Published:Updated:

கடலளவு காமெடி... கடுகளவு காதல்!

ம.கா.செந்தில்குமார்

கடலளவு காமெடி... கடுகளவு காதல்!

ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##

''ரஜினி, கமல்ல தொடங்கி இங்க இருக்கிற ஹீரோக்கள் மொத்தமே 20 பேர்தான். ஆனா, இயக்குநர்கள் 200 பேர் வரை இருக்கோம். இந்த விகிதாசார வித்தியாசம்தான் தமிழ் சினிமாவின் பெரிய  வில்லன். இந்த 20 ஸ்டார்களால் எங்க எல்லாருக்கும் கால்ஷீட் கொடுக்க முடியுமா? அவங்களோட கமிட்மென்ட்களை முடிச்சிட்டு வருவாங்கனு காத்திருந்தா, நாம அவுட் ஆஃப் போகஸ்ல போயிடுவோம். புதுமுகங்களை வெச்சு கதை சொன்னா, 'ஃபேஸ் வேல்யூ இல்லையே’னு தயாரிப்பாளர்கள் தயங்குறாங்க. அதான், நண்பர்கள் அம்பேத்குமார்,  ரஞ்சீவ் மேனனோட சேர்ந்து நானே தயாரிப்பாளராவும் களம் இறங்கிட்டேன். படத்துக்கு 'மனம் கொத்திப் பறவை’னு பேர். தலைப்பு தந்த விகடனுக்கு நன்றி!'' - நிதானமாகப் பேசுகிறார் தயாரிப்பாளர் ப்ளஸ் இயக்குநர் எழில். விஜய், அஜீத் என மாஸ் ஹீரோக்களுடன் பணியாற்றியவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயன், சூரி, சிங்கம்புலி எனக் கலகல டீமுடன் 'மனம் கொத்திப் பறவை’யாக வருகிறார்.

கடலளவு காமெடி... கடுகளவு காதல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சின்னத்திரை சிவகார்த்திகேயன் சினிமாவுக்கு செட் ஆகிட்டாரா?''

''அவரை மூணு வருஷத்துக்கு முன்னாடி ஒரு ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்ல பார்த்தேன். யாரையும் புண்படுத்தாமல் கலாய்க் கும் அவரோட காமெடியை ரசிச்சேன். காமெடிக் கதைக்கு அவர்தான் நல்ல சாய்ஸா தெரிஞ்சார். அதனால, அவரையே புக் பண்ணிட்டேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி மீசை இல்லாம ஆபீஸுக்கு வந்தார் சிவா. 'சார் என்ன  மீசையை எடுத்துட்டீங்க?’னு என் அசிஸ் டென்ட் பதறிட்டான். 'முக்கியமான ஷோ. மீசை எடுக்க வேண்டியதா போச்சு.ஷூட்டிங் தொடங்குறதுக்குள்ள உரம் போட்டாவது வளர்த்துடுறேன்’னு அவர் சொன்னதைக் கேட்டுட்டு சிரிக்காம இருக்க முடியலை. சிவா சினிமாவுக்கு அழகா செட் ஆகிட்டார்!''

கடலளவு காமெடி... கடுகளவு காதல்!

''கலர்ஃபுல்லா இருக்காங்களே... எங்க பிடிச்சீங்க ஹீரோயினை?''

''இவங்க கிடைக்கலைன்னா நான் மாடல் கோ-ஆர்டினேட்டர் ஆகியிருப்பேன். என் லேப்டாப்ல அவ்வளவு அழகுப் பொண்ணுங்க இருக்காங்க. பெரிய தேட லுக்குப் பின்னாடிதான் 'ஆத்மியா’வைக் கண்டுபிடிச்சேன். கேரளப் பொண்ணு.  கேமராவைக் கையில் எடுத்தாலே, அவங்க முகத்துல தானா ஒரு

கடலளவு காமெடி... கடுகளவு காதல்!

வெட்கம் வந்து உட்கார்ந்துக்கும். ஆனா, ஷாட்னு வந்துட்டா பவர் பெர்ஃபார்மன்ஸ்!''

''பாட்டும் காமெடியும் உங்க ஸ்பெஷல். இந்தப் படத்துல அது எந்த அளவுக்கு வொர்க்-அவுட் ஆகியிருக்கு?

'' 'கடலளவு காமெடி.. கடுகளவுக் காதல்’. இதுதான் 'மனம் கொத்திப் பறவை’யின் ஒன் லைன். இளவரசு, சூரி, கி«ஷார், சிங்கம்புலி, வெண்ணிற ஆடை மூர்த்தி,  ரவிமரியா, நரேன்னு பெரிய காமெடி டீம். ஸ்பாட்ல மொத்த டீமே ஒண்ணுசேர்ந்து டயலாக், மாடுலேஷனை மெருகேத்துறாங்க. நானே  'நீங்களே பேசி ஒரு முடிவுக்கு வாங்க’னு அசிஸ்டென்ட் டைரக்டர் மாதிரி ஓரமா ஒதுங்கிடுறேன். அப்படி இருக்கு நெலமை. யுகபாரதியோட சேர்ந்து தன் பெஸ்ட் மியூஸிக்கைக் கொடுத்திருக்கார் இமான். இந்த ஆல்பம் தான் 2012-ல் கிராமம், நகரம்னு எல்லா ஏரியாலயும் பட்டையைக் கிளப்பப்போகுது!''

கடலளவு காமெடி... கடுகளவு காதல்!
கடலளவு காமெடி... கடுகளவு காதல்!

''இவ்வளவு விஷயங்களையும் கோக்கும் கதை என்ன?''

''என் சொந்த ஊரான நாகப்பட்டினம் மாவட்டம், கயத்தூர்தான் கதைக்களம். என் நண்பனின் ஸ்கூலில்தான் ஷூட்டிங். என் ஊரே இந்தப் படத்துக்காக உழைக்குது. ஒரு ஆரம்பப் பள்ளியைச் சுற்றி நடக்கும் கதை. இளவரசு, ஒரு பில்டிங் கான்டிராக்டர். அவருடைய  பையன் சிவகார்த்திகேயன். அப்பாவுக்குத் தெரியாம சிமென்டைத் திருடி விற்கும் ஜாலி கேரக்டர். ஒரு ஸ்கூல் கன்ஸ்ட்ரக்ஷன் வேலைக்குப் போவார் சிவா. ஆத்மியாதான் அந்த ஸ்கூல் கரஸ்பாண்டென்ட். காதல், மோதல், காமெடி தான் கதை. சிரிக்க சிரிக்கவைக்கிற சிம்பிள் லவ் ஸ்டோரி!''