜித்

``தலைவரே நீங்க போட்டிருக்கிற மோதிரத்தில உள்ள ராசிக்கல்லு வித்தியாசமா இருக்கே...அதை எங்கே வாங்கினீங்க?’’
``என்னோட முதல் பொதுக்கூட்ட மேடையில வந்து விழுந்ததுதான்...’’
- பழ.அசோக்குமார்

``உங்க பையன் கல்யாணத்துக்கு பொண்ணு வீட்லே என்ன போட்டாங்க?’’
``சண்டை’’
- விநா
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism